ஒடுக்கல் (மின் பொறியியல்) 545
ஏற்படும் ஒடுக்கல் ஆற்றல் மின் கடத்திக் காந்தப் புலத்தில் நகரும் வேகத்திற்கு நேரிடையாக இருக் கிறது. ஆனால் இவ்வமைப்பில் காந்த ஒடுக்கம் ஒரு திசையில் மட்டும் இருப்பதால் இத்தகைய அதிர்ச்சி தாங்கிகள் சிறப்பாகப் பயன்படுவதில்லை. மின் பாதைக் கம்பிகளில் அதிர்வு ஒடுக்கம். காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இருகம்பங்களின் அல்லது கம்பிகளின் பிடிப்புத்தானத்தின் இடையில் உள்ள கம்பிகள் அவற்றின் நிறைக்கும் இழுவிசைக்கும் நீளத்திற்கும் கண்ணிகளாக (loops) ஏற்றவாறு அதிர்வு அடைகின்றன. இவற்றால் கம்பங்களின் முனையில் கம்பிகள் வலிவிழந்து உடை டந்துபோக நேரிடும். இந்த அதிர்வுகள் கம்பங்களை அல்லது கம்பிகளின் பிடிப்புத்தானத்தை அடையவிடாமல் தடுப்பதற்கு அதிர்வு ஒடுக்கக் கருவிகள் பயன்படு கின் றன. மின் பாதைக்கம்பி அதிகஎடையுள்ள உருளைகள் உருளைகளின் உள்ளே உள்ள முருக்கேறிய கம்பிகள் படம் 5. ஸ்டாக்பிரிட்ஜ் ஒடுக்கல் கருவி ஸ்டாக்பிரிட்ஜ் ஒடுக்கல் கருவி. இக்கருவியில் ஒன்று அல்லது இரண்டு அடி நீள முறுக்கேறிய மின் கடத்தியுடன் எடை மிகுந்த இரு உருளைகள் இணைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டது. இதை மின் கம்பங்களுக்கு அல்லது பிடிப்புத்தானத்திற்கு அருகில் இணைப்பதால் கம்பிகளில் ஏற்படும் அதிர் வாற்றலை இவற்றில் உள்ள முறுக்கேறிய கடத்தி உள்ளீர்த்துக் கொள்வதால் மின்பாதைக் கம்பிகளில் அதிர்வு ஒடுக்கப்படுகிறது. இந்த ஸ்டாக்பிரிட்ஜ் ஒடுக்கல் கருவிகளின் எடை 2-16 பவுண்டு வரை இருக்கும். மற்றொரு வெற்றிகரமான ஒடுக்கல் கருவி ஒரு பெட்டியில் எடைகளுடன் கூடிய ஆற்றல் சுருள்களைக் கொண்ட து. இதில் உள்ள மீள் ஆற்றல் சுருள்கள் அதிர்வின் ஆற்றலை ஈர்த் துக் கொள்வதால் மின்பாதைக் கம்பிகளில் அதிர்வு ஒடுக்கப்படுகின்றது. மீள் அலைவுகளின் ஒடுக்கம். அலைவைத் தடுப்பது அல்லது அதில் உள்ள ஆற்றலைப் பரவலாக்கித் அ.க.6-35 ஒடுக்கல் (மின் பொறியில்) 36 திறன் இழக்கச்செய்வது அலைவு ஓடுக்கம் (oscillation damping) ஆகும். எந்த ஓர் அமைப்பிலும் உராய்வின் வலிமை சிறு அலைவுகளின் வேகத்திற்கு எதிர்த் திசையில் அலையும் பொருளின் வேகத்திற்கு நேர் விகிதத்தில் உண்டாகிறது. உராய்வின் வலிமைக்கும் அலைவின் வேகத்திற்கும் உள்ள விகிதம் - R, தடையின் எதிரினம் (negative) எனப் படுகிறது. ஒரு வலிவுள்ள அலைவில் தடைமூலம் ஒடுக்கல் ஏற்படும்போது அதிருந்தன்மை ஏற் படுகிறது. ஒடுக்கப்பட்ட அலைவு. m நிறையுள்ள பொருள் அளவுள்ள விறைப்புடன் (stiffness) அலையவிடப் படும்போது ஒடுக்கல் இல்லாத நிலையில் அலைவின் கோணமாற்று அலைவு எண் (angular frequency) (sm) எனப்படுகிறது. wo => m தடையை ஏற்படுத்துவதன் மூலம் அலைவின் அலைவு எண்ணில் மாற்றம் ஏற்படுவதுடன் காலப் போக்கில் அலைவும் அழிகிறது. ஓர் ஒடுக்கம் ஏற் படுத்தப்பட்ட அதிர்வு வீச்சின் (amplitude) A என்ற உச்ச அளவைக் கொண்ட ஓர் அலைவைக் கீழ்க் காணும் சமன்பாட்டின்படி எழுதலாம். U இதில் 1/ = Ae at Cos wat......... ஒடுக்கல் மாறிவி. யவி என்பது கோண மாற்று வேகம். t காலம். இதேபோல் ஓர் ஒடுக்கம் ஏற்படுத்தப்படாத அலைவை U = A cos w........... என எழுதலாம். U (2) மேற்கண்ட இரு சமன்பாடுகளில் t = 0 என்றால் A என்றாகிறது. சமன்பாடு (1) இல் உள்ள கோணமாற்று அதிர்வு எண் od (அதாவது ஒடுக்கம் ஏற்படுத்தப்பட்ட அலைவின் கோணமாற்று அதிர்வு எண் ஐவிட ஒடுக்கம் ஏற்படுத்தப்படாத அலைவின் கோண மாற்று அதிர்வு எண்ணைவிட எப்போதும் குறைவாக இருக்கும். சமன்பாடு (1) இன்படி அதிர்வு வீச்சின் உச்சம் குறையும்போது காலத்தின் அளவிற்கு ஏற்றவாறு மடங்குகளாகக் (exponentially) குறைகிறது. அப்போது 1 Ο IT R 446 (3) அதிர்வு வீச்சின் உச்சம் அதன் முதல் அளவிலிருந்து இன் பகுதியாகக் குறைகிறது.