பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 ஒடி நட்சத்திர மீன்

540 ஒடி நட்சத்திர மீன் ஒடி நட்சத்திர மீன் பெரிய ஒடிநட்சத்திர மீன்கள் நீர்த்தளத்தில் காணப் படும் சிதறு துணுக்குகள், மட்கிய பொருள்கள், இறந்த அல்லது உயிருள்ள சிறிய விலங்குகள் போன்றவற்றை உட்கொள்ளுகின்றன. நுண்ணிய உணவுத்துகள்களைக் குழாய்க் கால்களும் துகள்களைக் க்ைகளும் வாய்ப்பகுதி நோக்கி அனுப்பி வைக்கின்றன. உணவுப் பொருள்கள் வடிகட்டி உட் கொளல் முறையிலோ, மேய்தல் முறையிலோ அழுகிய பொருள்களைத் தின்று வாழ்தல் முறையிலோ உட்கொளப்படுகின்றன. உடம்பின் உட்பக்கமாகக்காணப்படும் சுரப்பிப்பை போன்றவற்றால் மூச்சு விடுதல் நடைபெறுகிறது. குற்றிழைகள் அசைவால் ஏற்படும் நீரோட்டம் வெளிப்புறச் சுவரில் அமைந்துள்ள சிறுகுழாய் போன்ற பகுதியின் வழியாக உட்சென்று மூச்சுக்காற்றைக் கொடுக்கிறது. நடுவட்டின் அசைவும் மூச்சு விடுவதில் துணை புரிகின்றது. உடம்பின் மேல்தோலில் காணப்படும் உணர்வுச் செல்களே உணர்வு உறுப்பு களாகச் செயல்படுகின்றன. ஓடிநட்சத்திரங்கள் ளியை விட்டு அகன்று செல்லும் பண்புடையனவா கும். உணவுத் துண்டுகளைத் தொடாமலேயே அவை . அருகில் இருப்பதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு காணப்படுகின்றன. இவற்றில் வேதி உணர்விகள் இவை பகை விலங்குகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளக் கைகளை ஒடிந்து போக விட்டு விட்டுத் தப்பித்துக் கொள்ளும் தன்மையும், இழந்த பகுதியை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் பண்பும் கொண்டனவாகும். ஒரு சிலாடி நட்சத்திரமீன்களின் உடல் பிளவு பட்டுப் பாலிலி இனப்பெருக்கம் (asexual reproduc- tion) நடைபெறும். முதலில் நடுவட்டு இரண்டாகப் பிரிகிறது. ஒவ்வொன்றிலும் தாக்கமடைந்த பகுதி இழப்பு மீட்டல் முறையில் சீராக்கப்படத் தனித்தனி ஒடிநட்சத்திரங்களாக வாழத் தொடங்குகின்றன. ஓடிநட்சத்திரங்களில் ஆண், பெண் தனித்தனியே காணப்படுகின்றன. இவற்றை வெளிப்புறத் தோற்றத் தால் இனங்கண்டு கொள்ள இயலாது. சில ஓடி பின்னர் நட்சத்திரங்கள் முதலில் ஆண்களாகவும் பெண்களாகவும் வாழ்ந்து மடிகின்றன. இந்தப் பண்புடையனவற்றுக்கு முன் ஆண் இன இருபாலி (protandric hermaphrodite) என்று பெயர். பருவ மடைந்தபின் இனச் செல்கள் வெளியேறக் கடல் நீரில்