பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

603 ஒப்போசம்‌

ஒப்பேரசம் 603 ஒப்போசம் வாலால் மரக்கிளையைப் பற்றிக் கொண்டு தொங்குதல். வீதம் பற்றிக்கொள்வதால் எஞ்சிய குட்டிகள் இறந்து விடுகின்றன. பொதுவாக ஒப்போசம்கள் மரப்பொந்து களில் வாழ்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தெற்குப் பகுதியில் ஒப்போசம்கள் வேட்டையாடப் படுகின்றன. இளவேனில், குளிர்காலங்களில் ஒப்போ சங்களின் தோலுக்கடியில் ஓர் அடர்த்தியான கொழுப்புப் படலம் காணப்படுவதால் அப்பருவத்தில் வை மிகுதியாக வேட்டையாடப்படுகின்றன. பொதுவாக ஒப்போசம்களுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு சில வகை ஒப்போசம் மத்திய, தென்அமெரிக்கப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து ஆண்டல் மலைகளில் 3700 மீ. உயரம்வரை பர வலாகக் காணப்படும். தாழ்ந்த பகுதிகளில் வாழ் பவை வெளிர் சாம்பல் நிறமானவை. உயரமான பகுதிகளில் வாழ்பவை கறுப்பு, வெள்ளை நிறங் கலந்தவை. ஏனைய இனங்களைச் சேர்ந்த ஒப்போசங்கள் மெக்சிகோவிலிருந்து படகோனியா வரை பர வியுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவற்றில் முழு வளர்ச்சியடைந்த மதலைப்பை இல்லை. ஆனால் அவை மதலைப் பையை உடைய மூதாதைகளிலிருந்து படிமலர்ச்சிபெற்றவை என நம்பப்படுகிறது. பொது வாக ஒப்போசக் குட்டிகளைப் போலவே இவற்றின் குட்டிகளும் தாயின் மார்புக் காம்புகளைப் பற்றிய படிக்காணப்படுகின்றன. நான்கு கண்ஒப்போசம்களில் (Metachirus rudicandatus) ஒவ்வொரு கண்ணிற்கு மேலும் ஓரு வெண்திட்டுக்காணப்படுவதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பெண் ஒப்போசத்தில் பால்மடிப் பகுதியைச் சுற்றி மதலைப் பைக்குப் பதிலாக ஒரு தோல்மடிப்பு காணப்படுகிறது. அடர்த்திவால் ஒப்போசம் தென் பிரேசில், பராகுவே பகுதிகளில் காணப்படும் நீர் ஆபத்துக்காலத்தில் ஒப்போசம் இறந்ததுபோல் அசைவற்றுக் கிடத்தல். வாழினமாகும். இதன் உடலின் மேற்பகுதி சாம்பல் பழுப்பு நிறமானது, அடிப்பகுதி வெளிர் சாம்பல் நிறமானது. இதன் கால்கள் குட்டையானவை. ஓட்டுடலிகள், சிறுமீன்கள் போன்றவற்றை இது உணவாகக்கொள்ளும். யாப்போக் எனப்படும் நீர் வாழ் ஒப்போச (Chironectes minimus) இனத்தில் நன்கு வளர்சியடைந்த மதலைப்பை காணப்படுகிறது.