532 ஒட்டுறவு
532 ஒட்டுறவு படுத்தப்படுகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட பல அல்லது பல பொருள்கள் அடங்கிய குழு அல்லது கூட்டம் முழுமைத் தொகுதி (universe) என்றும், இத்தகைய தொகுதியில் அடங்கிய ஓர் ஆள் அல்லது பொருள் அல்லது ஒருசில மட்டும் அடங்கிய பகுதி மாதிரி (sample) என்றும் குறிக்கப்படும். ஒரு தொகுதி யில் உள்ளோரின் பண்புகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை; ஒரே இனத்தைச் சார்ந்த பல தொகுதிகளையோ பல இனங்களைச் சார்ந்த தொகுதிகளையோ அலைவெண் பரவல்களையோ ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் புள்ளியியலில் கூட்டுச் சராசரி, திட்ட விலக்கம் போன்றவை பயன்படுத்தப் படுகின்றன. ஒரு மாறியின் தன்மைகளும் அசைவுகளும் அதனுடன் தொடர்புடைய வேறுசில மாறிகளின் தன்மைகளையும் அசைவுகளையும் சார்ந்தும் சாரா மலும் இருக்கலாம். பலதரப்பட்ட மாறிகள் ஒன்றோ டொன்று ஏதாவதொரு வகையில் தொடர்பு கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, உணவுப் பொருள்களின் உற்பத்திக்கும், விலைவாசிக்கும் தொடர்பிருக்கும். மேலும் விளம்பரம் - விற்பனை; பொருளின் விலை -அதன் தே தேவை, உர அளவு உற்பத்தித்திறன், மழை அளவு விளைபலன் ஆகிய மாறிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும். மழை நாளில் குடைகளின் விற்பனை மிகுதி யாகும் அதாவது குடைகளின் விற்பனை மழை நாளைச் சார்ந்திருப்பதால், இதனைச் சார்ந்த அல்லது சார்புடை மாறி (dependent variable) என்றும், ஆனால் மழை நாளின் எண்ணிக்கை, குடை யின் விற்பனையைச் சார்ந்து இராமையால் இதனைச் சாராமாறி (independent variable) என்றும் குறிப் பிடலாம். இவ்வாறே உணவுப்பொருள்களின் உற் பத்தி மிகுதியானால் அவற்றின் விலைவாசி குறையும். இங்கு ஒன்று காரணமாகவும் ஒன்று விளைவாகவும் இருக்கின்றன. இவ்வாறு இரு மாறிகளுக்கிடையே காணப்படுகின்ற காரண விளைவுத் தொடர்பு (cause and effect) ஒட்டுறவு அல்லது இடையுறவு (correlation) என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு மாறி யின் மதிப்பு மிகும்போது (குறையும் போது) மற் றொன்றின் மதிப்பும் மிகுந்து கொண்டே. (குறைந்து கொண்டே) சென்றால் அவற்றிற்கிடையேயுள்ள ஒட்டுறவு நேர்மறை ஒட்டுறவு அல்லது நேரிடைத் தொடர்பு (direct or positive correlation) எனப்படும். ஒரு மாறியின் மதிப்பு,கூடிக் (குறைந்து) கொண்டே செல்லும்போது மற்றொன்றின் மதிப்பு குறைந்து (கூடிக்) கொண்டே சென்றால் அவற்றிற் கிடையேயுள்ள தொடர்பு எதிரிடைத் தொடர்பு அல்லது ஒட்டுறவு (inverse or negative correlation) எனப்படும். ஒரு மாறியில் ஏற்படுகின் ற மாறுபாட்டின் அளவுக்கும் அளவுக்கு-மிடையேயுள்ள விகிதம் மாறிலி யாக இருந்தால், இந்த ஒட்டுறவை நேர்கோட்டு ஒட்டுறவு (linear correlation) என்றும், அவ்விகிதம் மாறிலியாக இல்லையெனில் வளைகோட்டு ஒட்டுறவு (curvillinear correlation) என்றும் குறிக்கலாம். நேர் கோட்டு ஒட்டுறவு, வளைகோட்டு ஒட்டுறவு ஆகிய இரண்டும் நேரிடையாகவுமிருக்கலாம்; எதிரிடை யாகவு மிருக்கலாம். சிற்சில சமயங்களில் காரணத்தொடர்பற்ற இரு மாறிகள் பார்ப்பதற்குத் தொடர்புடையன போல் தோன்றினாலும், அவை உடன் தொடர்புடையன எனக்கொள்ள முடியாது. சான்றாக வடஇந்தியாவில் விளையும் கோதுமையின் உயர் விளைச்சலுக்கும், தமிழ்நாட்டின் நெல் விளைச்சலுக்கும் தொடர்பே இல்லை. இவற்றிற்கிடையேயுள்ள ஒட்டுறவு போலி ஒட்டுறவு (spurious correlation) அல்லது பொருளற்ற ஒட்டுறவு (nonsense correlation) எனப்படும். இரு மாறிகளுக்கிடையே காணப்படுகின்ற ஒட்டுறவுக்குத் தனி ஒட்டுறவு (simple correlation) என்றுபெயர். இரு மாறிகள் ஒரு பொதுவான மூன்றாம் மாறியின் மூலம் மறைமுகமான ஒட்டுறவு கொண்டிருந்தால் அவ்விரு மாறிகளுக்கிடையேயுள்ள தொடர்பு பகுதி ஒட்டுறவு (partial correlation) ஆகும். அதாவது மழையளவின் மூலம் உற்பத்தி பெருகுவதோ குறைவதோ ஏற்பட்டு அதனால் விலைவாசி குறைவாகவோ அதிகமாகவோ ஆகலாம். இங்கு மழையளவுக்கும் விலைவாசிக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் ஒன்றுக் கொன்று பகுதி ஒட்டுறவைக் கொண்டுள்ளன. Y r = 0 (x, y) X படம் 1. சிதறல் விளக்கப்படம் (ஒட்டுறவின்மை)