36 எக்கைனோகாக்கஸ்
36 எக்கைனோகாக்கஸ் உட உறிஞ்சுகுழாய் இல்லை. இனப்பெருக்க உறுப்புகள் தவிர ஏனைய உள்ளுறுப்புகள் வளர்ச்சி அடைய வில்லை. ஆண்கள் பெண் பொனெல்லியாவின் லுக்குள்ளேயே வாழ்கின்றன. பெண் பொனெல்லி யாக்கள் ஒரு மீட்டர் நீளம் கூட வளரும். அனைத்து உறுப்புகளும் அமைந்துள்ளன. பொனெல்லியாவின் பால் உறுதி குறிப்பிடத்தக்க தாகும். இவை முட்டையிடாமல், இளம் உயிரிகளை வெளியிடும். கடல் நீரில் இடப்பெற்ற இளவுயிரிகள் பிற பெண் பொனெல்லியாவின் அருகில் வரும்போது கவரப்பட்டு, அவற்றின் உடலுக்குள் சென்றுவிடும். இவ்விதம் செல்பவை, ஒருவித வேதிப் பொருளால் தாக்கப்பட்டு, தன்னிச்சையாகக் கடல்நீரில் வாழும் இளவுயிரிகள் பெண்களாக வளர்சிதை மாற்றமுறும். இவ்வாறு ஓர் உயிரியின் பால் அவற்றின் ஜீன்களால் அறுதியிடப்படாமல் சுற்றுப்புறத்தால் அறுதியிடப் படுவதால், இது சுற்றுப்புறப் பால் உறுதி எனப்படும். எக்கியூராக்களின் இரத்தச் சுற்றோட்ட மண்ட லம், மயிர்க்கால்கள், சிறுநீரகக் குழாய்கள் போன் றவை மண்புழுக்களின் உறுப்புகளை ஒத்திருக்கின்றன. ஆகவே இவை வளைதசைப்புழுக்கள் தொகுதியுடன் படிமலர்ச்சித் தொடர்பு கொண்டுள்ளன என்று கரு தப்படுகின்றன. எக்கியூராக்கள் மனிதருக்குப் பெரிதும் பயன்படுவதில்லை. ஒரு சில, தூண்டில் புழுக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எக்கைனோகாக்கஸ் எம். உத்தமன் உருவத்தில் மிகச்சிறிய எக்கைனோகாக்கஸ் கிரான்யு லோசஸ் (Echinococcus granulosus) அல்லது டீனியா எக்கைனோகாக்கஸ் (Taenia echinococcus) என்னும் நாய் நாடாப் புழு பெருமளவில் பாலிலி இனப் பெருக்கம் செய்கிறது. து ஒரு சில மில்லி மீட்டர் நீளமே இருக்கும். பிற நாடாப் புழுக்களிலுள்ளது போலவே ராஸ்டெல்லத்தையும் நான்கு கிளாட்டிடுகளையும் கொண்டது. ஆனால் முட்டைக்கூடுகள் பெரியவை. கொக்கிகள் கொண்ட கருக்கள் அடங்கிய முட்டைகள் உணவுப் பொருள்கள் மூலமாகப் பல் பாலூட்டிகளின் உடலை அடை கின்றன. பாலூட்டிகள் இடைநிலை விருந்தோம்பிகள் ஆகின்றன. முட்டையோட்டை விட்டு இடைநிலை விருந்தோம்பியின் புரோ இதன் வெளிவரும் கரு இரத்தக் குழாய் களைத் துளைத்துச் சென்று, இரத்தத்துடன் கல் லீரலை அடைகிறது. கல்லீரல் மட்டுமன்றி உடலில் வேறு பகுதியிலும் தங்கக் கூடும். தாய்க்கூடு (mother dyst) தன் பையை வளர்க்க நீண்ட நாளாகும். இறுதியாகப் பையின் உட்பகுதியிலிருந்து பல சேய்க் கூடுகள் உண்டாகின்றன. ஒவ்வொன்றும் பல தலை பையில்லாமல் களை (scolex) முகிழ்க்கும். இவை சிஸ்டி செர்க்காய்டுகளாக வளர்கின்றன. சிஸ்ட்டி செர்க்காய்டுகள் விருந்தோம்பியின் உறுப்புகளில் உதிர்ந்துவிடுகின்றன. இந்த உறுப்பை நாய் விழுங்கி னால் நாயின் உடலில் வளர்ந்து இது முதிர்நிலை யடைகிறது. எக்கைனோகாக்கஸ்களின் கூடுகளுக்கு ஹைடாட்டிட் கூடு அல்லது கட்டி என்று பெயர். தனால் உண்டாகும் நோய் ஹைடாட்டிட் எனப் படும். இந்நோய் மாடு, ஆடு, பன்றி போன்ற வற்றிலும் காணப்படுகிறது. இந்தக் கட்டியை உண வோடு உட்கொள்ளும் கால்நடைகளில் நோய் இடை நிலை சாதாரணமாகக் காணப்படுகிறது. வெட்டி அகற்றப்படுமிடத்தில் இந்தக் கட்டிகளை முறை யாகத் திரட்டி அழித்தால் நோய் பரவாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நாய்களுக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொடுத்தால் நாடாப் பூச்சியை ஒழிக்கலாம். வாழ்க்கை வரலாறு. நாய்களிடமிருந்து வெளிப் படும் முட்டைகள் உணவுப் பொருள், நீர் இவற்றுடன் கலந்து கால்நடை மனிதர்களின் வயிற்றில் தங்க ஈரல், இரத்தக் குழாய் வழியாகச் செல்கின்றன. அங்கிருந்து சில முட்டைகள் நுரையீரல், இதயம், மூளை, கல்லீரல் போன்ற பகுதிகளில் சென்றடை கின்றன. பின்பு அவை எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந் துள்ளனவோ அப்பகுதிக்கேற்ப வாழத் தொடங்கு கின்றன. ஆடு, மாடுகளை உணவுக்காக வெட்டும் போது இந்தக் கட்டிகளை உடனடியாகத் திரட்டி அழிக்காவிட்டால் நாய், ஓநாய், நரிகள் போன் றவை உட்கொள்ளும்போது இந்தக் கட்டியில் இருக்கும் இடைநிலைப் பூச்சி வளர்ந்து சிறு குடலில் முழுப்பூச்சியாக மாறும். ஒரு கட்டியிலிருந்து ஏறத்தாழ 40-50 பூச்சிகள் உண்டாகும். ந்தக் கட்டிகள் மனிதர்களுக்குச் சாதாரணமாகக் குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட மிகு வாய்ப் புள்ளது. ஏனெனில் குழந்தை சாதாரணமாக நாய் களுடன் விளையாடும்போது அதன் மயிரில் ஒட்டிக் கொண்டிருக்கும் முட்டைகள் குழந்தைகளின் கை மூலம் நேரடியாக வாயிலேயே செல்லும். வேறொரு விதமாகவும் இது மனிதர்களுக்குப் பரவும். சாதாரணமாக ஆடுகளை ஓட்டிச் செல்லவும், காப்பாற்றவும் உடன் செல்லும் நாய் மலம் கழிக்கும் இடத்தில் ஆடுகள் படுத்து எழுந்திருக்கும்போது இந்த முட்டைகள் முடியில் ஒட்டிக் கொண்டு ஆட்டி டையர்கள் ஆடுகளைத் தூய்மை செய்யும்போது முட்டைகள் உள்ளே சென்று இந்நோய் பாதிப்பை ஏற் படுத்துகிறது. எனவே இந்த நோய் ஒரு நாடாப் பூச்சி யின் இடைநிலைப் பருவத்தால் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பரவுகிறது. உணவுப் பொருள் களில் கரப்பான், எலி ஆகியவற்றின் எச்சத்திலுள்ள