578 ஒத்தியங்கு கொண்மி
578 ஒத்தியங்கு கொண்மி பணிமுந்தும் மின்சுமையை எடுத்துக்கொள்வதிலேயே இருப்பதால், அவை ஒத்தியங்கு கொண்மிகள் (syn- chronous condenser) என்று குறிப்பிடப்படுகின்றன. நெடுந்தொலைவு மின்செலுத்தக் கம்பித் தொடர் களில் இத்தகைய கொண்மிகள் அடிக்கடி பிந்தும் சுமையைச் சுமந்து இயங்குகின்றன. மின்திறன் அமைப்பின் திறன் கூற்றை ஒத்தி யங்கு கொண்மிகள் மூலமாக ஒற்றை அளவுக்கு உயர்த்தும் முறை. 1 Is இயங்கிக் மின்சுமை 81 படம் I இல் மின்னழுத்தம் V-இல் மின் னோட்டம் 11 ஐ எடுத்துக்கொண்டுதிறன்கூறுCost, அளவு பிந்தும் மின்னோட்டத்துடன் கொண்டு இருக்கும் ஒரு முத்தறுவாய் (three phase load) காட்டப்பட்டுள்ளது. மின்திறன் அமைப்பின் மின்திறன் கூற்றை ஒற்றை அளவுக்கு உயர்த்தக்கூடிய ஓர் ஒத்தியங்கு கொண்மியின் வரை யளவைத் (rating) தீர்மானிக்க வேண்டும். மின்திறன் அமைப்பை ஒரு முக்கிளை இணைப்புக் (star conne- cted) கொண்டதாக எடுத்துக் கொள்ளலாம் என் பது பொதுநிலை மையத்தில் உள்ள (neuitral) மின் அழுத்தமாகும். படம் 1 (ஆ)-வில் காட்டப்பட்டுள்ள திசையன் விளக்கப்படத்தில் (vector diagram) சுமை யின் மின்னோட்டம் I, (load current) - ஐ 6, அளவு பிந்துகிறது (lag). மின்னோட்டத்தை, இரு உறுப்பு களாக (components) பிரிக்கும்போது ஒன்று செயல் பாட்டு உறுப்பாக I cos g என்றும் மற்றொன்று செங்குத்து உறுப்பாக (quadrature component) (sin) என்றும் பிரிகின் றன. = ஒத்தியங்கு கொண்மி சுமை இல்லாமலும் செங் குத்து மின்னோட்டத்திற்கு (quadrature current) 90° கூட்டியும் (added at right angles) இயங்கிக் கொண் டிருக்கும்போது, அதன் செங்குத்து மின்னோட் டத்தைவிடச் (quadrature current) செயல்பாட்டு மின்னோட்டம் சிறிய அளவில் இருக்கும். அதனால், ஒத்தியங்கு கொண்மியின் மொத்த மின்னோட்டத் தைக் கணக்கிடுவதற்கு இச் செயல்பாட்டு மின் னோட்டத்தைத் தள்ளிவிடலாம். . அதனால் அளவு (KVA திறன்கூறு ஒற்றை அளவில் இருக்கும்போது. காண்மியின் மின்னோட்டம் (I)ம் செங்குத்து மின்னோட்டம் பெருமளவில் (substantially) ஒன்றாக இருக்கும். ஆனால் முந்தல் மின்னோட்டத்துடன் (leading) இயங்கிக் கொண்டிருக்கும். ஒத்தியங்கு கொண்மியின் மின்சுமை rating) Vols = Val, (Voltampere/pulse) ஒத் தியங்கு கொண்மியால் அதன் இழப்புகளைச் சீராக்க சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் செயல்பாட்டு மின்னோட்டத்தை I, உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மொத்தச் செயல்பாட்டு மின்னோட்டம் சிறிதளவு உயரும். I₁ = IL Cos 8₁ I2 = Iu Sin 01 Vn I, Iz படம் 1 (ஆ). ஒத்தியங்கு கொண்மியின் உதவி யால் திறன் கூற்றை 1-க்கு உயர்த்து வதற்கான திசையன் விளக்கப்படம் திறன்கூற்றை ஒற்றை அளவுக்கும் (unity) குறை வாகக்கொண்டு வர விரும்பினால், குறைந்த அளவு திறனுடைய ஒத்தியங்கு கொண்மிகளைப் பயன்படுத் தலாம். நடைமுறையில் சாதாரணமாக திறன்கூற்றை 0.9 அல்லது 0.95 -க்கு மேல் உயர்த்துவது ஏற்ற தாகும். ஏனெனில் இந்த அளவுக்கு மேல் திறன் கூற்றை உயர்த்துவதால் பயன் ஏற்படுவதில்லை. மேலும் திறன்கூற்றில் சில இறுதி அளவு விழுக்காடு உயர்வு ஏற்படுத்துவதற்குக் கொண்மியின் கொள்ளள வைப் (condenser capacity) பலமடங்கு உயர்த்த வேண்டும். படம் 2(அ) மற்றும் (ஆ)வில் காட்டப்பட்டுள்ள படிசுமைக்கூறு (load factor) Cosl, ஆகும். ஒத்தியங்கு கொண்மியின் சுமை சுழி என்றும் அதனுடைய இழப்புகள் தள்ளப்படும் அளவில் உள்ளன என்றும் எடுத்துக்கொள்ளலாம். சுமைமின்னோட்டம் I, =ob இரு உறுப்புகளாக I =OW என்றும் I,=ab என்றும் படம் 1 (அ)-வில் காட்டியவாறு பிரிக்கப்பட்டுள்ளது.