ஒத்திசைவு 559
களை அதிர்வுறும் ஒவ்வோர் அமைப்பும் ஓர் இயலதிர் வெண் கொண்டது. அவ்வமைப்பை அதிர்வடையச் செய்தால், அதன் வீச்சு சிறிது சிறிதாகக் குறைந்து இறுதியில் அதிர்வு நின்று விடுகிறது. அதன் அலைவு சீரிசை நிலை நிறுத்த வேண்டுமானால், இயக்கங்கொண்ட ஒரு புறவிசையை அதன்மீது திணிக்க வேண்டும். சிறிது நேரத்தில் அவ்வமைப்பு புறவிசையின் அதிர்வெண்ணுடன் அதிர்வுறும். இது திணிப்பு அதிர்வு (forced vibration) எனப்படும். அமைப்பின் அதிர்வெண் புறவிசையின் அதிர் வெண்ணுக்குச் சமம் எனின், ஒத்திசைவு தோன்றி அமைப்பின் வீச்சு பெருமமாகிறது. அதிர்வுற்ற ஓர் இசைக் கவையை நீர் கொண்ட ஒரு குழாயின் திறந்த முனையருகே வைத்து, நீர் மட்டத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்தால், குழாயில் உள்ள காற்றுத் தம்பத்தின் நீளம் அதிகரித்துக் கொண்டே வரும். காற்றுத் தம்பத்தின் அதிர்வெண்ணும் இசைக்கவையின் அதிர்வெண்ணும் சமமாக இருக்கும் நிலையில் ஒத்திசைவு ஏற்பட்டு ஒலி பெருமமாகக் கேட்கும். அதிர்வுறும் அமைப்பின் அலைவைக் காக்கப் புற விசையின் அதிர்வெண்ணைச் சிறுகச் சிறுக அதிகரித் தால் திணிப்பு அலைவுகளின்வீச்சுப்படத்தில் காட்டி யுள்ளது போல் பெரும நிலையை அடைந்து மீண்டும் குறையத் தொடங்கும். வீச்சு பெருமமாக இருக்கும் நிலையில் அதிர்வுறும் அமைப்பின் அதிர்வெண்ணும் புறவிசையின் அதிர்வெண்ணும் சமமாக இருக்கும். வீச்சு ஒத்திசைவு முடுக்கிக் கதிர்வீச்சு 559 அதிர்வுறும் அமைப்பின் வீச்சு மிக விரைவாகக் குறைந்தால் ஒத்திசைவு கூர்மையானது எனலாம். ஒத்திசைவுக் கூர்மைக்கு, அமைப்பின் ஒடுக்கல் எண் குறைவாக இருக்க வேண்டும். சுரஅளவி ஆய்வில் சுரஅளவிக் கூம்பின் ஒடுக்கல் எண் குறைவாக இருப்பதால் ஒத்திசைவு கூர்மையாக இருக்கிறது. அதிர்வுறும் அமைப்பைப் பற்றி அறிவதற்கு ஒத்திசைவு அதிர்வெண் (resonant frequency) ஒத்திசைவுக் கூர்மை ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். ஓர் அதிர்வுறும் அமைப்பு ஒத்திசைவுக் கூர்மை பெற்றிருந்தால், கவனத்துடன் இசைவு செய்தல் வேண்டும். செந்தர அதிர்வெண் (standard frequency) கொண்ட ஒரு பொருள் ஒத்திசைவுக் கூர்மை பெற்றிருத்தல் முக்கியம். அப்போதுதான் அதன் உச்ச மதிப்பை எளிதில் கணக்கிட இயலும். சில இடங்களில் ஒத்திசைவு தேவையற்றது. இசையரங்குகளிலும், கலையரங்குகளிலும் நீக்கப்பட வேண்டிய சில குறைபாடுகளில் ஒவ்வாத ஒத்திசைவும் ஒன்று. அரங்கின் குழிவுப்பகுதி பொந்து சுவர் கூரையிலுள்ள மறைவிடம் இடுக்கு, அங்கே வைக்கப் பட்டிருக்கும் அழகுப்பொருள் தோரணம் போன்றவை அரங்கில் தோற்றுவிக்கப்படும் ஒலியோடு சேர்ந்து ஒத்திசைக்கும். இதனால் இசையின் இனிமையும் தரமும் பாதிக்கப்படும். அரங்கில் நிறைய திரைச் சீலைகளைத் தொங்கவிடுவதன் மூலம் ஒத்திசைவை நீக்கலாம். இசையை ஒலிப்பதிவு அல்லது ஒலிமீட்பு செய்யும் போதும், எந்த அதிர்வெண்ணில் ஒளிப்பதிவு அல்லது ஒலி மீட்பு செய்யப்படுகிறதோ அதைத் தவிர்த்த பிற அதிர்வெண்களில் அதிர்வுறும். அமைப்பின் ஒத்திசைவு இருக்கும்படிச் செய்ய வேண்டும் அல்லது மிகவும் ஒடுக்கமுற்ற அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். ஒலியின் பண்பை அறிய ஒத்திசைவி (resonator) பயன்படுகிறது. ஹெம்ஹோல்ட்ஸ் என்பார் வெவ்வேறு அடிப்படைச் சுரங்களைத் தோற்றுவிக்கக் கூடிய பல ஒத்திசைவிகளின் துணை யோடு இசைக்கருவி ஏற்படுத்தும் மேற்சுரங்களைப் பகுத்துணர்ந்தார். மூ.நா.சீனிவாசன் கும். அதிர்வெண் இந்நிலையில் ஆற்றல் உச்ச நிலைக்கு அதிகரிக் இந்நிகழ்ச்சிக்கு இசைவு செய்தல் (tuning) எனப் பெயர். புறவிசையின் அதிர்வெண் சிறிது மாறுபட்டாலும் ஒத்திசைவு பாதிக்கப்படும். ஒத்திசைவு முடுக்கிக் கதிர்வீச்சு மின்னேற்றம் பெற்ற துகள்களின் திசைவேகத்தைப் பல மடங்கு பெருக்கவலில ஓர் எந்திரம் ஒத்திசைவு முடுக்கி (synchrotron) ஆகும். துகள், எலெக்ட்ரானாக இருப்பின், அதை எலெக்ட்ரான் ஒத்திசைவு முடுக்கி என்பர். ஒத்திசைவு முடுக்கியில் இரண்டு புலன்கள் செயல்படுகின்றன. துகள்களை ஒரு குறிப்பிட்ட