பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 ஒட்டு வாழ்‌ தாவரம்‌

528 ஒட்டு வாழ் தாவரம் கலக்கிச் சற்றுக் குளிர்ந்த நீரில் ஊற்றிப் பயன்படுத்த வேண்டும். ஒட்டு முனையும் ஒட்டுக் கட்டை யும் ஒட்டுமாறு கட்டி வைக்க மெல்லிய மல்துணியை 1 செ.மீ. அகலத்திற்குக் கிழித்து ரெசினில் நனைத்துக் காயவைத்துப் பின்னர் கட்ட வேண்டும். தட்பவெப்பம் நல்ல நிலையில் இருக்கும்போது ஒட்டுமுனையும், ஒட்டுக் கட்டையும், இணையுமாறு கட்ட வேண்டும். வெட்டிய பகுதிகளைச் சூரிய ஒளி, காற்று இவற்றிலிருந்து ஒட்டும் வரை பாதுகாக்க வேண்டும். அதுவரை மாற்று மண் முதலியவற்றால் ஒட்டிய பகுதிகளைப் பேணிக்காக்க வேண்டும். ஒட்டுமுனையும், ஒட்டுக் கட்டையும் இணையப் பல முறைகள் உள்ளன. சூழ்நிலைக்கேற்றவாறும், தாவரங்களுக்கேற்றவாறும் மாறுபடினும் முறை ஒட்டுமுனையின் சேம்பியமும். ஒட்டுக்கட்டையின் கேம்பியமும் ணைய வேண்டும். ஒன்றேதான். அதாவது ரு சில குறிப்பிடத்தக்க ஒட்டு முறை. இரு ஒட்டு முனைகளையும், ஒட்டுக்கட்டையுடன் இணைக்கும் முறையில் அருகில் உள்ள ஒட்டுமுனையும், ஒட்டுக் கட்டையும் இணைக்கப்படுகின்றன. எ.கா. மாமரம், சப்போட்டா, கொய்யா ஆகியவை இம்முறையில் இணைக்கப்படும். விப் அல்லது நாக்கு முறையில் சிறிய தாவரங்கள் நாக்கைப் போன்று வெட்டி ஒட்ட வைக்கப்படு கின்றன அல்லது ஒட்டுக் கட்டையில் பிளவு செய்து அதில் ஒட்டுமுனை ஓட்ட வைக்கப்படுகிறது. சேண ஒட்டு முறையில் ஒட்டுக்கட்டையை ஆப்புப் போன்று பெரிதாகச் செய்து ஒட்டு கூர்மையான மேல் புறத்துடன் ஒட்ட முனையின் வைக்க வேண்டும். கிளெப்ட் அல்லது துவார முறையில் ஒட்டு முனையை விட, ஒட்டுக் கட்டை 3 அல்லது 4 பங்கு பெரிதாக இருக்கும்போது ஒட்டுக்கட்டையில் 8 அங்குலப் பிளவு செய்து ஒட்ட வைக்கலாம். கிரவுன் ஒட்டுமுறையில் முதிர்ந்த மரங்களைப் புதுப்பிக்கச் செய்யலாம். வேர் ஒட்ட வைத்தல் முறையில் ஆப்பிளின் வேரை வெட்டி, ஒட்டுமுனை யைத் தேர்ந்தெடுத்து மண்ணில் வேர் வருமாறு புதைக்கலாம். சிறு செடி ஒட்டவைத்தல் முறையில் மென்மை யான தண்டை உடைய தாவரங்களில் கணுவின் பகுதியிலோ, இலையடியிலோ, குறுக்காக வெட்டிப் பின் ஆப்பு போன்ற ஒட்டுக்கட்டையில் பிளவு ஏற்படுத்தி ஒட்ட வைக்கலாம். ஒட்டுக் கட்டையுடன் ஒட்டுமுனையை இணைத்த பிறகு இரண்டும் காற்றில் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒட்டுக் கட்டையும் ஒட்டுமுனையும் வளரும்போது விரிவடைந்து ஓட்டுக் கட்டு உடையக்கூடுமாகையால் ஒட்டு முனையின் உயரம் மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பா. அண்ணாதுரை ஒட்டு வாழ் தாவரம் பிற தாவரங்களின் மேல் வளரும் இவை ஒட் டுண்ணித் தாவரங்களிலிருந்து வேறுபட்டவை. இவற்றிற்கு அடிப்படையாக உள்ள தாவரங்கள் தாங்கிகள் எனப்படும். தாங்கும் தாவரங்களை வை உறைவிடத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அத்தாவரங்களுக்கு எவ்விதத்தீங்கும் விளை விக்காமல் உணவையும், நீரையும் தாமே தயாரித்துக் கொள்ளும். இதனால் தாங்கும் தாவரத்திற்கு எவ் விதத் தாக்கமும் இல்லையாயினும் இவற்றின் எண்ணிக்கை ஒரே தாவரத்தின் மேல் மிகும்போது பழுது ஏற்படும். ஏற்படும். இவை ஒட்டுண்ணித் தாவரங் களைப்போல் தாங்கும் தாவரங்களிலிருத்து நீரையோ உணவையோ உறிஞ்சுவதில்லை. இவற்றைத் தொற் றும் தாவரங்கள் என்றும் கூறுவர். அனைத்து ஒட்டு வாழ் தாவரங்களும் அனைத்து வகையான தாங்கித் தாவரங்களின் மேல் வளரா. சில தாங்கித் தாவரங்களின் மேல் மட்டும் வளரும் இதற்குத் தேர்வுத் தன்மை என்றுபெயர். சான்றாக எலாசிஸ்டா ப்யூசிசோலா என்னும் சிறுபாசி, ப்யூக்ஸ் என்னும் பெரிய கடல் பாசியின் மேல் வளரும். ஒட்டு வாழ் தாவரங்கள் பெரும்பாலும் ஈரப் பசையும் காற்றும் உள்ள இடங்களிலும், பனி மிகுந் துள்ள இடங்களிலுமே காணப்படும். காற்றின் இயக்கம், பருவ நிலை மாறுபாடுகளாலும் தட்ப வெப்ப நிலைகளாலும் இவை மாறுபடுகின்றன. குளிர் மிகுதியான இடத்தில் பாசிகள், லைக்கன், மாஸ் முதலிய தாவரங்களும் வெது வெதுப்பான டங்களில் பெரணி தாவரங்களும் உள்ளன். வெப்ப மண்டலக் காடுகளில் ஆர்க்கிடேசி, ஏரேசி புரோமலியேசி, மாஸ், லைக்கோபோடியம், செலாஜி னெல்லா ஆகியன வாழ்கின்றன.ஒட்டு வாழ் தாவரத் தின் வேர்கள் மூன்று வகைப்படும். நான்கு உறிஞ்சு வேர், ஆணிவேர் தாங்கும் தாவரங்களின்மேல் பட்டை யில் இருந்து, உப்புகள் கரிமப் பொருள்கள் இவற்றை உறிஞ்சுவதற்குப் பயன்படுகின்றன. தாங்கிகளில் பற்றிக் கொள்ளுவதற்கேற்றவாறு பற்றுவேர்கள் பயன்படுகின்றன. மேலும் வேற்றிடத்து வெளிவேர் களில் வெலமன் என்ற திசுக்கள் காணப்படுகின்றன. வை காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சவல்லன. பெரும்பாலும் ஒட்டு வாழ் தாவரங்கள் நீர்க் குறைவால் கோடைக் காலத்தில் இலைகள் குறைந்து