ஒட்டு முனையும், ஒட்டுக் கட்டையும் 527
நேரங்களில் ஒட்டியுள்ள இடத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும். மேலும் தான் ஒட்டி யுள்ள விருந்தோம்பியான சுறாபோன்ற உயிரிகள் ரையுண்ணும் போது சிதறிவிழுகின்ற சிறு ஊன் துண்டுகளை இம்மீன் நீந்திச்சென்று எடுத்து உண்டு விட்டு மீண்டும் வந்து விருந்தோம்பியின் உடலில் ஒட்டிக்கொள்ளும். ஊனுண்ணியான இம்மீன் இவ்வாறு ஒட்டிக் கொள்வதால், விருந்தோம்பிக்கு எவ்வித நன்மையோ, தீமையோ இல்லை. ஆனால் ஓட்டு மீனுக்கு எளிதாக இடப்பெயர்ச்சியும், தேவை யானபோது உணவும், விருந்தோம்பியின் வயிற்றுப் பகுதியில் ஒட்டிக்கொள்வதால் நல்ல பாதுகாப்பும் கிடைக்கின்றன. இவ்வாறு ஒட்டுமீனுக்கும் அதன் விருந்தோம்பிக்கும் இடையேயுள்ள உறவை ஒருங் குண்ணித்துவம் (commensalism) என்பர். ஒட்டு மீனின் பத்து வகையான சிற்றினங்கள் வெப்ப - மிதவெப்பக் கடலில் வாழ்கின்றன. இவற்றில் எக்கினிஸ் ரிமோரா (Echeneis remora) எக்கினிஸ் நியூக்ராடஸ் (E. neucratius), எக்கினிஸ் பிராக்கிப்டிரா (E. bruchyptera), எக்கினிஸ் அல்பிசென்ஸ் (E. albesc ens) போன்ற இனங்கள் இந்தியக் கடற் பகுதிகளில் காணப்படும் இனங்களாகும். எக்கினிஸ் ரிமோரா 20 செ.மீ. நீளம்வரை வளரக் கூடியது. மரக்கட்டையை ஒத்திருக்கும் நிறம் கொண்ட இம்மீன் வெப்ப, மித வெப்பக் கடல்களில் வாழ்கிறது. எக்கினிஸ் நியூக்ராடஸ் மூன்று அடி நீளமும், கறுப்புப் உடலில் பட்டைகளும் காணப்படும். இவ்வினமும் வெப்ப, மிதவெப்பக் கடல்களில் வாழ்கிறது. வெளிர் மரக்கட்டை வண்ணத்திலிருக்கும். எக்கினிஸ் பிராக்கிப்டிராவின் வால் நுனி வெண்மையாக இருக்கும். இம்மீன் இந்தியா, சீனா, வடஅமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளைச் சார்ந்த கடலில் வாழ்கிறது. எக்கினிஸ் அல்பிசென்ஸ் வெளிர்நிறத்தில் இருக்கும். இது இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சார்ந்த கடலில் வாழ்கிறது. ஒட்டு முனையும், ஒட்டுக் கட்டையும் கு. வரதராசன் இரு வேறுபட்ட தாவர இனத்தின் வெட்டப்பட்ட முனைகளைச் சேர்த்து வளர வைப்பது ஒட்ட வைத்தல் (grafting) எனப்படும். வெட்டப்பட்ட, ஆனால் வேருடன் உள்ள தாவரத்தின் கட்டை ஒட்டுக்கட்டை எனப்படும். வெட்டப்பட்ட பிற தாவரத்தின் பகுதியை ஒட்டுக்கட்டையுடன் இணைப் பது ஒட்டுமுனை (scion) எனப்படும். இவ்வாறு ஒட்டுக்கட்டையும், ஒட்டு முனையும் சேர்வதால் வீரியமும், எதிர்ப்பாற்றலும் மிக்க புதிய ஒட்டு முனையும், ஒட்டுக் கட்டையும் 527 இனம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாகச் சப் போட்டா. கனி கொடுப்பதற்கு 8-10 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. ஒட்ட வைத்தலால் 3 ஆண்டு களில் கனி கிடைக்கிறது. பலமுறை ஒட்டுக் கட்டை யும், ஒட்டுமுனையும் தத்தம் பண்புகள் மாறாமல் இருப்பினும் சிலசமயம் ஒட்டு முனையில் புதிய இனம் கிடைக்கிறது. வேறு முறைகளில் இனப் பெருக்கம் செய்ய இயலாத சில தாவரங்களுக்கு இம்முறை உதவுகிறது. எடுத்துக்காட்டாக பிரான் சியா யூன்ப்ளோராபின் (Francisea uniflora) ஒட்டு முனை பிரன்பெல்சியா அமெரிக்கானாவின் (Brun- felsia americana) ஒட்டுக் கட்டையுடன் சேர்ந்து வளர்கி றது. ஒட்டுமுறையைப் பின்பற்றும்போது தண்டின் அமைப்பைப்பற்றியும், அதன் உயிரியக்கம் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். ஒட்ட வைத்தலின் நோக்கம் ஒட்டுக் கட்டையின் கேம்பியமும் (cambium) ஒட்டுமுனையின் கேம்பியமும் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கேம்பியத்தின் செல் இயக்கத்தால் இரண்டும் ஒன்று சேர முடியும். ஒட்டு முனையின் கேம்பியச் செல்கள் ஒட்டுக் கட்டையின் கேம்பியச் செல்களுடன் ஒன்று சேராவிட்டால் ஒட்டு உருவாகாது. ஒட்டுமுனை லைகளைத் தோற்று வித்து, சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கும் வரை ஒட்டு உயிர்பெற்றதாகக் கருத முடியாது. ஒரு வித்திலைத் தாவரங்களில் ஒட்டு வித்தலைக் கையாள இயலாது. ஒட்டுமுனையும், ஒட்டுக்கட்டையும் தேர்ந் தெடுக்கும்போது சிலகுறிப்புகளை மனத்தில் கொள்ள வேண்டும். ஒட்டுமுனையும் ஒட்டுக்கட்டையும் ஒரு பேரினத்தைச் சேர்ந்த சிற்றினமாகவோ, ஒரு சிற்றி னத்தில் உள்ள வகைகளாகவோ இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாகச் சப்போட்டாவை, மாமர்த்துடன் ஒட்டவைக்க முடியாது. இரு சிற்றினத்தின் ஒட்டுறவு மிகுதியாக இருக்கும்போது ஒட்டு உருவாதலும் மிகும். ஒட்டுமுனையும், ஒட்டுக்கட்டையின் வளரும் திறனும் ஓரளவிற்கு ஒன்றாகஇருக்கவேண்டும், ஒட்டுக் கட்டையின் திறன் ஒட்டுமுனையின் திறனைவிட மிகுதியாக அமைய வேண்டும். கிளைகளிலிருந்தோ, சிறு கிளையிலிருந்தோ ஒட்டு முனையைத் தேர்ந் தெடுக்க வேண்டும். மேலும் அந்த ஒட்டுமுனையின் பூக்களும், காய்களும் ஒட்டுக் கட்டையைவிட சிறந்தனவாக இருக்க வேண்டும். களிமண் அல்லது மணலுடன், ஓரு பங்கு சாணம் கலந்து நீர் ஊற்றி வளர்ப்பதே ஒட்டுமுனையும், ஒட்டுக்கட்டையும் வளர ஏற்புடையதாகும். ஒட்டுமுனையும், ஒட்டுக்கட்டையும் ஒட்ட வைக்க 6 கிராம் ரெசினுடன் 2 கிராம் தேன்கோந்து கலந்து சிறிது ஆளி விதை எண்ணெய் விட்டுச் சிறிது நேரம் காய்ச்ச வேண்டும். உருகியபின், நன்கு