பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 ஒட்டுண்ணியப்‌ பால்மாற்றம்‌

524 ஒட்டுண்ணியப் பால்மாற்றம் அவை பட்டாலும், இவ்வுயிரிகளை அறவே ஒழிப்பதில் இன்னும் வெற்றி கிட்டவில்லை. ஒம்புயிரிகளே செயல்பட்டாலும், இவற்றுக்கெதிராகச் ஓட்டுண்ணிகளைத் தாங்கவல்ல பொறுமையைப் பெற்றுள்ளனவேயன்றி ஒட்டுண்ணிகளை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் தோல்வியே அடைகின்றன, இதன் மூலம் ஒட்டுண்ணித்துவம்,ஓர் இயற்கை உறவு முறை என்பதை அறியலாம். க ஆயினும் மனிதன் அவ்வுறவு முறையையும் தனக்கு ஏற்புடையதாகப் பயன்படுத்தியுள்ளான். மனித உணவு உற்பத்தியில் பெருமளவு பூச்சிகளால் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக் கொல்லிகளைமிகுதி யாகப் பயன்படுத்தியுங்கூட அத்தீங்குயிரிகளை அறவே இந்நிலையில் ஒழிக்க வகையில்லை. அறிவியல், ஒட்டுண்ணித்துவ முறைப்படி அவற்றை ஒழிப்பதில் வெற்றி கண்டுள்ளது. மேலும் இயற்கையில் ஒரு வாழிடத்தில் பலவுயிரி களும் சேர்ந்து வாழும்போது ஒட்டுண்ணிகள் அங்கு ஏதாவது ஓர் இனத்தைத் தாக்கக்கூடும். அவ்வினமே மனிதனுக்குப் பயன்தரும் னமானால் அது மேலும் பொருளாதாரத்திற்குக் கேடாகிறது. எடுத்துக் காட்டாக மீன்கள் ஒட்டுண்ணிகளால் தாக்கப்படும் போது அவற்றின் இனப்பெருக்கம் குன்றும்: அவ் வகை மீன்களையும், சில விலங்குயிரிகளையும் பாது காப்பான, ஒட்டுண்ணிகள் அண்டாத சூழ்நிலையில் வளர்ப்பதால் அவற்றின் உற்பத்தியையும் பெருக்க முடியும். க. இராமலிங்கம் ஒட்டுண்ணியப் பால்மாற்றம் ஓட்டுண்ணிகளின் தாக்குதலால் அவை சார்ந்துள்ள ஓம்புயிரி (host) விலங்குகளின் இனச்செல் உறுப்புகள் (gonads) தாக்கமடைந்து அதன் காரணமாக அவ் வோம்புயிரி விலங்குகள் மலட்டுயிரிகளாக மாறு வதோ பால்மாற்றம் அடைவதோ ஒட்டுண்ணியப் பால் மாற்றம் (parasitic castration ) எனப்படும். இதுநேரிடைப் பால்மாற்றம் மறைமுகப் பால்மாற்றம் என இருவகைப்படும். நேரிடைப் பால்மாற்றத்தில் ஒட்டுண்ணி, தான் சர்ந்து வாழும் ஓம்புயிரின் இன உறுப்பை ஊடுருவிச் சென்று அதைச் சிறுகச் சிறுக அழித்து விடுகிறது. இதனால் இனச்செல் உறுப்பு விந்து அணுக்களையோ சினையணுக்களையோ உருவாக்குவதில்லை. தட்டைப் புழுக்களின் இளவுயிரி ரெடியாவின் தாக்குதலால் சில நத்தைகள் மலட்டுத் தன்மை அடைவதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். போர்ட்டுனஸ் என்ற நண்டின் இனச்செல் உறுப்பை அதில் ஒட்டுண் ணியாக வாழும் டைஸ்டோமம் என்ற புழு அழித்து + விடுவதற்கும், சில மீன் இனங்களின் இனச்செல் உறுப்பைச் சில ஒட்டுண்ணி நாடாப்புழுக்கள் அழித்து விடுவதற்கும், மீனின் நட்சத்திர இனச்செல் உறுப்பை முன்னுயிரி (protozoan) ஒட்டுண்ணிகள் அழித்துவிடுவதற்கும் இவ்வகைப் பால்மாற்றமே காரணமாகும். மறைமுகப் பால்மாற்றத்தில் ஒட்டுண்ணி, தான் சார்ந்து வாழும் ஓம்புயிரி விலங்கின் இனச்செல் உறுப்பை நேரிடையாகத் தாக்காமல் பொதுப்படை. யாக அவ்விலங்கின் உடலில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்த, அதன் விளைவாக இனச்செல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுப் பால்மாற்றம் ஏற்படுகிறது. சாக் கடல் குலைனா என்னும் ஒட்டுண்ணி ஒருவகைக் நண்டைத் தாக்குவதால் அந்நண்டில் பால்மாற்றம் ஏற்படுவது இவ்வகையைச் சேர்ந்தது. பெல்ட்டோ காஸ்ட்டர் என்ற கடின ஓட்டுடலியின் (crustacean) பெண் இனச்செல் உறுப்பு லிரியாப்ஸிஸ் என்ற ஓட்டுட லியின் தாக்குதலால் அழிவதும், துறவி நண்டின் (hermitcrab) இனச்செல் உறுப்புகள் பகூரிதீரியம் என்ற ஓட்டுடலியின் தாக்குதலால் அழிவதும் இவ்வகைப் பால்மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். மறைமுகப் பால்மாற்றம் ஏற்படும் விதம் தெளி வாக்கப்படவில்லை. பொதுவாக இவ்வகைப் பால் மாற்றத்திற்கு மூன்றுவகை அடிப்படைக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஓம்புயிரி விலங்கின் இரத்தத் தையும் ஊட்டப் பொருள்களையும் ஒட்டுண்ணி உறிஞ்சிவிடுவதால், இனச்செல் உறுப்புகள் அவற்றின் இயல்பான செயல்களைச் செய்வதற்குத் தேவை யான அளவு ஊட்டப் பொருள்கள் ஓம்புயிரிகளின் இனச்செல் உறுப்புகளில் இருப்பதில்லை. அதனால் அவற்றின் இனச்செல்லாக்கச் செயல்கள் முறையாக சிலர் நடைபெறுவதில்லை எனச் கருதுகின்றனர். இரத்தப்புழுத் தாக்குதலால் ஒரு வகை நத்தையில், நாட்பட்ட பட்டினியை ஒத்த ஒருநிலை உருவாகி, அதன் காரணமாக நத்தையின் இரத்தத்தில் புர தங்கள் அமினோ அமிலங்கள் ஆகிய நைட்ரஜன் சார்ந்த ஊட்டப் பொருள்கள் குறைவதாகவும், நைட்ரஜன் கழிவு மற்றும் அதற்குத் தேவையான நொதிகள் பெருகுவதாகவும், மேலும் திசுக்களிலுள்ள கிளைகோஜன், இரத்தத்திலுள்ள குளுகோஸ் போன்ற ஆற்றல்மிகு பொருள்கள் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் தாக்கத்தால் இனச்செல் உறுப்பு சரிவரச் செயல்பட முடியாமல் போகலாம் என்று கருதுவோரும் உண்டு. ஒட்டுண்ணி ஒரு வகை நச்சுப் பொருளை உரு வாக்கி அதைத் தான் சார்ந்து வாழும் ஓம்புயிரி விலங்கின் உடலில் செலுத்துவதால் மொத்தத்தில் அந்த ஓம்புயிரி விலங்கு வீரியமிழந்து, அதனால் இனப்பெருக்கம் தாக்கமடைகிறது என்பது இரண் டாம் வகைக்கான காரணமாகக் கூறப்படுகிறது.