பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 ஒப்பீட்டு மின்சுற்றுவழி

596 ஒப்பீட்டு மின்சுற்றுவழி எனும் துகள் தடை செய்யப்பட்ட மேற்கூறிய செயலை நிகழ்த்துகிறது. அதற்கு Km, Kn, எனும் எனும் இரு சிதைவு முறைகள் உண்டு. Kா, சிதைவு முறையின் கணக்கீட்டின் மூலம் K மீசானின் தற் சுழற்சி 0. இதனால் ஒப்பிணைமை மாறாமை இச்சிதைவில் மீறப்படுகிறது. 1956 இல் லீ, யாங் ஆகியோர் பீட்டா சிதை விலும் ஒப்பிணைமை மாறாமை மீறப்படுகின்றது எனும் கொள்கையை வெளியிட்டனர். பீட்டா சிதைவுச் சேர்க்கையின் அளவும் K மீசான் சிதைந்து டை டச் செய்யும் சேர்க்கையின் அளவும் சமமான வையாக இருப்பதால் இவ்விரு சிதைவு முறைகளும் ஒரே சேர்க்கை வகையின் வெளிப்பாடாக இருக்கலாம் எனக் காரணம் தெரிவித்தனர். நியூட்ரினோவின் வாய்ப்பான நிலைகளுக்கு நிபந்தனைகள் விதிப்பதன் மூலம் (இருகூறு கொள்கை ) ஒப்பிணைமை மாறாமை மீறப்படும் தன்மை இயற்கையாகவே பெறப்படும் நிலை உள்ளது. து வரை பீட்டா சிதைவு ஆய்வு களில் சுழற்சி-கோண உந்தத் தொடர்பு முறைகள் ஆய்வு செய்யப்படவில்லையென்றும், இத்தொடர்பு முறை ஆய்வு செய்யப்பட்டால் ஒப்பிணைவு மாறாமை மீறப்படும் தன்மை வெளிப்படும் என்றும் சுட்டிக்காட்டினர். பீட்டா உமிழ்வில் ஒப்பிணைவு மாறாமை மீறப் படுவதைக் காட்டச் செய்யப்பட்ட முதல் ஆய்வில் பீட்டா உமிழ்தன்மையுள்ள கோபால்ட் -60 அணுக் e- முனைவாக்கம் பெற்ற கோபால்ட் - 60 கருவிலிருந்து பீட்டா சிதைவு. கோபால்ட் கருவின் சுழற்சி அச்சுகள் முனைவாக்கம் பெறா நிலையில் குறிக்கப்பட்ட திசையில் படத்தில் குறிக்கப்பட்ட திசையில் எலெக்ட்ரான், எதிர் நியூட்ரினோ ஆகியவற்றின் தேர்வு உமிழ்வைக் கண்டுபிடிக்க முடியாது. கருவின் சுழற்சிகள் Sco, குறைந்த வெப்பநிலையில் <-- H எனும் காந்தப்புலத்தால் முனைவாக்கம் செய்யப் பட்டன. சிதைவு எலெக்ட்ரான்கள் 60Co-இன் சுழற்சித்திசைக்கு எதிர்த்திசையில் தேர்வு உமிழ்வு செய்யப்படுவது காணப்பட்டது. (படம்) இவ்வாறு ஒரு SP தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது. பரும் பொருள் அளவில் H.. P. தொடர்பு என்னும் சேர்க்கைத் தொடர்பின் அளவு ஒரு பீட்டா சிதை வில் இடையீட்டின் ஒப்பிணைவு மாறாநிலைப் பகுதியும் ஒப்பிணைவு மாறாநிலை மீறும் பகுதியும் சம அளவுள்ளன என்பதைக் காட்டி, நியூட்ரினோவின் இருகூறு கொள்கையை உறுதி செய்கிறது. வெ.ஜோசப் ஒப்பீட்டு மின்சுற்றுவழி ஒப்பீட்டு மின்கருவி என்பது அக்கருவியில் இடப் பட்ட மின் உள்தருகைக் குறியீடு (electrical input signal) ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் (reference level) சென்றால், அதற்கு ஏற்புடைய மின்வெளி யீட்டுக் குறியீட்டைத் (out put signal) தரும் அமைப் பாகும். இந்த வெளியீடு உள் தருகைக் குறியீடு போன்றோ வேறு அமைப்பிலோ இருக்கலாம். இருமுனைய ஒப்பீட்டு மின்சுற்றுவழி (diode com - parator circuit) இது ஓர் எளிய ஒப்பீட்டு மின்சுற்று வழியாகும். இயங்கும்முறை பின்வருமாறு: உள் தருகைக் குறியீடு (Vi) ஒரு குறிப்பிட்ட நிலைவரை (VR) உயரும்போது வெளியீட்டுக் குறியீடு அந்தக் குறிப் பிட்ட நிலையிலேயே (VR) நிலையாக இருக்கும். உள் தருகைக் குறியீடு மேலும் உயரும்போது வெளியீட்டுக்குறியீடும் அதற்குச் சமமாக உயர்ந்து கொண்டே செல்லும். அதாவது உள்தருகைக்குறியீடு VR க்கு மேல் உயரும்போது இச்சுற்றுவழி ஒப்பீட்டு மின்சுற்றுவழியாகப் (comparator circuit) பயன் படுகிறது. டனல் இருமுனைய ஒப்பீட்டு மின்சுற்றுவழி. மின் அணுத்துறையில் மற்றுமொரு ஒப்பீட்டு மின்சுற்று வழி டனெல் டயோடைக் கொண்டு அமைக்கப்படு கிறது. இந்தச் சுற்றுவழியும், அதன் இயங்கு முறையும் கீழே விளக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் V என்ற நிலையான மின்னழுத்தம் செலுத்தும்போது இந்த மின்சுற்றுவழி (1) என்ற நேர்கோட்டில் அமையும். அப்போது டனெல் டயோடு X என்ற நிலையில் மையம் கொண்டிருக்கும். .