பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 ஒட்டகம்‌

518 ஒட்டகம் வலஞ்சுழியானது. இக்கடலில் நீரோட்டம் ஐப்பான் கடலிலிருந்து பாயும் நீரோட்டம்இக்கடலின் தென்மேற்குப் பகுதியில் வெதுவெதுப்பை உண்டாக்கு கிறது. அன்றியும் பசுபிக் பெருங்கடலிலிருந்து வரும் நீரும் வெதுவெதுப்புக்குக் காரணமாகும். செலிகோவ் (zhelikhou) வளைகுடாவில் காணப்படும் ஓதம் 14மீ. ஆகவும், சாக்காலின் தென்கிழக்குப் பகுதியில் ஓதம் 9 மீ. ஆகவும் அமையும். அக்டோபர் -மார்ச் வரை உறைபனி மூடியிருக்கும். உறைபனி கரையோ ரங்களிலும் நடுக்கடலிலும் மிதந்தவாறு தோன்றும். பல்வேறு ஆறு, நீர்ச்சந்தி, பெருங்கடல்களுடன் இக்கடல் கலப்பதால் கடல் உயிரினங்கள் ங்கு நன்கு வாழ்வதற்கேற்ற சூழல் உருவாகிறது. ஆல்கா கடற்பாசி போன்ற தாவர வகை, மட்டி, நண்டு, பாலிப்பு, கடல் முள்ளெலி, சால்மன், ஹெர்ரிங், காட், கேப்லின், பொல்லாக் போன்ற மீன்வகை கூனிறால் வகை ஆகியவை காணப்படுகின்றன. வை மட்டுமல்லாமல் திமிங்கிலம் கடல் சிங்கம் போன்ற பாலூட்டி வகைகளும் காணப்படுகின்றன. 1975 இல் ஒக்காட்ஸ் கடல் மீன்பிடிப்பின் மொத்த அளவு 1,500, 000 டன்னாகும். சோவியத் ஒன்றியக் குடியரசின் தொலைக் கிழக்கில் அமைந்துள்ள துறைமுகங்களை ஒக்காட்ஸ் கடல் வழியாகச் சென்றடையலாம். கரைகளிலுள்ள துறைமுகங்களில் ஒக்காட்ஸ் நகயேவோ என்பவை முக்கியமானவை. சாக்காலின் தீவிலுள்ள செவரோ குரில்ஸ்க் துறைமுகமும் முக்கியமானது. குளிர்காலத் அடர்ந்த தில் காணப்படும் மூடுபனியும், கடற் பயணத்தில் தொல்லை தரும். மேலும் வலிய நீரோட் டமும், மூழ்கியுள்ள பாறைகளும் பயணத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடியலை. சோவியத் தொலைக் கிழக்கு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒக்காட்ஸ் கடல் பெரும்பங்கு பெறுகிறது. ஒட்டகம் ம. அ.மோகன் இது பெரிய, வலிமையான உடலுடைய பாலைவன வாழ் விலங்கு ஆகும். பொதுவாக இதனைப் பாலை வனக் கப்பல் என்று குறிப்பிடுகின்றனர். இவை வன விலங்குகளாகவும் வளர்ப்பு விலங்குகளாகவும் வாழ் கின்றன. ஒட்டகங்களின் தோள்மட்ட - உயரம் 1.8- 2.1 மீ. வரையாகும். எடை 450-725 கி. கி. வரை இருக்கும். ஒட்டகங்களின் உடலில் காணப்படும் பழுப்பு அல்லது சாம்பல் நிற மயிர்கள் இளவேனிற் காலத்தில் உதிர்ந்து முன்பனிக்காலத்தில் மீண்டும் வளர்கின்றன.கூம்பு வடிவத் தலையும், பிளவுற்ற மேலுதடும், நீண்ட கழுத்தும் கொண்ட ஒட்டகத் . மாடுகளில் உள்ளதைப் போன்று துக்கு ஆடு உடலின் அடிப்பக்கத்தையும் தொடைப் பகுதியையும் இணைக்கும் தோல் நீட்சி இல்லை. ஒட்டகங்கள் அசைபோடும் விலங்குகள் ஆகும். இவற்றில் பித்த நீர்ப்பை (gall bladder) இல்லை. மட்டுமே நீள் பாலூட்டிகளில் ஒட்டகங்கள் வட்ட இரத்தச் சிவப்பணுக்களைப் பெற்றுள்ளன. ஆண், பெண் ஆகிய இருபால் ஒட்டகங்களிலும் தலைக்குப் பின்புறம் ஓரிணைத் தோல் சுரப்பிகள் (பாலினச்சுரப்பிகள்) உள்ளன. இவற்றின் முதுகி லுள்ள திமிலில் உணவு, கொழுப்புப் பொருளாகச் சேர்த்து வைக்கப்படுகிறது. உணவு திமிலில் உள்ள கொழுப்பு மாற்றங்களுக்குள்ளாக ஒட்டகத்திற்கு போது கிடைக்காத வளர்சிதை உயிரியக்க சமயங் ஆற்றல் கிடைக்கிறது. இதன் கருவளர் காலம் 11 மாதங்கள். இது ஒரு குட்டியே ஈனும், சில களில் இரண்டு குட்டிகளும் பிறக்கின்றன. குட்டிகள் 5 ஆண்டுகளில் 'இன முதிர்ச்சியடைகின்றன. பொது வாக ஒட்டகங்கள் 17 - 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பாலைவனங்களில் நிலவும் வேறுபட்ட வெப்ப நிலைகளைத் தாங்குவதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. குறைந்த அளவு உணவையும் நீரை யும் உட்கொண்டு வறண்ட பகுதிகளில் மிகுதொலைவு பயணம் செய்யும். கண்களில் மயிர் அடர்ந்த இரண்டு இமைகளும் மயிரற்ற மூன்றாம் இமையும் உள்ளன. இமைகளும் அடர்த்தியான புருவங்களும் காற்று வீசும்போது மணல் கண்களில் படாமல் தடுக்கின்றன. காதுகளில் உள்ள அடர்ந்த மயிரும், மூக்குத் துளைகளை மூடிக்கொள்வதற்கேற்ற தசை யமைப்பும் காதுகளிலும் மூக்கிலும் மணல் புகு வலிமையான வதைத்தடுக்கின்றன. நீண்ட மணல் கால் கள் நீண்டதொலைவு விரைந்து நடக்கவும் சுமை தூக்கவும் ஏற்றவாறு வலிமையான தசைகளுடன் உள்ளன. ஒட்டகங்களால் 450 கி.கி. எடையுள்ள சுமையைத் தூக்கவும், ஒரு நாளில் 40 கி.மீ. வரை பயணம் செய்யவும் முடியும். ஒவ்வொரு காலிலும் குளம்புகளுடன் கூடிய இரண்டு விரல்கள் உள்ளன. இவ்விரு விரல்களையும் இணைக்கும் திண்டுப் பகுதி கள் மணற்பாங்கான இடங்களில் நடப்பதற்குப் பெரிதும் உதவுகின்றன. முழங்கால்களிலுள்ள தடித்த தோல் திண்டுகள் இவை மண்டியிடும்போது ஊன்றிக் கொள்வதற்கேற்றவாறு அமைந்துள்ளன. பொதுவாக ஒட்டகங்கள் பேரீச்சம்பழம், ஓட்ஸ், கோதுமை போன்றவற்றை உண்ணும்: பாலைவனங் களிலுள்ள முள்கள் நிறைந்த கள்ளிச் செடிகளை உண்ணும்போது அம்முள்களால் காயம் ஏற்படாத வாறு வாயின் உட்புறத்தோல் தடிப்பாக உள்ளது. ஒட்டகங்களால் மாதக் கணக்கில் நீரில்லாமல் வாழ முடியும். இவை வயிற்றில் நீரைத்தேக்கிவைக்கும்