பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எக்கிட்னா

32 எக்கிட்னா தொங்கவிடலாம். மின்னோடிகளைத் தரை மட் டத்திலேயே வைத்து, அச்சுத்தண்டுகளை வெளி யேற்றுங்குழாய் நடுவில் எடுத்துச் சென்று எக்கி களை இயங்க வைப்பது ஒரு முறையாகும். ஆனால் தற்போது நீர்மூழ்கு மின்னோடிகள் நன்கு செயல் படுவதால் நீரழுத்தி மின்னோடிகளையும் எக்கியை யும் ஒரே இணைப்பாகக் கிணற்றில் இறக்கி விடலாம். மின்னோடி அடிப்பகுதியிலும், வெளியேற்றுங் குழா யுடன் எக்கி மேல் பகுதியிலும் அமையும். மின்னாற் றலைக் கொண்டு செல்லும் கம்பிகளுக்குப் போது மான டைவெளி இருக்கும். இம்முறை பரவலாகி வருகிறது. அகன்ற கிணறுகளுக்குக்கூட இதைப் பின்பற்றலாம். கை எக்கி (hand pump). கை எக்கிகள் பெரும் பாலும் குழாய்க் கிணறுகளிலேயே இடம்பெற்றாலும் இவை வேறு உத்திகளைக் கொண்டவை. இவற்றில் சுழலி (rotor) எதுவும் இல்லை. ஓர் உருளைக்குள் (cylinder) மேலும் கீழும் போய்வரும் உந்து (piston) தேவையான பணியைச் செய்கிறது. இதில் ஒருவழிக் கட்டுப்பாட்டிதழ் (oneway valve) உந்து கீழே இறங்கும்போது நீரை மேலே செலுத்துகிறது. மீண்டும் உந்து மேலே ஏறும்போது நீரைக் கீழே விடாமல் மேலே தள்ளுகிறது. இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெறும்போது நீர் இறைக்கப் படுகிறது. குறைவான ஆழம் உள்ள கிணற்றில் நீர் போதுமானதாக இருக்கும்போது இதன் கூடும். பயன் நிறுவுதல். மையவிலக்கு எக்கிகளை நிறுவும் கருத்துகளைக் கொள்ள போது வேண்டும். கீழ்க்காணும் உறிஞ்சு குழாயின் அடிநுனியில் ஒரு கீழ்க் கட்டுப்பாட்டிதழ் (foot valve) இருக்க வேண்டும். எக்கி இறைக்கத் தொடங்கும்போது அது நீர்மத் தால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். கீழ்க் கட்டுப் பாட்டிதழ் இல்லாமல் இது நடைபெறுவதில்லை. வெளியேற்றுங் குழாயில் ஒரு தாழ் கட்டுப்பாட்டி தழ் (gate valve) இருத்தல் நன்று. குழாயில் ஓட்டம் முழுதுமாக தடுக்கப்படும்போது மின்னோடியின் மேல் குறைந்த பளு இருக்கும். இயங்கத் தொடங்கும் போது மிகு வலிமை தேவைப்படுவதால் அப்போது மூடிவைத்துள்ள தாழ் கட்டுப்பாட்டிதழைத் திறந்து விட வேண்டும். இதுபோல் நிறுத்தும்போதும் திடீரென்று எக்கியைத் தாக்காமல் இருக்க அடைப் பானை மூடிவிட்டு நிறுத்தவேண்டும். எக்கிகளின் மட்டத்திற்குக் கீழ் நீரின் ஆழம் ஏறத்தாழ 7.50 மீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த ஆழம் குறையக்குறைய நீரின் இறைப்பு பெருகும். அதாவது எக்கியின் திறன் மிகும். உறிஞ்சு குழாயின் நீளம், அளவு குறைவாக இருக்க வேண்டும். இக்குழாயில் குறுகிய ஆரமுடைய வளைவுகளைத் தவிர்த்தல் வேண்டும். தேர்ந்தெடுத்தல். ஓர் எக்கியை வாங்குவதற்கு முன்னர் நீர் ஏற்ற வேண்டிய உயரத்தை அளவிட வேண்டும். இதனுடன் உராய்வுக்கு ஈடுகட்ட ஏறத் தாழ நான்கில் ஒரு பங்கைக் கூட்டிக்கொள்ள வேண்டும். இறைக்கும் நீர் பொதுவாக வேளாண் மைக்கு நொடிக்கு எட்டு லிட்டரும், வீட்டின் குடி நீர்த் தொட்டிக்கு நொடிக்கு ஒன்று முதல் இரண்டு லிட்டரும் போதும். இதற்கேற்றவாறு எக்கிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரே ஆற்றலுடன் பல வித எக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பொருத்தமான எக்கியைப்பயன்படுத்தும்போதுதான் அது உயர்ந்த திறனுடன் வேலை செய்து சிக்கனத்தைக் கொடுக்கும். எக்கிட்னா எம்.கே.நடராசன் பாலூட்டிகளில் எக்கிட்னா (echidnā), பிளாட்டிப் பஸ் (platypus) ஆகிய இரண்டும் முட்டையிடுபவை. இவை ஆஸ்திரேலியா, நியூகினியா, டாஸ்மேனியா ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. எக்கிட்னா கூர்முள் எறும்புண்ணி என்றும், கூர்முள் முள்ளம்பன்றி என்றும் குறிப்பிடப்படு கிறது. வறண்ட பாலைவனம், காடு. சமவெளிகள், மலைப்பகுதி போன்ற பலவகை வாழிடங்களில் எக்கிட்னா பரவியுள்ளது. பொதுவாகத் தனித்து வாழ்கிறது. ஓய்வு நேரங்களில் பாறை இடுக்கு களிலும் மரப்பொந்துகளிலும் பதுங்கிக் கொள்கிறது. இது 60 செ.மீ. நீளமும் 5-7 கி.கி, எடையும் கொண்டது. இதன் பருத்த உடலில் கூர்முள்கள் நீட்டிக்கொண்டுள்ளன. கூர்முள்களின் அடிப் பகுதி மஞ்சளாகவும், நுனிப்பகுதி சுறுப்பாகவும், சிலவற்றில் முற்றிலும் மஞ்சளாகவும் இருக்கும். கூர் முள்கள் தற்காப்புக்கு உதவுகின்றன. முள்களுக் கிடையில் ஆங்காங்குப் பரவலாக மயிர் காணப்படு கின்றது. உடலின் கீழ்ப்பக்கத்தில் முள்கள் இருப்பதில்லை, மயிர் மட்டுமே உள்ளது. கழுத்துப் பகுதி தனித்துத் தெரிவதில்லை; காதுகள் சிறியவையாக இருப்பதால் வெளியில் தெரிவதில்லை. முகத்தின் முன்புறம் அலகு போல நீண்டுள்ளது. இந்நீட்சியின் அடிப்பகுதியில் தலையில் சிறிய கண்களும், நுனியில் மூக்குத் துளை களும், சிறிய வாயும் அமைந்துள்ளன. தட்டையான பருமனான கால்களின் விரல் நுனிகளில் நீளமான, .