574 ஒத்தியங்கி, மடங்கி நிகழ்த்தல்
574 ஒத்தியங்கி, மடங்கி நிகழ்த்தல் மாறு மின்னோட்டம் மின்னாக்கி மடங்கி ஒத்தியங்கி படம் 6. மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கியின் அமைப்பு. இது மின்னாக்கி மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கி (repeater synchro ). மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கியை, ஒத்தியங்கி மின் னோடி என்றும் சொல்லலாம். வெளித்தோற்றத்திலும் மின்னியல் அடிப்படையிலும் ஒத்தியங்கியைப் போலவே இருக்கும். ஆனால் மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கியின் சுற்றகம் அதிர்வைக் கட்டுப்படுத்தும் (vibration damper) அமைப்பைக் கொண்டிருக்கும். ஒரு கட்டுப்பாட்டு அமைப்பில் மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட மடங்கி நிகழ்த் தும் ஒத்தியங்கியைப் படம் 6இல் காணலாம். இந்த அமைப்பின் மின்னாக்கியில், உண்டாகும் காந்தக் கதிர்கள் மடங்கியில் உள்ள நிலையான பகுதியில் படும். இது மின்னாக்கி - கட்டுப்பாட்டு மின் மாற்றியின் அமைப்பில் விளக்கியது போலவே செயல் படும். மடங்கியின் சுற்றி, மின்னோட்டத்தைத் தூண்டியிருப்பதால் அதுவும் காந்தக் கதிர்களை உண்டாக்கும். இதனால் உண்டாகும் காந்த இழுப்பு ஆற்றலால் மடங்கியின் சுற்றகம் திருக்கம் (torque) பெற்று மேலே குறிப்பிட்ட இரு காந்தக் கதிர்களின் கற்றையை ஒன்றாக்கும். இதனால் இரு அமைப்பு களின் சுற்றுகிற பகுதி இணையாக இருக்கும்போது ஒரு சமநிலையை அடைகிறது. மின் கண்ணோட்டப் படி மடங்கி, மின்னாக்கியைப் போலவே இருப்பதால், மின்னாக்கியின் சுற்றுகிற பகுதிக்கும். மடங்கின் சுற்று கிற பகுதிக்கும் ஏற்படும் வேறுபாட்டு அளவிற்கேற்பத் திருக்கம் ஏற்படுகிறது. இதனால் இந்த அமைப்பு. திருக்கத்தை அனுப்பும் அமைப்பாக பணியாற்றுகிறது. இந்த அமைப்பில் உண்டாகும் திருக்கம் சைன் (sine) அலைகள் போல் மாறி இருக்கும். அதாவது sin p ஆக இருக்கும். இதில் 1 என்பது இரு சுற்றும் பகுதி களுக்கு இடையே உள்ள கோணம் ஆகும். இந்த இடைக்கோணம் 8 மிகச் சிறிய அளவில் இருக்கும் போது திருக்கம் 8-க்கு நேர்விகிதத்தில் இருக்கும். ஆதலால் இவ்விரு அமைப்புகளும் ஒரு கம்பிச்சுருள் கொண்டு இணைத்ததுபோல் செயல்படும். மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கியின் பயன்பாட் டைப் பார்க்கும்போது, மிகு தொலைவில் உள்ள கருவியின் நிலையைக் காட்ட உதவும். இதில் உண் டாகும் பிழையைக் குறைக்க இந்த அமைப்பை மணி தாங்கியில் (ball bearing) பொருத்தி உராய் வைக் குறைக்க வேண்டும். இந்த மடங்கியில் மின் ஒடுக்கமும் (electrical damping) குறைவாக இருப்ப தால் மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கி நீண்ட நேரம் ஊசலாடிக் கொண்டிருக்கும். இந்த அசைவு விரைவில் நிற்க வேண்டுமானால் அதிர்வு ஒடுக்கியைப் (vibration damper) பொருத்த வேண்டும். ஆதலால் மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கியை, அதிர்வு ஒடுக்கியைப் பொருத்தி ஒத்தியங்கி மின்னாக்கியாகப் பயன்படுத்த லாம். ஒத்தியங்கி, மடங்கி நிகழ்த்தல் எ.கிருஷ்ணன் இது ஒரு வகை மின் எந்திரக் கருவிக்கு வழங்கப் படும் பெயராகும். ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்தியைக் கொண்டு செல்லப் பயன் படும் சுட்டிக்காட்டும் அமைப்பில் மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கி (repeator synchro) பயன்படுகிறது. ஓர் எந்திர நிலைக்குச் சமமான மின் அழுத்தத்தை உண்டாக்கவும் சில வகையான மின் அழுத்தத்திற்குச் சமமாக எந்திர நிலையை மாற்றவும் இந்த ஒத்தி யங்கி பயன்படுகிறது. இரு ஒத்தியங்கிகளின் நிலை யான சுற்றுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, அவற்றின்