பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 ஒட்டியல்பு

520 ஒட்டியல்பு 100 கிராம் புரதச்சத்து வளர் சிதைமாற்றமடையும் போது 41 கிராம் நீரும், 100 கிராம் கொழுப்புப் பொருள் சிதைமாற்றமடையும்போது 170 கிராம் நீரும் கிடைக்கும். ஆனால் கொழுப்புப் பொருளை வளர் சிதைமாற்றம் செய்வதால் கிடைக்கும் நீரை விட மிகுதியான நீர் அந்தக் கொழுப்புப் பொருளைச் சிதைவுறச் செய்யத் தேவையான ஆக்சிஜனை உள்ளிழுத்துப் பின்பு மூச்சுவிடும்போது ஆவியாக வெளியேற்றுகிறது. எனவே இக்கருத்து ஏற்புடைய தன்று. வட் இன்று உலகில் ஒற்றைத் திமில் உள்ள அராபிய ஒட்டகம் (Camelus dromed arius) இரட்டைத் திமில் உள்ள பாக்டிரிய ஒட்டகம் (Camelus ferus) ஆகிய இரு வகை ஒட்டகங்கள் உள்ளன. ஒற்றைத் திமில் ஒட்டகம் டிரொமிடரி ( Dromedary) என்று குறிப்பிடப் படுகிறது. இன்று உலகில் காணப்படும் ஏறக்குறைய மூன்று மில்லியன் அராபிய ஒட்டகங்கள் ஆப்பிரிக்க, அரேபியப் பகுதிகளில் வளர்ப்பு விலங்கு களாக உள்ளன. இந்தப் பகுதிகளிலிருந்துதான் இந்தியா, வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின், கிழக்கு ஆப்பிரிக்கா, இத்தாலி ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பொதுவாக டிரொ மிடரிகளில், கனமான உடலும், மெதுவாக நடக்கும் இயல்பும் கொண்ட சுமைதூக்கும் டிரொமிடரி வகை நீண்ட கால்களைக் கொண்ட, வேகமாக ஓடும் இயல்புடைய டிரொமிடரி வகை என்று இரண்டு வகைகள் உள்ளன. வட ஆப்பிரிக்காவில் ஏறிச் செல்வதற்குப் பயன்படும் மெஹரி (Mehari) எனப்படும் உயர்ந்த வகை டிரொமிடரிகள் உள்ளன. இரட்டைத் திமில் ஒட்டகங்கள் முன்பு மத்திய ஆசியாவில் பரவவாகக் காணப்பட்டன. தற்போது இவற்றின் வளரிடங்கள் பெரிதும் மாறிவிட்டதால் இந்த இனம் வெகுவாகக் குறைந்து அற்றுப்போய் விடும் நிலையிலுள்ளது. இரட்டைத் திமில் ஒட்டக வகையில் கேமெலஸ் ஃபெரஸ் ஃபெரஸ் (Camelus erus berus), கேமெலஸ் ஃபெரஸ் பாக்டிரியானஸ் (Ca- melus ferus bactrianus) என்னும் இரு வகை உள்ளன. இரு ஒட்டக வகைகளும் ஒன்றாக வாழும் பகுதி களில் கலப்பினச் சேர்க்கைகள் செய்யப்படுகின்றன இவற்றுக்குப் பிறக்கும் குட்டிகள் உருவில் பெரியவை யாகவும் வலிமை மிக்கவையாகவும் இருந்தாலும் பொதுவாக மலடாக உள்ளன அல்லது வலிமையற்ற சந்ததியை உருவாக்குகின்றன. ஆகையால் இவ்விரு சிறப்பினங்களும் ஒன்றுடன் ஒன்றாக அல்லது கலப் பினச் சிறப்பினங்களுடன் இனச்சேர்க்கை செய்யப் படுகின்றன; இரு கலப்பினங்களுக்கிடையே இனச் சேர்க்கை செய்யப்படுவதில்லை. சலப்பினங்கள் பெரும்பாலும் இரு திமில்களைக் கொண்டிருக்கும். ஒட்டகங்கள் உணவு. வேளாண்மை, போக்கு வரத்து ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. ஒட்டகப் பாலில் 6.4% கொழுப்புச் சத்து, 4.5% லேக்டோஸ், 6.3% நைட்ரஜபொருளும் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. ஒட்டகத் தோல் கூடாரத் துணிகளும் உடைகளும் செய்யப் பயன்படுகிறது. காய்ந்த ஒட்டக எலும்புகளைத் தந்தம் போல் செதுக்கி நகைகளும் பாத்திரங்களும் செய்கின்றனர்; இதன் சாணம் எரி பொருளாகப் பயன்படுகிறது. வட அமெரிக்கப் பகுதிகளில் கிடைக்கும் தொல் லுயிரிச்சின்னங்கள், ஒட்டகங்கள் வட அமெரிக்காவில் தோன்றின என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. அவை பெருகியவுடன் தென் அமெரிக்காவுக்கும் ஆசி யாவுக்கும் பரவின. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டு களுக்கு முன்புவரை ஆசியாவில் இரு திமில்களை யுடைய பாக்டீரிய ஒட்டக வகை மட்டுமே இருந்தது; இவற்றிலிருந்து ஒற்றைத் திமில் ஒட்டகம் எப்போது தோன்றியதென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஒட்டகங்கள், பாலூட்டிகள் வகுப்பில் இரட்டைக் குளம்பி வரிசையில் (Artiodactyla), கேமெலிடே (camelidae) குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன. ஒட்டியல்பு ஜெயக்கொடி கௌதமன் இது திண்மங்கள் அல்லது நீர்மங்களை ஒன்றோ டொன்று ஒட்டிக் கொள்ளுமாறு செய்யும் இயல் பாகும். இந்த ஒட்டும் செயலுக்கு ஒட்டியல்பு (adhe- sion) என்று பெயர். இதற்குக் காரணமாக அமை வது மூலக்கூறுகளின் டை விசைகளாகும். இவை பெரும்பாலும் வான் டெர் வால் (van der wall) வகை விசைகளாம். ஒட்டியல்பு என்பது பிணைவு (cohesion) என்ப திலிருந்து மாறுபட்டதாகும். பிணைவு என்பது ஒரே சேர்க்கையுடைய பொருள்களின் பகுதிகள் ஒன்றாகச் சேர்ந்திருக்க முனையும் பண்பாகும். இந்தப் பிணை வின் காரணமாகத்தான் திண்மங்களும் நீர்மங்களும் ஒரு குறிப்பிட்ட பருமனில் திணிக்கப்பட்டுள்ளன. காட்டாக, நீர் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று பிணைந்து ஒரு குறிப்பிட்ட பருமனுடைய நீராக உருவாவதைக் கூறலாம். அவ்வாறே, ஓர் இரும்புக் கம்பியில் இரும்பு அணுக்களெல்லாம் பிணைவுக்கு ஆட்பட்டுள்ளன. இவ்வாறன்றி இருவேறு பொருள் கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது ஒட்டியல் பாகும். காட்டாக, மரத்தின் மீது பூசப்பெற்ற வண்ணம் ஒட்டியிருப்பது ஒட்டியல்பாம். மரம் ஒரு வகைப் பொருள்; வண்ணம் பிறிதொரு பொருள் என்பது அறியத்தக்கது. ஒட்டியல்பும் பிணைவும் வெப்பநிலையையும், ஒட்டியிருக்கும் பரப்புகளின்