பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh|600 ஒப்புமைக்‌ கணிப்பொறி||

600 ஒப்புமைக் கணிப்பொறி கருக்களை விட மிகக் குறைவாக (சில நூறு எலக்ட் ரான் வோல்ட்டுக்குள்) இருக்கும். அணுக்கருக்களில் ஒப்பு நிலைகள் பற்றிய ஆய்வு அணுக்கருக்களின் கட்டமைப்பை முழுமையாக அறிந்து கொள்ளப் பயன்படுகின்றன. ஒப்புமைக் கணிப்பொறி மெ. மெய்யப்பன் கலப் மூன்று வகையான கணிப்பொறிகள் உள்ளன. அவை, ஒப்புமைக் கணிப்பொறி (analog computer) இலக்க முறைக் கணிப்பொறி {digital computer) பினக் கணிப்பொறி (hybrid computer) என்பன வாகும். ஒப்புமைக் கணிப்பொறி ஓர் அமைப்பைப் பற்றிக் கணிக்கும்போது அவ்வமைப்பின் ஒப்புமை மின்குறிகளை வைத்துச் செயல்படும். சான்றாக ஒரு நகரும் பொருளின் நிலையை ஆயும்போது அதன் வேகம், நிலை, முடுக்கம் முதலியவற்றை மின்னோட்டம் மின்னழுத்தம் முதலியவற்றால் ஒப்புமைக் குறிகளாக அமைத்து க்கணிப்பான் செயல்படும். அமைப்பின் இயங்கும் தன்மைக்கும். கணிப்பான் இயங்கும் தன்மைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. ஆனால் இலக்கமுறைக் கணிப் பானில் ஒவ்வொரு செய்தியையும் 1 மற்றும் 0 என்ற குறிகளாக மாற்றிய பின்னர் கணிப்பான் செயல் படும். . ஒப்புமைக்கணிப்பான் ஒரு தனிவகைப் பணி மிகைப்பிகளைக் (operational amplifier) கொண்டு வடிவமைக்கப்படுகிறது: ஒருங்கிணைத்தல் (integra ion), பிரித்தெடுத்தல் (differentiation), கூட்டுதல் (addition), பெருக்குதல் (multiplication) வகுத்தல் (division) போன்ற கணிதவியல் கணிப்பிற்குப் பயன் படுவதால் இவ்வகை, மிகைப்பிகள் எனப்படும். ஓர் அமைப்புச் செயல்படும் முறையைக் கணிதவியல் சமன்பாடுகளால் விளக்கலாம். அச்சமன்பாடுகளை நேரிடையாக இக்கணிப்பொறிகளிலிட்டுக் கணக்கிட லாம். இக்கணிப்பொறிகளிலிருந்து வெளிவரும் குறிகள் மின்னழுத்தம், மின்னோட்டங்களாகவே இருக்கும். இவற்றை X - Y என்ற பதிவான்களுக்குக் கொடுத்து முடிவுகளைப் பதிவு செய்யலாம். கணிக்கப்படும் கணக்கின் முடிவு வரைபடம் வாயிலாகத்தான் கிடைக்கும். கணிப்பொறியிலிருந்து முடிவுகள் விரைவில் கிடைத்தாலும் அவை நுட்பமாக இரா. வரைபடத்தின் மூலம் முடிவுகளை நுணுக்க மாகக் கணக்கிட முடியாது. இலக்கமுறைக் கணிப் பான்களுடன் ஒப்பிடும் போது இவை மிகக் குறைந்த நுட்பங்களையே கொண்டுள்ளன. இவற்றின் செய லாற்றும் வேகமும் விடைகளின் நுணுக்கமும் குறை வாயினும் சில சூழ்நிலைகளில் வை பெரிதும் பயன்படுகின்றன. ஒப்புமையாக்கி தொழிலகங்களில் -க. அர. பழனிச்சாமி ஒரு பொருள் அல்லது கருவி பற்றி முழுமையாக அறிய அதைப்போல அனைத்து வகைகளிலும் ஒத்தி ருக்கும் மற்றொரு பொருள் அல்லது கருவி உருவாக் கப்படுகிறது. இதற்கு ஒப்புமையாக்கி (simulator) என்று பெயர். சர் ஐசக் நியூட்டன் ஒப்புமை விதி களை (lows of similarity) விளக்கியுள்ளார். மாதிரிகள் (models) வடிவக் கணிதத்திலும் (geometry) இயங்கு திறத்திலும் (dynamical) மூலங்களைப் போலவே இருக்கவேண்டும் என்பது நியூட்டனின் விதியாகும். ஆற்றல் அமைப்புகளில் கணிதச் சமன்பாடு, படிமப் பகுப்பாய்வு ஆகிய இரு உத்திகள் மேற் கொள்ளப்படுகின்றன. இம்மாதிரி, ஒப்புமையாக்கி களைச் சேர்ந்தவையாகும். இவை மூல அமைப்பு களின் (proto type) எல்லாப் பண்புகளையும் கொண் டிருப்பது இன்றியமையாதது. இவற்றின் விகித அள வும் தன்னளவும் மிகுந்த கவனத்துடனும், தேவைக் கேற்பவும், பொருளாதார வரைமுறைகளுக்கேற் பவும் தீர்மானிக்கப்படுகின்ற றன. பாலங்கள், அணை கள், கட்டிடங்கள், நில ஊர்திகள், நீரூர்திகள், வானூர்திகள், எந்திரக்கருவிகள், மருத்துவக்கருவிகள் ஆகியவற்றைப் பற்றி ஆராயவும், அவற்றை வடிவ மைக்கவும் ஒப்புமையாக்கிகள் பயன்படுகின்ற றன. மேற்கூறியவற்றில் பல அமைப்புகளைப் பற்றி அதி லும் குறிப்பாகப் பளுத்திறன் (action under load) பற்றி ஆராயும்போது கணித ஆய்வு மிகவும் கடின மாகி விடுகிறது. அப்போது ஒப்புமையாக்கிகள் மிக நுண்மையான தத்துவங்களையும் நுட்பமாக அறிந்து கொள்ள வகை செய்கின்றன. தற்கால நவீன வானூர்திகள், ஏவூர்திகள் (air- crafts and rockets) போன்றவற்றை இயக்குபவர் களுக்குப் பயிற்சி அளிப்பதற்குப் பறத்தல் ஓப்புமை யாக்கிகள் (flight simulators) பயன்படுகின்றன. அவற் றில் நீடித்து உழைக்கும் தன்மை (eudurance) திறன் (competence), எதிர் புவியீர்ப்புத் திறன் (negative 'G' effects) போன்றவற்றை உணர் வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்புமையாக்கிகளால் விரைவாகவும், எளிமை யாகவும், குறைந்த செலவிலும் மேற்கண்ட ஆய்வு களைச் செய்ய முடியும். விண்ணூர்திகள் புயல், மழை தட்பவெப்பம் ஆகியவற்றைத் தாங்குமா என்று ஆராயப் புயல்,