ஒடி நட்சத்திர மீன் 539
ஓடிநட்சத்திர மீன் 539 ஒட்டைச்சிவிங்கி கழுத்தை நீட்டி மர உச்சியி லுள்ள இலைகளைப் பறிக்கும்போது கழுத்து நீள் வதால் ஏறத்தாழ ஏழு மீட்டர் உயரத்துக்கு இரத்தம், இரத்தக்குழாயில் இருக்கும். அப்போது மூளையிலும் இதயத்திலும் நிலவும் இரத்த அழுத்த வேறுபாட்டைச் சமப்படுத்தும் பொருட்டு, இதயம் மிக விரைவாக இயங்க வேண்டியிருக்கும். ஓட்டைச் சிவிங்கி தலையைத் தரையை நோக்கித் தாழ்த்தி மீண்டும் உயர்த்தும்போது இரு நிலைகளிலும் மூளையின் இரத்த அழுத்தம் பெருமளவு வேறு படுகிறது. இதுபோன்ற நிலைகளில் மனிதர்கள் தம் நினைவற்று மயக்கமடைய நேரிடும். ஓட்டைச் சிவிங்கியின் உடல் இதை எவ்வாறு தாங்கிக் கொள்கிறது என்பதும் புலனாகாமலேயே இருந்தது. கழுத்திலுள்ள நீண்ட தமனி, இதுபோன்ற நேரங் களில் வால்வுகளால் இரத்தம் பாய்வதைத் தடுத்து இரத்த அழுத்தத்தைத் தக்க நிலையில் வைத்து, மூளையின் இரத்த அழுத்த நிலையைச் சீராக வைக்க உதவுகிறது என்று கருதப்படுகிறது. ஓடிநட்சத்திர மீன் ஜெயக்கொடி கௌதமன் கடல்வாழ் முள்தோலிகளான ஒடிநட்சத்திர மீன்கள் புறத்தோலில், முள்களையும் புறப்புடைப்புகளையும் கொண்டவை. 51 கோடி ஆண்டுகளுக்கு முன்னால். கேம்பிரியக் காலக்கட்டத்தில் தோன்றிய முள் தோலிகள் அவை தோன்றிய காலந்தொட்டு இன்று வரை கடலிலேயே வாழ்ந்து வருகின்றன. ஒடி நட்சத்திர மீன்கள் (brittle stars) பகலில் கற்கள், மெல்லுடலிகளின் ஓடுகள், கடற்புல் இவற்றின் அடியில் மறைந்திருந்து இரவில் வெளிவருகின்றன. சில ஒடிநட்சத்திர மீன்கள் ஒளிரும் தன்மையுடையன வாக விளங்குகின்றன. மஞ்சள் அல்லது மஞ்சள் பச்சை ஒளிர்வுகள் பக்கத்திலிருந்து வெளிப்படும். உடற்பகுதிகளில் அமைந்துள்ள பெரிய சுரப்பிகளே ஒளிர்தலுக்குக் காரணம் எனக் கருதுகின்றனர். ஓடி நட்சத்திரங்கள் தசையால் நீரை வெட்டிச் செல்லும் பண்புடையவை. சில ஒடிநட்சத்திர மீன்கள் நீரில் நீந்தும் பழக்கத்தையும், சில மண்பகுதியில் வளை தோண்டும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. இவை தாழ் ஓதப்பகுதி முதல் ஏறத்தாழ 400மீ தொலைவு ஆழம் வரையிலுள்ள பகுதிகளில் வாழ்கின்றன. ஒடிநட்சத்திர மீன்கள் அளவில் சிறியவை. உடம்பின் மையப் பகுதி தட்டையான வட்ட வடிவி லமைந்த நடுவட்டு என்ற பகுதியுடனும் இதிலிருந்து ஆரவாக்கில் நீளமான ஐந்து கைகளுடனும் அமைந் துள்ளது. கைகள் கணுக்களைக் கொண்டுள்ளன. நடுவட்டின் கீழ்ப்புறத்தில் வாய்ப்பகுதி அமைந் துள்ளது. கைகளின் வெளிப்புறம் கவசத்தாலும் உட்பகுதி எலும்புத்தகடுகளாலும் ஆனவை. நீண்டு ஓடுங்கிய கைகள் அமைப்பிலும் அசைவிலும் பாம்பை ஒத் துள்ளமையால் ஒடிநட்சத்திரங்கள் சிலவற்றுக்குப் பாம்பு நட்சத்திர மீன்கள் என்ற பெயரும் உண்டு. கைகளின் பக்கவாட்டிலுள்ள கவசத்தகடு களில் முள்கள் காணப்படுகின்றன. சில இனங் களில் இவை நச்சுடையவையாக அமைந்துள்ளன. கைகளின் அடிப்பகுதியில் இயக்க வரிப்பள்ளம் ambulacral groove) காணப்படுவதில்லை. ஒடி நட்சத் திரங்களுடன் நெருங்கிய உறவுடைய நட்சத்திர மீன் களில் இவை காணப்படுகின்றன. கைகளின் பக்கவாட் டிலுள்ள கவசத் தகட்டிற்கும் கையின் நேர்கீழ்ப் பகுதியிலுள்ள கவசத்தகட்டிற்கும் நடுப்புறமாகக் குழாய்க்கால்கள் காணப்படுகின்றன. குழாய்க்கால்கள் சிறியனவாகவும் பற்றிழை (tentacles) Gunway th அமைந்துள்ளன வாய்ப்பகுதியைச் சுற்றி ஐந்து தாடைகள் கீழ் நோக்கி அமைந்துள்ளன. ஒவ்வொரு ஒவ்வொரு தாடையின் ஓரப்பகுதியிலும் பற்கள் போன்ற தகடுகள் காணப் படுகின்றன. மேட்ரிபொரைட் என்ற நுண்துளைச்சில் நட்சத்திரமீன், கடல் முள்ளெலி இவற்றில் அமைந்துள்ளது போலல்லாது வாய்ப்புறத்தில் அமைந் துள்ளது. கைகள், நடுவட்டின் வாய்ப்புறத்தின் தாடைப்பகுதி வரை விரிவடைந்துள்ளன. உடல் சுவரின் வெளிப்புறத்தில் குற்றிழைகள் (cilia) காணப்படுவதில்லை. ஒடிநட்சத்திர மீன்கள் இரண்டு கைகளை முன்னும் பின்னும் வைத்துக் கொண்டு நடுவட்டையும் மற்ற கைகளையும் உயர்த்திப் பக்க வாட்டில் திரும்புகின்றன. கடற்பூண்டுகளிலும், பாறைகளிலும் ஏறும்போது வளைந்து அசையும் தன்மையுடைய கைகளால் அவற்றைச் சுற்றி ஏறு கின்றன. ஊர்ந்து செல்லும்போது ஏற்படுகிற அதே அசைவுகளைக் கொண்டு நீரில் நீந்திச் செல்கின்றன. ஒடிநட்சத்திரமீன்களில் காணப்படும் நீர்க்குழாய் மண்டலம் ஏனைய முள்தோலிகளில் உள்ளவாறே காணப்படுகின்றது. நுண்துளைச்சில் வாய்ப்புறப்பகுதி யில் காணப்படுவதால் கல் கால்வாய் (stone canal) மேல்நோக்கிச் சென்று தாடையில் மேலேயுள்ள பகுதியில் அமைந்துள்ள வளையக் கால்வாயில் (ring canal) சேர்கிறது. இந்த நீர்வளையம் நான்கு போலியன் சிறு சவ்வுப்பைகளைக் (polion vesicle) கொண்டுள்ளது. இந்த நீர்வளையத்திலிருந்து ஆரக் கால்வாய்கள் (redial canals) கைக்கு ஒன்று வீதம் செல்கின்றன. ஆரக்கால்வாயிலிருக்கும் பக்கக் கிளைக் கால்வாய்கள் lateral canal பிரிந்து ஒவ்வொரு பக்கத்திலும் குழாய்க் கால்களில் (podia) முடிவுறு கின்றன. கைகளின் நுனிப்பகுதியில் ஆரக்கால்வாய் பற்றிழையில் (tentacle) முடிவடைகிறது.