பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 ஒருகூறுபுகவிடும்‌ சவ்வு

604 ஒருகூறுபுகவிடும் சவ்வு மதலைப்பையில் குட்டிகள் விரலியை டைச் சவ்வுடைய பின் கால்களும் அகன்ற, தட்டையான வாலும் இதன் தனிப் பண்புகள் ஆகும். வரை எலி ஒப்போசம்கள் அர்ஜெண்டினா, சிலி ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை மரங்களில் வாழ்பவையாகும். வாலின் அடிப்பகுதியில் தேக்கி வைக்கப்படும் கொழுப்புத் திரட்சி, குளிர் காலத்தில் உள்ஏற்கப்படுகிறது. பெரும்பாலான எலி ஒப்போசம் கள் மெக்சிகோவிலிருந்து பட்டகோனியா பரவியுள்ளன. இவற்றின் கண்ணைச் சுற்றிக் கரு நிறப்பகுதி காணப்படுகிறது. உடல், சாம்பல் நிறத்திலிருந்து கரும் பழுப்பு வரை இனத்துக் கினம் வேறுபடுகிறது. மூஞ்சூறு ஒப்போசங்கள் அமெரிக்காவின் வெப்பப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மோனோடெல்ஃபிஸ்டொமெஸ்ட் குட்டையான டிக்கா (Monodelphis domestica) வாலும் மூஞ்சூறு போன்ற தோற்றமும் உடையது. இது பூச்சிகளையும் எலிகள் போன்ற கொறிக்கும் விலங்குகளையும் பிடித்து உண்ணுகிறது. கம்பளி மயிர் ஒப்போசம் மென்மையான அடர்ந்த மயிருடை யது. இதன் வாலின் அடிப்பகுதியில் மயிர் காணப் படுகிறது. மேலும் இவ்வகை ஒப்போசங்களில் வால் முழுதும் மயிரால் மூடப்பட்டுள்ளது. ஒருகூறுபுகவிடும் சவ்வு ஜெயக்கொடி கௌதமன் கரைப்பான் மூலக்கூறுகள் மட்டும் ஊடுருவிச் செல்லக் கூடிய, கரைபொருள் மூலக்கூறுகள் ஊடுருவிச் செல்ல முடியாத இடைத்திரை அல்லது சவ்வு ஒருகூறுபுகவிடும் சவ்வு (semipermeable membrane) எனப்படும். விலங்குகளிலும் தாவரங் களிலும் வளர்ச்சியின் பொருட்டு சவ்வூடுபரவல் நிகழ்ச்சி நடைபெற இச்சவ்வு இன்றியமையாதது. தாவரத்தின் செல்சுவர்கள், கோழி முட்டையில் மேல் ஓட்டின் உட்புறமாக உள்ள படலம், செலோ ஃபேன் தாள், கொலோடையான் ஏடுகள் ஆகியன ஒருகூறுபுகவிடும் சவ்வுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கரைசல்களை வேறுபட்ட செறிவுள்ள இரு நுண்துளைகள் அமைந்த ஒருகூறுபுகவிடும் சவ்வினால் பிரித்து வைக்கும்போது, குறைந்த செறிவுள்ள கரைசலிலிருந்து செறிவு மிகுந்த கரைசலுக்குக் கரைப்பான் மூலக் கூறுகள் ஊடுருவிச் செல்கின்றன. இந்நிகழ்ச்சி சவ்வூடு பரவல் எனப்படுகிறது. சவ்வின் இரு புறமும் கரைசலின் செறிவு சமமாகும் வரை இந்நிகழ்வு நடைபெறும். கரைப்பான் மூலக்கூறுகள் இருபுறமும் கடந்து செல்கின்றன. ஆனால் குறைந்த செறிவுள்ள கரைசலிலிருந்து செறிவு மிகுந்துள்ள கரைசலுக்குச் செல்லும் கரைப்பானின் மூலக்கூறுகளே எண்ணிக்கையில் மிகுந்திருக்கும். எனவே, ஒருகூறு புகவிடும் சவ்வின் வழியே சவ்வூடு பரவல் நிகழும் போது மிகுந்த கரைசலின் செறிவு குறைக்கப்படு கின்றது. பொதுவாகக் கரைப்பான் மூலக்கூறுகளின் பருமனளவு கரைபொருள் மூலக்கூறுகளின் பருமனைவிடச் சிறியது. சவ்வில் நுண்துளைகள் மிகுந்துள்ளன. ஆனால் ஒருகூறுபுகவிடும் சவ்வில்