ஒட்டு வீரியம் 529
காணப்படுகின்றன. சில ஒட்டு வாழ் தாவரங்களில் ஒரே இலை தோல் போன்று காணப்படுகின்றது. இலைகளில் தடித்த கியூட்டிகிள், அமிழ்ந்த இலைத் துளைகள் உண்டு. சில ஒட்டுவாழ் தாவரங்களில் இலைகள் நீரைத் தேக்கி வைத்துச் சதைப்பற்றுடன் காணப்படும். சான் றாக வெனில்லா, டிஸ்கிடியா ப்ளேட்டிசீரியம், ஆஸ்ப்ளினியம் நிட்ஸ் முதலிய வற்றின் இலைகள் தொட்டி போன்ற அமைப்பைக் கொண்டு மழை நீரைத் தேக்கி வைக்கின். ன்றன. டிலாண்ட்சியா இலைகளின் அடிப்பகுதி நீண்ட பை போன்று அமைந்து நீரைத் நீரைத் தேக்குகிறது. அவற்றை டேங்க் அல்லது சிஸ்டர்ன் ஒட்டு வாழ் தாவரம் (tank or cistem eplphytes) என்பர். சிறிய தண்டு ஒட்டு வாழ் தாவரங்களின் இனப்பெருக்கத் திற்குப் போலிக் குமிழ்கள் (pseudo bulbs) கிழங்கு முதலியன பயன்படுகின்றன. செயலியல் பண்பு. ஒட்டு வாழ் தாவரங்கள் மழை. பனி, முதலியவற்றால் கிடைக்கும் நீரையும், தங்கும் நீரையும் பயன்படுத்திக் கொள்கின்றன. பாசி, மாஸ், லைக்கன், டிலாண்ட்சியா போன்ற தாவர இனங்கள் தம்மிடமுள்ள உறிஞ்சு மயிரால் நீர் கிடைக்கும் போது உறிஞ்சித் தேக்கிக் கொள்கின்றன. ஆர்க்கிடேசி, ஏரேசி. இக்குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் வெலமன் என்ற கடற்பஞ்சு போன் ன்ற திசுக்கள், வேர்களின் புறத்தே அமைந்து காற்றில் உள்ள நீர்த் துளிகளை உறிஞ்சுகின்றன. இவ்வகைத் தாவரங்கள் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு நீர், சூரிய ஒளி இவற்றின் உதவியால் பசுங்கனிகங்கள் (chloroplasts) மூலம் உணவைத் தயாரிக்கின்றன. ஒட்டு வாழ் தாவரங்களின் இனப்பெருக்கம் விதை ஸ்போர்கள் போன்ற இனப்பெருக்கிகள் அல்லது வித்துகள் மூலம் எளிதில் பரவ வேண்டும். தகுந்த சூழ்நிலை அமைந்தும் பிற தாங்கித் தாவரங்களின் பழங்களை அல்லது விதைகளைப் பறவைகள் உண்ணு கின்றன. விதைகள் பறவைகளின் எச்சத்துடன் மரங் களின் மேல் தங்கிப் புதிய தாவரங்களை உண்டாக்கு கின்றன. வேர்களே இல்லாத டில்லெண்டஸியா அஸ்னியாய்டியிலிந்து (tillandsia usneoide) பகுதிகள் தாங்கித் தாவரததின் மேல் ஒட்டிக் கொண்டு வளரத் தொடங்கும். சிம்பர் என்பார் ஒட்டு வாழ் தாவரங்களை மூவகையாக வகைப்படுத்தியுள் ளார். சிறு முன் ஒட்டு வாழ் தாவரம். இவ்வகைத் தாவரங்கள் மரப்பட்டைகளிலிருந்தும் வளி மண்டலத்திலிருந்தும் நீரை எடுத்துக் கொள்கின்றன. எ.கா. பெப்ரோமியா குறை ஒட்டு வாழ் தாவரம். இவ்வகைத் தாவரங் களில் ஒட்டு வாழ் குணமுடைய தாவர வாழ்க்கையின் முன் பகுதியிலோ பின் பகுதியிலோ காணப்படும். அ.க. 6-34 ஒட்டு வீரியம் 529 பிற நேரங்களில் வேர்கள் புவியில் ஒட்டி வாழும். எ.கா. ஆல், அரசு (Ficus), ஸ்கின்டாப்சஸ் அபிசினாலிஸ் (Scindapsus officianalis). தொட்டி ஒட்டு வாழ் தாவரம். பள்ளமான இலை யின் அடிப்பகுதி நீரைத் தேக்கி வைக்கப் பயன்படு கிறது. எ.கா. (Tillandsia), டிலாண்ட்சியா நிடுலேரியம் (Nidularium). ஒட்டு வீரியம் பா. அண்ணாதுரை இனக் கலப்பினால் விளையும் கலப்புப் பயிர்களில் உண்டாகும் உருவ எழுச்சியும் கலப்பு எழுச்சியும் ஒட்டு வீரியம் என்று குறிப்பிடப்படுகிறது. ஓட்டு வீரியப் பயிர்கள் மூல தாவரங்களை விட வளர்ச்சி, வளம் விளைச்சல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும். இவ்வகையில் இரு வேறுபட்ட மரபியல் பண்புகளை யுடைய தாவரங்கள் கலக்கின்றன. ஒரே மரபியல் பண்புடைய தாவரங்கள் கலந்தால் வீரியம் குறை கிறது. அதனால் இந்த ஓட்டுவீரிய முறை பழங்காலத் திலிருந்தே பயன்பாட்டில் உள்ளது. கல்ரூய்ட்டர், நைட், நாடின் என்போர் முதன் முதலில் பயிர்க் கலப்பைக் கையாண்ட முன்னோடி களாவர். மெண்டல் என்பார் பட்டாணிச் செடியில் இத்தகைய பயிர்க் கலப்பைச் செய்து மரபியல் அடிப் படைக் கருத்துகளையும் விதிகளையும் விளக்கினார். 1876 இல் சார்லஸ் என்பவர் இக்கலப்புப் பயிர்களில் வீரியம் மிகுந்திருப்பதைக் கண்டார். 1915 ல் டாக்டர் ஜி.எச். ஷல் என்பார் ஒட்டுவீரியம் என் னும் பொருளுடைய ஹட்டிரோசிஸ் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். ஓட்டுவீரியத்தால் ஏற்படும் மாற்றங்கள் தாவரத் தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுவதில்லை. சில தாவரங்களில் அல்லது சில தாவரப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சான்றாக காரட்டில் அதன் வேர்க்கிழங்கிலும், உருளைக் கிழங்கில் அதன் தரைக் கீழ்த்தண்டிலும், முட்டைக்கோஸ் லெட்டி யூஸ் ஆகியவற்றில் அவற்றின் இலைகளிலும், காலி பிளவரின் பூவிலும் காணப்படுகின்றன. ஒட்டுவீரியத்தால், மூதாதைத் தாவரங்களைவிட உயரம், எடை, அளவு, உறுப்புகளின் எண்ணிக்கை வளர்ச்சி, விளைச்சல் ஆகியவை உயர்தல், வளம். வாழும் தன்மை ஆகியவை சிறப்பெய்தல், நன்றாக விதை முளைக்கும் ஆற்றல் எய்தல், மற்றவற்றை விட வாழும் காலம் மிகுதல், முதலிற் பூத்து முதிர்ச்சி அடைதல், நோய், பூச்சி, வறட்சி ஆகியவற்றிற்கு மிகுதியான எதிர்ப்புத் திறன் பெறுதல் ஆகிய சிறப்புப் .