பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒண்முகிற்படலம்‌ 547

ஒண்முகிற்படலம் 547 உலோகங்களில் தகைவு மிகும்போ து உலோகங்கள் தம் சோர்வு நிலையை (fatigue) நெருங்கி விடுவதால் உடைந்து விடுகின்றன. இருப்பினும் ஒரு சில உலோகக் கலவைகள் எஃகைவிடப் பாதுகாப்பான தகைவின்போதே மிகுதியான தயக்க விளைவு ஒடுக்கத்தை வெளியிடுகின்றன. அளவுக்கருவி. கால்வனா மீட்டர், மீன்சார அளவுக்கருவி ஆகியவை ஒடுக்கப்பட்ட மின் எந்திர அமைப்புகளின் சிறந்த மாதிரிகளாகும். முள்ளின், தடையின்றிச் செல்லும் காலம் (free period) கருவி யின் சுழல் அமைப்பின் நிலைமத் திருப்புமையையும் (moment of inertia) தொங்கும் தானத்தின் விறைப்பு அல்லது சுருள் வில்களின் விறைப்பையும் பொறுத்த மையும். ஓர் ஒடுக்கம் குறைவான அமைப்பில் மின் சாரம் திடீரெனச் செலுத்தப்பட்டால் முள் சமநிலை அளவைவிட மிகுதியும் தாண்டிச் சமநிலையை மைய மாகக் கொண்டு ஒரு சைன் வடிவ அலைவை ஏற் படுத்தி ஒடுங்குகிறது. மிகவும் ஒடுக்கப்பட்ட அமைப் பில் முள் அடைய வேண்டிய குறியை மிகவும் மெது வாக அடைகிறது. அளவைக் குறிக்கும் காலம் முள் சமநிலையை அடைவதற்குத் தேவைப்படும் நேரத்தின் + 1% ஆகக் கொண்டு மடக்கை குறைவு மாறுநிலை மதிப்பில் 83%ஆக இருக்குமானால் (அதாவது ஒத்த ஒடுக்கம்(relative damping)) குறைந்த அளவைக் காட்டும் காலம் தடையின்றிச் செல்லும் காலத்தில் 67% எனக் கொள்ள வேண்டும். எடுத்துச் செல்ல ஏதுவான திறந்த பலகைகளில் பொருத்தப்படும். கருவிகளின் ஒடுக்கம் காந்த மூலமாகவோ பாகுநிலை மூலமாகவோ இரண்டும் இணைந்தோ ஏற்படுத்தப்படுகிறது. காற்று அடைக் கப்பட்ட ஒரு குறுகிய கருவியினுள் ஒரு தகடு போன்ற பகுதியை அசையவிடும்போது பாகுநிலை ஒடுக்கம் ஏற்படுகிறது. சுழிப்பு மின் ஓட்டத்தால் eddy current) காந்த ஒடுக்கம் ஏற்படுத்தப்படுகிறது. காந்தத் துருவங்களின் இடையில் கம்பிச் சுருள் அல்லது ஓர் உலோகத்தகடு அசையும்போது அக் கம்பிச் சுருள்களில் அல்லது உலோகத் தகடுகளில் சுழிப்பு மின் ஓட்டம் உண்டாகிறது. இந்த அமைப்பு காந்த ஒடுக்கமுடைய தராசுகளில் பயன்படுத்தப் படுகிறது. டி ஆர்சனல் கால்வனா மீட்டர்களில் அசையும் மின் கம்பிச்சுருள்களில் ஏற்படும் மின் தூண்டுதல் காரணமாக ஒடுக்கம் ஏற்படுகிறது. இந்த மின் தூண்டுதல்களின் அளவை அந்த மின்கம்பிச் சுருள் களுடன் மின் தடைகளை வெளிப்படையாக ணைத் துக் கட்டுப்படுத்தி ஒடுக்கத்தின் அளவையும் கட்டுப் படுத்தலாம். நுட்பமான குறுமின்னோட்ட அளவி களில் (மைக்ரோ அம்மீட்டர்களில்) இம்முறை குறைந்த அளவில் பயன்படுகிறது. அ.க. 6-35அ -பொ. இராஜாமணி ஒண்முகிற்படலம் வேறு பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அன்றைக்கிருந்த தொலைநோக்கியால் வானத்தை ஆய்வு செய்த வானியலார். ஒளிராத கோள்கள் மினுமினுக்கும் விண்மீன்கள் தவிர வழக்கத்திற்கு மாறான, புதுமையாகத் தோற்றமளிக்கின்ற சில விண்பொருள்களையும் கண்டனர். குளிர்கால இரவில் படர்ந்திருக்கும் மூடுபனி போல, முகில் போல மங்கலாகக் காட்சியளிக்கும் விண்பொருளைக் கண்டனர். இலத்தீன் மொழியில் முகிலைக் குறிப்பிடும் நெபுலா (nebula) என்ற சொல்லை இவற்றிற்குப் பயன்படுத்தினர். இதுவே ஒண்முகிற்படலம் (nebula) என்று இன்று குறிக்கப்படுகிறது. வானியல் தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப் பட்ட பின், சைமன் மாரியஸ் என்ற அறிஞர், இது போன்ற விண்பொருள்கள் இப்பேரண்டமெங்கும் (universe) இருப்பதைக் கண்டறிவித்தார். பதினெட் டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞரான சார்லஸ் மெசியர் அன்று வரை இனங்கண்டு கொள்ளப்பட்ட ஒண்முகிற் படலங்களின் நிழற் படங்களைத் தொகுத்து வெளி யிட்டார். இந்நூல் இன்றைக்கும் ஒரு மேற்கோள் நூலாகப் பயன்படுகின்றது. இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ள ஒண்முகிற்படலங்கள் அவற்றின் வரிசைப் படி மெசியர்-1. மெசியர் - 2... என்று குறிப்பிடப் படுகின்றன. சுருக்கமாக M-1, M-2 என்று குறிப்பிடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மெசியர் வழங்கியுள்ள ஒண் முகிற்படலங்களில் M-1 என்பது நண்டு வடிவ ஒண் முகிற்படலம் ஆகும். இதை மீஒளிர்மீன் 1054 (super nova 1054) என்றும் குறிப்பிடுகின்றனர். M-13 என்பது ஹெர்குலஸின் சிறு கோளக வடிவ விண்மீன் கூட்டத்தையும் (globular cluster), M-31 ஆன்ற மேடா மண்டலத்தில் உள்ள சுருளி (spiral) ஒண்முகிற் படலத்தையும், M-42 ஓரியனில் உள்ள மிகப் பரந்து விரிந்து கிடக்கும் வளிம நிலை ஒண்முகிற்படலத்தை யும், M-57 கோளொத்த லைரா என்ற வட்ட வளை யமான ஒண்முகிற்படலத்தையும் குறிப்பிடுகின்றன. பின்னர் ஹெர்சல் நுட்ப உணர்வுமிக்க தொலை நோக்கியின் மூலம் மேலும் பல ஒண்முகிற்படலங் களைக் கண்டறிந்து அவற்றை முறையாக அறிவித் தார். இவருடைய கண்டுபிடிப்புகள் சர். ஜான் என்ப வரால் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு டிரியர் என்பவரால் 1888 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டுப் பலதகவல்களுடன் ஒரு முழுமையான பட்டியலாக, விண்மீன் முடிச்சுகள் மற்றும் ஒண்முகிற்படலங்களின் புதுப் பொதுப் பட்டியல் என்ற தலைப்புடன் வெளி யிடப்பட்டது. காண்க, புதுப் பொதுப் பட்டியல்.