584 ஒதிய மரம்
584 ஓதிய மரம் பெயர். து அனக்கார்டியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இனத்தில் 15 சிற்றினங்கள் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, தாய் லாந்து, சீனா, இந்தோசீனா. பர்மா, இலங்கை இந்தியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் லேன்னியா கோரமண்டேலிகா என்ற சிற்றினம்தான் வளர்கிறது. இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் இமயமலைப் பகுதியில் 1500 மீட்டர் உயரம் வரையிலும் வளர் கிறது. இம்மரம் தமிழ் நாட்டில் வறண்ட தென் மாவட்டங்களில் செழிப்பாக வளர்கிறது. ஓதியன் அனைத்து மண்வகைகளிலும் வளரும் தன்மையுடை யது. பாதுகாத்து வளர்க்கப்பட்டால் இம்மரம் மீட்டர் உயரமும் 2 மீட்டர் சுற்றளவும் பெரிய மரமாக வளரக்கூடும். க 24 கொண்ட சிறப்புப் பண்பு. ஓதியன் ஓர் இலையுதிர் வகையைச் சேர்ந்தாலும் இது தமிழ் நாட்டில் ஆண்டு முழுதும் பசுமையாகக் காணப்படும். இது தடித்த மென்மையான கிளைகளுடனிருக்கும். இலைகள் கூட்டிலைகளாக மாற்றடுக்கில் இணையாக இல்லாத சிறகுக் கூட்டிலைகளாகக் காணப்படும். சிறு கிளை களின் நுனியில் கொத்தாக இருக்கும். சிற்றிலைகள் முழுமையாக எதிர் அடுக்கில் அமைந்தவை. லை யடிச் சிதல்களற்றிருக்கும். மஞ்சரி. பானிக்கள் மஞ்சரிகளில் கொத்தாக இருக்கும். மலர்கள் சிறியவை; ஒரு பால், அரிதாக இருபால் மலர்கள் கொண்டவை. குறுகிய காம்பு களுடன் உச்சியில் அமைந்திருக்கும். புல்லி. 4 மடலானவை. நிலையானவை, மடல்கள் வட்டமாகவும், திருகு, இதழமைவிலும் இருக்கும். அல்லி. 4 திருகு இதழமைவான வட்டத்தட்டு வளையம் போன்றவை, 8 மடலால் ஆனவை, மகரந் தத்தாள், 8, வட்டத்தட்டினடியில் செருகப்பட்டி ருக்கும். மகரந்தக்கம்பி. ஆண் மலரில் சமமில்லாமலும், மெலிந்தும் இருக்கும். மகரந்தப்பைகள் முட்டை வடிவமாகவோ ஈட்டிமுனை வடிவமாகவோ இருக்கும். பெண் மலரில் மிகவும் குட்டையாகவும், சிறியவை யாகவும், காணப்படும். மகரந்தப்பை. சிறியவை, வளமற்றவை. சூற்பை ஆண்மலரில் சிதைந்ததாயிருக்கும். சூல்தண்டு. 4. பெண் மலரில் முட்டை வடிவ மாகவோ சற்று உருண்டை வடிவமாகவோ இருக்கும். 4 அல்லது இதற்கு மேலுமான ஒற்றை அறைகள் கொண்டிருக்கும். 4 சூல்தண்டுகள் நன்கு தெளிவாக நான்கு மூலை களிலிருந்தும் தோன்றியிருக்கும். சூல்முடி சிறிய தாகவும் கேடயம் போன்றும் இருக்கும். ஊசல் போன்ற சூல்கள் கொண்டவை. கனி ஒரு சிறிய N ஒதியன் இருபால்பூ 2,3,4, 10 12 13 11 1. கொப்பு சூலகம் நீள்வெட்டுத் தோற்றம் 5,6 ஆண் இணை உறுப்பு (மகரந்தக் கோசம்) 7. புல்லி, புறஇதழ் 8, புல்லி வட்டம் 9,43 - மலர் 10,12 அல்லி இதழ் 11. மஞ்சரி முட்டை அல்லது நீள் வட்டமாக மெலிந்து சதைப் பற்றாக இருக்கும். உள் ஒடு கடினமாயிருக்கும். ஒரே ஓர் அறை மட்டும் விதை கொண்டிருக்கும். விதை ஆழ்ந்த தோற்றமுடையது. புற உறை, சவ்வு போன்றது. மரப்பட்டை தடிப்பானது, சாம்பல் நிற மாக வழவழப்பாயிருக்கும். மரத்தின் சட்டை சிவப்பு அல்லது பழுப்பு நிறமும் மிகுதியான பசையும் கொண்டது. நன்கு வளர்ந்த ஒதியமரம் வீட்டு வேலை களுக்கும் பொருள் அனுப்பும் பெட்டிகளுக்கும், வண்டிச்சக்கரச் சட்டத்திற்கும், சிறிய பரிசல்கள் செய்வதற்கும் உதவும். மேலும் ஒட்டுப்பலகை (plywood) செய்யவும். பென்சில் தீக்குச்சிகள்