பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்கி 31

எக்கி 31 கருவுற்ற பெண் பூச்சிகள் சில மணித்துளிகள் உயிரு டன் இருந்து, நீர் நிலைகளில் முட்டையிட்ட பின்னர் இறந்துவிடும். இந்தக் கார்ப்பூச்சிகள் இரவு நேரத்தில் விளக்கு களைச் சுற்றிப் பறப்பதைக் காணலாம். மழைக் காலங்களில் வை மிகுதியாகக் காணப்படும். இப் பூச்சிகள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் காணப் படும். இறக்கைகளின் அமைப்பைக் கொண்டும். நீண்ட மலப்புழைக் காம்புகள், வாலிழைகள் இவற்றின் அமைப்பைக் கொண்டும் இப்பூச்சிகளை எளிதாகக் கண்ட றியலாம். எஃபிமெரா என்னும் இனத்தைச் சேர்ந்த பூச்சி இந்தியாவில் காணப்படுகிறது. க்ளோயன் கார்ப்பூச்சி களின் வளர்ச்சிப் பருவம் நீரில் நடைபெறுவதால், இவற்றின் இளவுயிரிகள் நீரில் வாழும் மீன்களுக்குச் சிறந்த உணவாகின்றன. எக்கி அ. ஷேக் அப்துல்லா கிணற்றின் ஆழத்திலிருந்து நீரை மேலேற்றும் விசைக் கருவி எக்கி (pump) எனப்படுகிறது. குழாய்களினுள் செல்லும் நீர்மங்களுக்கு ஆற்றலூட்டி, தொடர்ச்சி யாக உந்தித் தள்ளிக்கொண்டிருக்கும் எந்திரங்களே எக்கிகள் எனவும் வரையறுக்கலாம். இவை நீரையோ நீர்மங்களையோ மேலே ஏற்றும் வகையாக மட்டும் இருப்பதில்லை. ஒரே மட்டத்தில் குழாய்கள் மூல மாக நீர்மங்களை நெடுந்தொலைவுக்குத் தள்ளிக் கொண்டு செல்லும் வகையாகவோ குழாய்களில் நீரைச் செலுத்துவனவாகவோ இருக்கலாம். சுழல் இயக்க எக்கி (roto dynamic pump). மைய விலக்கு விசையுடன் இவை ஓர் அச்சில் சுழலும் அமைப்புடையன. அச்சில் பொருத்தியுள்ள உந்துருளி (impeller) மைய விலக்கு விசையால் (centrifugal force) நீரை உந்தித் தள்ளுகிறது. நீர் மூடிய அறைக்குள் இருப்பதால், இவ்வியக்க ஆற்றல் நீர் அழுத்தமாக மாறி, குழாய் மூலம் நீரை ஏற்ற உதவு கிறது. இதனால் ஏற்படும் வெற்றிடத்திற்குக் கீழிருக்கும் நீர் மேலே உறிஞ்சப்படுகிறது. இவ் வகை, மையவிலக்கு எக்கி எனப்படும். பொதுவாக இயக்கி. எக்கிகளை இயக்கப் மின்னோடிகள் (motor) அல்லது மின் இயக்கிகள் பயன்படுகின்றன. மின்னிணைப்பு இல்லாத இடங் களில் டீசல் பொறிகளைப் பயன்படுத்தலாம். இயக்கி கள் குறைந்த பளுவில் அடக்கமாக இருப்பதால் எக்கி களுடன் ஒரே கூட்டில் அல்லது உறையில் இணைத்து எந்த மட்டத்தில் வேண்டுமானாலும் அவற்றை வைக்கலாம். மேலும் மேலும் மின்னாற்றலை கம்பிகள் மூலம் கொண்டு செல்வதால் மின்னோடிகள் எங்கி ருந்தாலும் அவை எளிதில் எட்டக் கூடியவையாக அமையும். மாறாக டீசல் பொறிகள் பளுமிக்கவை யாக இருப்பதால் நிலையாக அவற்றை ஓரிடத்தில் வைத்துக்கொண்டு கச்சைகள் (belts) மூலமாகவே எக்கிகளை இயக்கலாம். பொதுவாக மின்னிணைப்பு எக்கிகள் டீசல் பொறி எக்கிகளைவிடச் சிக்கனமாக இருக்கும். விட்டம் பலசுட்ட எக்கி (multistage pump).ஓர் உந்துருளி நீர்மத்தைத் தள்ளும் உயரமானது அதன் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது. அதற்கு மேலும் அதிக உயரம் தள்ளவேண்டுமானால் ஒன் றிற்கு மேற்பட்ட உந்துருளிகளை அச்சுத்தண்டில் (shaft )ஏற்றி, ஒவ்வோர் உந்துருளை வழியாகவும் நீர் நுழைந்து செல்லுமாறு எக்கி அமைக்கப் படும். எடுத்துக்காட்டு: மலையுச்சிக்கு நீரை ஏற்றுதல் அல்லது கிலோமீட்டர் கணக்கில் தொலைவான இடத்திற்கு நீர், எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு செல்லுதல். ஓர் உந்தி பதினைந்து மீட்டர் உயரம் தள்ளுமானால் மூன்று கட்ட எக்கி ஏறத் தாழ நாற்பத்தைந்து மீட்டர் தள்ளும். இதைப் பலகட்ட எக்கி எனலாம். (அ) படம் 1. எக்கி . (அ) முன்பின் இயக்க எக்கி (ஆ) சுழல் எக்கி (இ) மையவிலக்குவிசை எக்கி குழாய்க் கிணறு எக்கி. குழாய்க் கிணறுகளுக் கான எக்கிகள் குழாய் அளவை மீற முடியாமையால் தனித்தன்மை உடையனவாக உள்ளன. இவற் றிலும் மைய விலக்கு முறைதான் கையாளப்படு விட்டம் மிகக்குறை கிறது; எனினும் சுழலுந்தின் வாக இருப்பதால் ஒரு படியில் ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து மீட்டருக்கு மேல் நீரேற்ற முடியாது. ஆகவே குழாய்க் கிணறுகளில் பலகட்ட எக்கிகள் தவிர்க்க முடியாதவையாகும். ஆழம் மிகுதியாக இருப்பதால் எக்கிகளை நீரில் அழுத்தியவாறே வைத்து, வெளியேற்றுங் குழாயில்