ஒக்காட்ஸ் கடல் பெருங்கடலின் எல்லையாக து வடமேற்குப் பசிபிக் அமைந்துள்ள ஒக்காட்ஸ் கடல் (okhotsk sea) ஆசியா வின் கிழக்குக் கடற்பகுதியால் சூழப்பட்டுள்ளது. க்கடலின் கிழக்கில் கம்ச்சட்கா முந்நீரகமும் குரில் தீவுகளும், தெற்கில் ஹொக்கைடோவும், தென்மேற் கில் சாக்காலின் தீவுகளும் அமைந்துள்ளன. ஜப்பான், சோவியத் நாட்டுக் கடற்பகுதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இக்கடலின் பரப்பளவு ஏறத்தாழ 15 லட்சம் ச.கி.மீ. ஆகும். இக்கடலின் தோராய ஆழம் 850 மீ. ஆகும். ஏறத்தாழ 8,400 மீ. பெரும் அளவு ஆழத்தைக் கொண்டுள்ள இக்கட லின் கொள்ளளவு 1,178,000 ச.கி.மீ. ஆகும். இக்கடலின் கரைப்பகுதி பாறைகளைக் கொண்டு காணப்படுகிறது. ஆமுர், உடா. ஒக்கோட, கிசிங்கா, பென்சினா போன்ற ஆறுகள் இக்கடலில் கலக்கின் றன. சாக்காலின், ஹொக்கைடோ தீவுகளுக்கு வடக்கில் அமைந்துள்ள கரைப்பகுதி தாழ்ந்து காணப் படுகிறது. அனிவா டெர்பெனியா வளைகுடாக்கள் சாக்கலின் சுடற்பகுதிக்குத் தென்கிழக்கில் அமைந் துள்ளன. நடுக்கடலில் அமைந்திருக்கும் அயான் தீவைத் தவிர சான்தார், சவ்யாலோவி, ஸ்பாபார் யெவ், யாம் உட்பட்ட எல்லாத் தீவுகளும் கரைக் கருகிலேயே அமைந்துள்ளன. தற்போது காணப்படும் ஒக்காட்ஸ் கடல் படுகை குவார்ட்டர்னரி காலத்திலேயே உருவானதாகும். கடல் படுகையில் காணப்படும் குழிவான பகுதி பனிக்கட்டிப் படிவுகளில் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு புவியியல் மாற்றங்களால் உருவாயிருக்கலாம் என்று கருதப்படு கிறது. கடலடித் தளம் வடக்கிலிருந்து தெற்கு, தென்மேற்கு நோக்கிய சரிவைக் கொண்டுள்ளது. இக்கடலில் வடக்கு, வடமேற்குப் பகுதிகள் 217 மீ. ஆழம் வரையுள்ள சரிவையும், எஞ்சியுள்ள பகுதிகள் 217-1700 மீ. ஆழம் வரையுள்ள சரிவையும் கொண் டுள்ளன. இக்கடலின் பெரும அளவு ஆழமாகிய 2,700 மீ. குரில் தீவுகளுக்குத் தென்மேற்குப் பகுதி யில் காணப்படுகிறது. ஆழ் கடலடிப்படுகையில் களி மண், வண்டல் உள்ளடக்கிய மண்வகைகள் காணப் படுகின்றன. ஆனால் கரைக்கருகில் மெல்லிய வண் டல் மூடிய மண்ணும், மட்டி ஓடுகளுடன் கலந்த கூழாங்கற்களும் உள்ளன. . ஒக்காட்ஸ் கடலின் வடகிழக்கு, வடக்கு, மேற் குப் பகுதிகளில் குளிர்காலத்தில் ஆசியா கண்டத்தின் தாக்குதலால் கடும் வானிலை நிலவுகிறது. அக்டோ பர் ஏப்ரல் மாதங்களில் கடும் குளிர் காற்று வீசுவ தோடு மட்டுமன்றிப் பனியால் சூழப்பட்ட கண்டங் களில் காணப்படும் காலநிலையும் இப்பகுதியில் நிலவு கிறது. ஒக்காட்ஸ் கடற்பகுதி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மிகு குளிராகவும், ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இக் கடலின் வட கிழக்குப் பகுதியில் பிப்ரவரி மாத வெப்பநிலை - 20°C ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் சராசரி 12°C ஆகவும் இருக்கும். இக்கடலின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை, பிப்ரவரி மாதத்தில் ஏறத்தாழ 24°C ஆகவும், ஆசுஸ்டு மாதத்தில் 14°C ஆகவும் இருக்கும். தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளில் பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை 7°C ஆகவும், ஆகஸ்டு மாதத்தில் 18°C ஆகவும் இருக்கும். ஆண்டு மழை அளவு வடக்கில் 40 செ.மீ ஆகவும், மேற்கில் 70 செ.மீ. ஆகவும், தெற்கு தென் கிழக்குப் பகுதிகளில் ஏறத்தாழ 100 செ.மீ ஆகவும் இருக்கும். ஒக்காட்ஸ் கடல் நீர் எண்ணற்ற ஆறுகள் கலப் பதால் உண்டாகும் படிவுகளையும், குரில், லாபெ ரோஸ், நேவல் நீர்ச்சந்திகள் கலந்த பசுபிக் கடல் நீரையும் கொண்டுள்ளது. கோடைக் காலத்தில் இக்கடல் நீரில் 33-55 மீ ஆழம் வரையுள்ள பகுதி வெதுவெதுப்பாக இருக்கும். இக்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை8°-12°C ஆகவும், உப்புத்தன்மை 33.75% ஆகவும் இருக்கும்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/541
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை