ஒட்டு மீன் 525
பால் விலங்குகளின் இனப்பெருக்கச் செயல்கள் பொது வாக ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் தாக்கப்படுவதால் பால் மாற்றம் ஏற்படுகிறது என்பது காரணமாகக் கூறப் படுகிறது. முன்னர்க் கூறப்பட்ட சாக்குலினா -நண்டு ஒட்டுண்ணி - ஓம்புயிரி உறவினால் நண்டு மாற்றம் அடைதல் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது. சாக்குலைனா தன் இளவுயிரிப் பருவத்தி லேயே நண்டை அடைந்து அதனுள் செல்லுகிறது. அப்போது இளநண்டின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். ஒட்டுண்ணி புடைப்பாக வயிற்றுப் பகுதி யின் கீழ்ப்பக்கத்தில் உடலிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. இப்புடைப்பு பலமுறை மீண்டும் மீண்டும் பிரிந்து செல்லும் வேர்போன்ற ஓர் அமைப் பின் வழியாக நண்டின் இரத்தக் குழிகள் உறுப்பு டன் தொடர்பு கொள்கிறது. இந்த வேர் அமைப்பு களின் மூலம் சாக்குலைனா, நண்டின் இரத்தத்தையும் ஊட்டப்பொருள்களையும் உறிஞ்சுகிறது. னால் படம் தாக்கப்பட்ட நண்டு ஆண் நண்டாக இருந்தால் அதன் ஒடுங்கிய வயிற்றுப்பகுதி விரைவில் அகன்று பெண் நண்டின் வயிற்றுப் பகுதி போல மாறுகிறது. ஆண் நண்டின் இனப்பண்புகள் ஆண்பாலினச் சுரப்பி யால் (androgenic gland) சுரக்கப்படும் ஹார்மோ கட்டுப்படுத்தப்படுகின்றன. சாக்குலைனா தொடர்ந்து நண்டின் இரத்தத்தை உறிஞ்சுவதால் ச்சுரப்பி தன் எல்லை மீறிச் செயல்பட்டு, விரைவில் பழுதடைந்து அதனால் ஹார்மோனைச் சுரக்க இயலாத நிலை அடைகிறது. விலங்குகளில் பொது வாக இருபால் இனப்பண்பு உருவாக்குந் திறன் இருப்பதாலும், ஆண் இன ஹார்மோன் இல்லாத நிலையில் பெண் வளர்ச்சியடைவ உறுப்புகள் தாலும், தாக்கமடைந்த ஆண் நண்டில் பெண் வளர்ச்சியடைந்து பால்மாற்றம் நிகழ் உறுப்புகள் கின்றது. ஒட்டு மீன் 525 ஒட்டுண்ணித் தாக்குதலால், ஹார்மோன் அளவில் மாறுபாடு ஏற்பட்டுப் பால்மாற்றம் அடை வது நத்தையினங்களில் நிகழ்கிறது. டிரைகோ கார்சியா என்ற ஒட்டுண்ணி லிம்னேயா என்ற நன்னீர் நத்தையைத் தாக்கும்போது நத்தையின் சினையணுக்களில் கருவுணவாக்கத்தையும், இனப் பெருக்கத்துணை உறுப்புகளின் வளர்ச்சியையும் செயல்பாடுகளையும் தூண்டும் ஹார்மோன் அளவு குறைகிறது. நத்தையில் சினையணு உண்டாகுதல் பெருமளவில் தாக்கமுறுகின்றது. ஒட்டு மீன் மு.அ. அக்பர் பாஷா உடலின் மேற்பரப்பில் ஓர் ஒட்டுறுப்பைக் கொண்டி ருக்கும் ஓட்டுமீன் (Sucker fish) அவ்வொட்டுறுப்பின் துணையினால் கடல் வாழ் சுறாமீன், திமிங்கலம், கடல் ஆமை, கப்பல் ஆகிய தட்டையான பரப்பு டைய பிறவற்றுடன் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு ஒட்டிக்கொள்வதால் அது, தான் ஒட்டிக்கொண்ட பொருளோடு சேர்ந்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நன்கு நீந்தும் திறனற்ற இம்மீன்கள் இந்த ஒட்டுறுப்பினால் எளிதில் இடம் பெயர முடியும். குருத்தெலும்பு மீன் வகையைச் சார்ந்த இம்மீ னின்உடல் நீண்டு, இரு முனைகளும் குறுகலாக இருக் கும். இதன் தலை சிறிது தாழ்ந்து காணப்படும்; கண் கள் இரண்டும் பக்கவாட்டில் கீழ்நோக்கியும் வெளிப் பக்கம் பார்த்தும் அமைந்திருக்கும்; வாய் ஆழமாகப் பிளவுபட்டுக் காணப்படும்; தாடை, மேல் அண்ணம் நாக்கு இவற்றில் பற்கள் அமைந்திருக்கும். வயிற்றுப் புறத்துடுப்புகள் மார்புப் பகுதியில் இருக்கும். உடல் முழுதும் நுண்ணிய செதில்களால் மூடப்பட்டிருக்கும், இம்மீனுக்கு உடலினுள் காற்றுப்பை இல்லை. இம்மீனின் வால் துடுப்பு வயதுக்குத் தகுந்த வாறு மாறுபட்டுக் காணப்படும். வால் துடுப்பின் அமைப்பைக் கொண்டு மீனின் வயதைக் கணக்கிட லாம். இளம் மீனில் இத்துடுப்பு நீண்ட சாட்டை போன்று கறுப்பாகவும், நடுத்தர வயதுள்ள மீனில் வட்டவடிவத்தில் குட்டையாகவும், வயது முதிர்ந்த மீனில் வால் துடுப்பின் மேல், கீழ்க் கதுப்புகள் (lobes) பிளவுபட்டவையாகவும் காணப்படும். இம்மீனின் முன் முதுகுத் துடுப்பு பிற மீன்களுக்கு அமைந்திருப்பதைப் போன்று துடுப்பாக இல்லாமல் ஒட்டுறுப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது. முட்டை வடிவம் விளிம்பு கொண்ட ஒட்டுறுப்பின் ஒரு சவ்வினால் சூழப்பட்டிருக்கும். அவ்வொட்டுறுப்பின்