ஒத்தியங்கி, மடங்கி நிகழ்த்தல் 575
சுழலிகள் ஒரே மாறு திசை மின்னோட்டத்தால் இயக்கப்பட்டால் ஓர் ஒத்தியங்கிச் சுழலியின் அசைவு மற்றோர் ஒத்தியங்கியின் சுழலியையும் அதே அளவு அசைய வைக்கும். இயக்கப்படும் ஒத்தியங்கி (driven synchro) இயக்கும் (driving synchro) ஒத்தியங்கிபோல் செயல்படுகிறதா என்பதைச் சுட்டிக்காட்ட இத் தகைய ஒத்தியங்கி பயன்படுகிறது. ஒரு கருவியின் நிலையைத் தொலைவில் இருந்து (remote) சுட்டிக் காட்ட இயங்கும் ஒத்தியங்கியின் சுழலி அக் கருவியுடன் எந்திர முறையில் இணைக்கப்பட வேண்டும். இயக்கப்படும் ஒத்தியங்கியின் சுழலி எந்திரத்தின் முகப்புத் தட்டிலுள்ள குறியீட்டு நிலை யில் இயங்கும். தொலைவிலுள்ள கடற்படைத் துப்பாக்கியின் நிலையைச் சுட்டிக் காட்டுவதற்கு மிகுதியாகப் பயன் படும் மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கியின் அமைப்பைப் படம் 1 இல் காணலாம். மேற்காணும் அமைப்பில் மின்னாக்கியின் சுழலி துப்பாக்கிப்பீடத்திலும், மின்னோடியில் சுழலி ஒத்தியங்கி, மடங்கி நிகழ்த்தல் 575 சுட்டிக்காட்டும் கருவியின் முள்ளுடனும் இணைக்கப் படும். இரு சுழலிகளுக்கும் இடையே கோண வேறு பாடு இருக்குமானால் (8,8") ஒத்தியங்கிகளின் நிலைச்சுற்றுகளுக்கிடையே மின்னோட்டம் ஏற்பட்டு அதன் மூலம் இரு ஒத்தியங்கிச் சுழலிகளுக்கிடையே கோண வேறுபாடு இல்லாத அளவுக்கு (0′ = 0) மின்னோடியின் சுழலியை நகர்த்தி ஒரே சீரான நிலையில் சுழல வைக்கிறது. இந்த அமைப்பின மூலம் எந்த ஓர் எந்திர நிலையின் அச்சையும் எந்திரத் தொடர்பு உள்ளதைவிட மிகுதியான தொலைவிற்கு இயங்க வைக்க இயலும். . படம்-2 இல் இரண்டு ஒத்தியங்கி அச்சின் கோண வேறுபாட்டைத் தொலைவிலிருந்து சுட்டிக்காட்டும் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் மின்னாக்கிக்கும் மின்னோடிக்கும் இடையில் ஒரு வேறுபாட்டு மின்னாக்கி இணைக்கப்பட்டு, அதன் மூலம் ஒத்தியக்க மின்னாக்கியின் நிலைச் சுற்றில் (S,, Sg, Sg) ஏற்படும் மின் அழுத்தம், வேறுபாட்டு மின்னாக்கிச் சுழலியின் கோண வேறுபாடுகளுக்குத் OR - மாறுமின்னோட்டப்பாதை R₁ 8 ஒத்தியங்கு மின்னோடி S' R'2 ஒத்தியங்கு மின்னாக்கி 8'