பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 ஒண்முகிற்படலம்‌

548 ஒண்முகிற்படலம் பின்னர் இப்பட்டியலில் காணப்படும் வரிசைப் படி ஒண்முகிற்படலங்களை NGC என்ற சுருக்கெழுத் துடன் குறிப்பிடுவது வழக்கமாயிற்று. 1895 ஆம் ஆண்டிலும் 1908 ஆம் ஆண்டிலும் இந்நூலுக்குப் பிற்சேர்க்கைகள் இணைக்கப்பட்டன. சிடெர்பிளாடு, மின்கோவிஸ்கி, ஜான்சன் சார்பெஸ் போன்ற அறிவிய லார்களு ம் ஒண்முகிற் படலங்களின் வகை பற்றிய சிறப்பு நூல்களை வெளியிட்டுள்ளனர். நுட்பஉணர்வுமிக்க வானியல் தொலைநோக்கிகள் மேன்மேலும் வளர்ச்சி பெற்ற பின்பு, முன்பு ஒண்முகிற்படலங்கள் என்று கருதப்பட்ட சில அடுத் தடுத்து அமைந்திருக்கும் தனித்த பல விண்மீன்களின் கூட்டம் என்பது புலனாயிற்று. அப்போது அனைத்து ஒண்முகிற்படலங்களும், புவியைவிட்டு மிகு தொலை வில் இருப்பதால், அவை இவ்வாறு தோற்றமளிக் கின்றனவோ என்ற ஐயத்தை எழுப்பின. ஒண்முகிற் படலங்கள் சில நெருக்கமான விண்மீன்களின் கூட்ட மாக இருப்பினும்,அனைத்து ஒண்முகிற்படலங்களும் அத்தன்மையுடையன அல்ல என்று ஹக்கின்ஸ் (W. Huggins) என்ற அறிஞர் 1864 இல் உறுதியாக நிறுவினார். NGC 6543 என்று குறிப்பிடப்படுகின்ற பொலிவான ட்ராகோவில் ஒண்முகிற்படலம், ஒரு விண்மீனைப் போலத் தொடர் நிற நிரலைப் (continuous spectrum) பெற்றிருந் தாலும் அத்துடன் குறைவான அடர்த்தியில் உள்ள ஒர் ஒளிரும் வளிமத்தின் தனிச் சிறப்பான கெட்டி யான நிற நிரல் வரிகளும் சேர்ந்து காணப்படுகின்றன என்ற உண்மையே அவருடைய கண்டுபிடிப்பிற்குச் சான்றாக அமைந்தது. உள்ள கோள் வடிவ ஒண்முகிற்படலத்தின்பொதுவியல்புகள். ஓர் ஒண் முகிற்படலத்தின் அமைப்பில் பல விண்மீன்களும், விண்மீன் கூட்டங்களும் கூட அமைந்திருப்பதுண்டு. ஓர் அண்டம் முழுதும் ஊடுருவியவாறு காணப்படுவது உண்டு. பொருட்செறிவு மிகமிகக் குறைவெனினும், மிகு பருமன் காரணமாக இவற்றின் நிறை பெரும் பாலும் மிக அதிகமாகவே இருக்கும். எடுத்துக்காட் டாக ஆன்றோமேடாவிலுள்ள M-31 என்ற ஒண் முகிற்படலத்தின் நிறை சூரியனைப் போல 350 கோடி மடங்காகும்; கன்னி (Virgo) விண்மீன் குழு வில் உள்ள NGC-4594 என்ற ஒண்முகிற்படலத்தின் நிறை சூரியனைவிட 3500 கோடி மடங்காகும். இம்மதிப்பீடுகள் கூட ஒண்முகிற்படலத்தின் முழு நிறையையும் குறிப்பிடவில்லை என்று ஐயுறு கின்றனர். ஒண்முகிற்படலத்தின் உருவ அமைப்பு பல வாறாகக் காணப்படுகிறது. அவை சுருளி, நீள்வட்டம் கோளம் ஒழுங்கற்ற உருவ அமைப்புகளுடன் காணப் படுகின்றன. அண்டமான பால்வெளி அண்டம் மட்டுமன்றி மற்ற அண்டங்களிலும் உள்ள பல ஒண் முகிற்படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொது விண் வாக ஒண்முகிற்படலங்கள் தம்மிடம் உள்ள மீனின் ஒளியை எதிரொலிப்பதாலும், சிதறடிப்பதா லும் மங்கலாகக் காட்சியளிக்கின்றன. சில ஒண்முகிற் படலங்களின் சில பகுதிகள் ஒளிபுகாத் தன்மையுடை யனவாகவும் இருப்பதுண்டு. இதனால் அப்பகுதி இருண்டு காணப்படும். அடர்த்தி, ஒளி ஊடுருவும் தன்மை இவற்றிற்கு ஏற்ப ஒண்முகிற்படலங்கள் பல வகைகளில் ஒழுங்கற்ற உருவங்களைப் பெற்றிக்கும். ஒண்முகிற்படல வகைகள். பேரண்ட வெளியில் காணப்படும் ஒண்முகிற்படலங்களை நுணுகி ஆராய்ந்து, அவற்றைத் தளர்வுறு ஓண்முகிற்படலம் (difiuse nebula), மாறு ஒளிர் ஒண்முகிற்படலம் (variable nebula), கோள் ஒண்முகிற்படலம் (plane- tary nebula), மீஒளிர்மீன் என்று பலவாறு வகைப் படுத்தியுள்ளனர். இவற்றுள் தளர்வுறு ஒண்முகிற் படலம்.மாறு ஒளிர் ஓண்முகிற்படலம், மீஒளிர்மீன் போன்றவை அண்ட ஒண்முகிற்படலங்கள் (galactic nebulae) எனப்படும். ஓரளவு கூடுதலான புறப்பரப்புப் பொலிவு மங் கலாகப் படர்ந்திருக்கின்ற முகில் போன்ற அமைப்பு, குறைவான அடர்த்தி, வரையறுக்க இயலாத எல்லையற்ற தோற்றம், ஒரு நீண்ட நெடுக்கையில் வேறுபட்டுக் காணப்படுகின்ற நிறை போன்ற சிறப்புத் தன்மைகளைத் தளர்வுறு ஒண்முகிற்படலங்கள் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஓரியன் ஒண் முகிற்படலம் (orion nebula) ட்ரிஃபிட் ஒண்முகிற் படலம் (trifid nebula) போன்றவற்றைக் குறிப்பிட லாம். இன்று இனங்கண்டறிந்துள்ள ஒண்முகிற் படலங்களுள் பெரும்பாலானவை தளர்வுறு ஒண் முகிற்படலங்களே. இவற்றைத் தனிச் சிறப்பு ஒளி வடிப்பான்களுடன் நீண்ட நேர ஒளிப்பிடிப்புகளால் மட்டுமே இனங்கண்டறிந்து கொள்ள முடியும். இவ்வகையைச் சார்ந்த ஒண்முகிற்படலங்களில் தூசி யும் வளிமங்களும் இரண்டறக் கலந்தோ (எ.கா. ஓரியன் ஒண்முகிற்படலம்) வெறும் வளிமங்கள் மட்டுமோ (எ.கா. கலிபோர்னியா ஒண்முகிற்படலம்) காணப்படுவதுண்டு. ஒண்முகிற்படலத்தின் ஒளிரும் தன்மை அடிக்கடி மாறிக் கொண்டிருப்பதால், அதை மாறு ஒளிர் ஒண்முகிற்படலம் என்று குறிப்பிடுகின்றனர். இவை பெரும்பாலும் விசிறி போன்ற உருவ அமைப்புடன் காட்சியளிக்கின்றன. ஹபிள் மாறு ஒளிர் ஒண்முகிற் படலம் (Hubble's variable nebula), டி. டாரி (t.tauri) ஒண்முகிற்படலம் போன்றவை இவ்வகையைச் சார்ந்தவையாகும். டி. டாரி ஒண்முகிற்படலம் ஒரு விண்மீன் உருவாக்க வழி முறையில் ஈடுபட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. வைராவில் உள்ள வளைய ஒண்முகிற்படலங்கள் மேற்கூறிய ஒண்முகிற்படலங்களிலிருந்து மாறுபட்ட