ஒத்த ஒளிமுறிவின்மை 553
ஒரே முக்கோணத்தில் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு இணையாக வரையப்படும் ஒரு கோடு மற்ற பக்கங்களையும் வெட்டுவதால் உண்டாகும் முக்கோணம் பெரிய முக்கோணத்திற்கு ஒப்புமை யாகிறது. படம் 4 இல் DE, BC க்கு இணையாகவுள்ளது. முக்கோணங்கள் ABC யும் ADE யும் வடிவொத்தவை யாகும். பங்கஜம் கணேசன் ஒத்த ஒளிமுறிவின்மை இரு கண்களின் ஒளி முறிவுத் தன்மைகள் வேறு வேறாக இருந்தால் அதற்கு ஒத்த ஒளிமுறிவின்மை (anisometropia) எனப் பெயர். இது பொதுவாக மரபு வழி வருவதாகும். பொதுவாக ஒத்த ஒளிமுறி வுள்ள இரு கண்களும் இருப்பது மிகவும் அரிது. ஏதோ ஒருவித மாற்றமுள்ளனவாகவே இருக்கும் அதாவது ஒரு கண் சாதாரண பார்வையாயிருந்தால் மற்றது அண்மைப் பார்வை அல்லது மிகை நீளப் பார்வை அல்லது உருட்சிப்பிழைப் பார்வை உள்ள தாகவோ இரு கண்களும் ஒரே அண்மைப் பார்வை அல்லது வேறுபார்வையாயிருந்தாலும் அவற்றின் ஒளிமுறிவின் அளவு வேறுபட்டதாகவோ இருக்கும். இது சிறுவயதினரிடையே பெரும்பான்மையாகவும் காணப்படும். அவர்களின் கண் வளர்ச்சியில் அண்மைப் பார்வை ஊனம் அதிகரிக்கும்போது ஒரு கண் அதிக மாக வளரும். அப்போது அந்தக் கண் மட்டும் மற்றதை விட அதிக ஊனம் உடையதாக இருக்க வாய்ப்பேற்படுகிறது. மேலும் ஒரு கண்புரை எடுக்கும் போதும், ஒரு கண்ணில் அடிபட்டு அதன் வில்லை தானாக அகற்றப்பட்டு அல்லது வில்லையில் ஏற்படும் காயங்களில் உட்கவர்தல் ஏற்படும்போதும் வில்லை யின்மை தோன்ற ஒத்த ஒளிமுறிவின்மை ஏற்படு கிறது. மா றுகண் உண்டாவதற்கும் இது தான் முக்கிய காரணம். இதனால் ஒரு கண்பார்வை, மாறி மாறிய பார்வை அல்லது இருவிழிப்பார்வை என மூன்று விளைவுகள் ஏற்படும். இருகண்களின் ஒளிமுறிவின் அளவு வேறுபாடு அதிகரிக்க அதனால் விழித்திரையில் ஏற்படும் உருவங்களின் அளவும் அதிகமாக வேறுபடு கிறது. வேறுபாடு 0.25 டி ஆனால் உருவங்களின் வேறுபாடு 5% அதிகமாகிறது. பொதுவாக இரு கண்களுக்கு இடையே உள்ள ஒளிமுறிவின் வேறுபாடு 6 டி க்குமேல் மிகுதியாகிவிட்டால் இருவிழிப்பார்வை கிடைக்காமல் போய்விடும். இரண்டு உருவங்களும் ஒரே அளவாயிருந்தால் அவை ஒன்றுக்கொன்று மேலடுக்கப்பட்டு இருவிழிப்பார்வையின் பண்புகளான உள்ள ஒத்த ஒளிமுறிவின்மை 553 உருவங்களின் அகலம், உயரம், ஆழம் ஆகிய முப் பரிமாணங்களையும் உணர முடிகிறது. மேலும் இரண்டு கண்களின் ஏற்பமைவும் ஒரே அளவு உள்ளதாலும் ஒரு கண்ணின் உருவம் சற்றுத் தெளி வாக இருப்பதில்லை. இந்த இருகண்களில் ஒரு கண் அண்மைப்பார்வை. மற்றது தூரப்பார்வையாயிருந் தால் பார்வையின் தூய்மைக்கு ஏற்ப ஒன்று அருகில் பொருள்களைப் பார்ப்பதற்கும் மற்றது தாலைவில் உள்ளதைப் பார்ப்பதற்கும் பயன்படும். து மாறி மாறிப் பார்வை எனப்படும். இந்த அளவு ஒரு கண்ணில் மிக அதிகமாயிருந்து அதுவும் சிறு குழந்தையிடமாயிருந்தால் அக்குழந்தை நல்ல பார்வை உள்ள கண்ணால் மட்டும் பார்த்து அதை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, பார்வைத் தெளி வில்லாத கண்ணைப் பயன்படுத்தாமல் விட்டுவிட நாளடைவில் அந்த கண் பார்வையின்மை நிலையை அடையும். மருத்துவம். இதற்குச் சரியான மூக்குக் கண்ணாடி போடவேண்டும். இரண்டு கண்களையும் நன்றாக ஆய்வு செய்து அதன் ஒளிமுறிவுத் தன்மைக்கேற்ற சரியான வில்லை கொடுத்து விழித்திரையில் உரு வங்கள் நன்றாக விழுமாறு சரி செய்யவேண்டும். இரு கண்களும் ஒளிமுறிவு வேறுபாட்டுக் குறைவுடன் இருந்தால் இந்த மருத்துவம் மிகவும் பயன் அளிக் கும். ஒரு கண்புரை எடுத்தவர்களுக்கு அதிக அளவுள்ள குவிவில்லையைப் பயன்படுத்த நேரிடும். அப்போது அந்த வில்லையின் ஒளித்திரை மூலம் உருவங்களைப் பார்க்கும்போது பட்டகத்தின் மூலம் பார்க்கும் ஒளிமுறிவுத்தன்மைகள் ஏற்படும். ஆகவே தான் இவர்களுக்கு மூக்குக் கண்ணாடி அணியக் கொடுப்பதில்லை. கண்களின் குழந்தைகளுக்கு, முக்கியமாகக் பார்வையை முழுதுமாகச் சீர் செய்து கண்ணாடி கொடுத்து அவர்களை எப்போதும் அணியச் சொல்ல வேண்டும். வயது அதிகம் உடையவர்களுக்குச் சிறிது அளவு குறைந்த மூக்குக் கண்ணாடி அணியக் கொடுக்க லாம். இவர்களுக்குப் பட்டகம் அமைத்த வில்லைகளை கொடுத்து இருவிழிப்பார்வையை ஏற்படுத்தலாம். தூரப்பார்வைக்குத் தனியாகவும் படிப்பதற்குத் தனி யாகவும் என இரு மூக்குக் கண்ணாடிகள் கொடுக்க லாம். மாறி மாறிப் பார்வை உள்ளவர்கள் அதாவது ஒரு கண் மிகை நீளப்பார்வை மற்றது அண்மைப் பார்வை உள்ளவர்கள் இதன் மூலம் ஒன்றைத் தூரப் பார்வைக்கும் மற்றதைக் கிட்டப்பார்வைக்கும் பயன் படுத்துமாறு கூறலாம். தற்சமயம் அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது. இதன்மூலம் விழிவெண்படலத்தி லிருந்து ஒரு பகுதியை எடுத்து, குளிரவைத்து, அதைத் தேவைப்படும் அளவுக்கு இழைத்து மீண்டும் அதைக் கண்விழி வெண்படலத்துடன் இணைத்து விடு கின்றனர்.