பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பிணைமை 593

பனை காளைக் கன்றின் தோலுக்கும் செய்யப்படுகிறது. இந்தத் தோல்கள் பளபளப்பூட்டும் முறையில் ஒப் செய்ய ஏற்றவையாக அமைகின்றன. இவ் வகை ஒப்பனையின் முதல் தேவை புரதப் பொருள் களான கேசின் (casein), சாயம், வண்ணப் பொருள் களான நிறமிகள் ஆகியவை ஆகும். இந்த ஒப்பனை முடிந்தவுடன் ஃபார்மலின் கொண்டு கேசினை முறிப் பர். தற்சமயம் புரதப் பொருள்கள் இல்லாமலேயே டுரசின், சாயம் போன்ற பொருள்களைக் கொண்டு இந்த பளபளப்பூட்டும் ஒப்பனை செய்யலாம். இதற் குப் பளபளப்பூட்டும் பொறி தேவையில்லை. நேரடி யாக அழுத்தம் கொடுக்கும் பொறியில் சாதாரணத் தகடு கொண்டு அழுத்தி எடுத்தாலே ஒப்பனை சீராகும். தோல்களை ஒப்பனை குங்கிலியம் கொண்டு செய்தல். அக்ரிலிக் ரெசின் பால்மம் (acrylic resin emulsion) கொண்டு அதனுடன் சாயம், வண்ணப் பொருள்கள், சிறிதளவு கேசின் பொருள்களைச் சேர்த்து, தோல்களை ஒப்பனை செய்வர். இதற்குத் தூரிகை மற்றும் தெளிப்பான்கள் கொண்டு தோலின் மேற்கூறிய பொருள்களை மெழுகுவர். பின்பு அழுத் தம் கொடுக்கும் பொறியில் இட்டு அழுத்தி எடுப்பர். இவ்வகை ஒப்பனைகள் நீர் பட்டால் கரையும் தன்மையுடையவை. தைத் தவிர்க்க சில ஓப்ப னைப் பொருள்கள் இதன் மீது தெளிக்கப்படு கின்றன. அரக்கு ஒப்பனையும் (lacquer finishing agent) செய்யலாம். இம்முறையில் அரக்குக் கூழ் நீரடியல்லாத முறையில் கரைப்பான்களைக் கொண்டு தோலின் மீது தெளித்தால் மிகவும் பளபளப்புடன் அழகாக இருக்கும். இம்முறை காலணி மேல் தோலுக்கும், தோல் பொருள்கள் செய்வதற்கும் ஏற்றது. ஆடைத் தோல்கள் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். இதற்கு இந்த அரக்குக் கூழை நீரடி ஒப்பனையாக நீரில் கலந்து தோலில் தெளிப்பர். இதனால் ஆடைத் தோல்களில் உள்ள ஒப்பனைகள் நீரால் கெடா. ரெசின் கொண்டு ஒப்பனை செய்த தோல்களை மேலும் சிறப்பாகவும் மிகவும் பளப்பளப்பாகவும் இருக்கச் செய்ய பாலியூ ரேத்தேன் கொண்டு ஒப்பனை செய்வர். இவ்வாறு ஒப்பனை செய்த தோல்களைத் தோல்பொருள்கள் செய்வோர் மிகவும் விரும்பி வாங்குகின்றனர். ஒப்பிணைமை எம்.எஸ்.ஒளிவண்ணன் ஓர் அலைச்சார்பின் அனைத்து ஆயக்கூறுகளும் ஆய மூலம் வழியாக ஒன்றாக எதிரொளிக்கப்படும்போது, அ.க. 6-38 திப்பிணைமை 593 (அதாவது X,-x ஆகவும், y,- y ஆகவும், z, z ஆகவும் மாற்றமடைதல்) அவ்வலைச்சார்பில் ஏற் படும் மாற்றங்களைக் கணிக்கப் பயன்படும் அலைச் சார்பின் ஓர் இயற்பியல் பண்பு ஒப்பிணைமை எனப் படும். அலைச்சார்பு ¥ (x,y,z) = (x, y, z)......... (1) எனும் பண்பு கொண்டிருந்தால்' அது இரட்டை ஒப்பிணைமை (even parity) கொண்டது என்றும் உ ம (-x,-y, -z) Y (x,y,z) = (2) எனும் பண்பு கொண்டிருந்தால் அது ஒற்றை ஒப் பிணைமை கொண்டது என்றும் குறிப்பிடப்படும். சமன்பாடுகள் 1, 2 ஆகியவற்றை Y (x,y,z) = P Y (-x, −y, −z) +1 (3) என எழுதலாம். இதில் P- என்பது + 1 என்ற இரு மதிப்புகள் மட்டுமே கொண்ட ஒரு குவாண்டம் எண். p = + 1 என்பது இரட்டை ஒப்பிணை மையையும், P 1 என்பது ஒற்றை ஒப்பிணை மையையும் குறிக்கின்றன. - P --ஆல் வரையறுக்கப்படும் குவாண்டம் இயல் காண்ட ஓர் இயற்பியல் பண்பை ஒப்பிணைமை எனலாம். மேலும் வெளிஎதிரொளிப்பு எனும் செய்கையின் ஐகன் மதிப்பை ஒப்பிணைமை எனக் குறிப்பிடலாம். ஒப்பிணைமை எனும் பண்பு அலை களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே பழமை யக்கவியலில் இதனைப் பயன்படுத்த முடியாது. குவாண்டம் இயக்கவியலில் ஒரு துகளுக்கான ஷ்ரோடிங்கர் அலைச்சார்பில் ஒப்பிணைமைக்குப் பொருள் உண்டு. அதுபோலவே எந்த முறைமையின் (system) அலைச்சார்புக்கும் ஒப்பிணைமை பொருள் கொள்ளும். ஒரு சிக்கலான முறைமைக் குழுவின் (complex system) அலைச் சார்பு அம்முறைமைக் குழுவில் உள்ள ஒவ்வொரு முறைமையின் அலைச்சார்புகளின் பெருக்குத் தொகையோடு, அம்முறைமையின் இயல்பு அலைச்சார்பைப் பெருக்கக் கிடைக்கும். அதுபோல் ஒரு சிக்கலான முறைமைக் குழுவின் ஒப்பிணைமை அம் முறைமைக்குழுவில் உள்ள ஒவ்வொரு முறைமை யின் ஒப்பிணைமையையும். அம்முறைமையின் இயல்பு ஒப்பிணைமையையும் (intrinsic parity) பெருக்கக் கிடைக்கும். ஒப்பிணைமை மாறாமை, (conservation of parity), வெளியின் (space) நேர்எதிர்மாற்ற வடிவொப்பால் (inversion symmetry) ஒப்பிணைமை மாறாமை