ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை 607
ஒருகிணைந்த பூச்சி மேலாண்மை புவியில் பூச்சிகள் தோன்றி 400 மில்லியன் ஆண்டு கள் ஆகின்றன என்று அறியப்பட்டுள்ளது. இவற்றுள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் ஈக்கள், பட்டுப்பூச்சி வகைப்பட்ட கள், அரக்குப் பூச்சிகள் எனப் பல . நன்மை பயக்கும் இனங்களும் உண்டு. கடந்த பத் தாயிரம் ஆண்டுகளாக உழவுத் தொழிலை மேற் கொண்டு பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவு வழங்கவும் பயிர்களில் உயர் விளைச்சல் காணவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதே பூச்சி களின் தொல்லையும் தொடங்கியது. பூச்சிகளை ஒழிக்கும் எண்ணத்துடன் குறிப்பாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின் பூச்சி மருந்துகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைக்கப்பட்டது. தேவைக்கு மேலான பூச்சிக் கொல்லிகளின் பயன் பாட்டால் உடல் நலக்கேடு, பூச்சிக் கொல்லிகளின் எச்சம் உணவுடன் கலத்தல், நிலம்,நீர்,காற்று ஆகியவற்றில் கலந்து சுற்றுப்புறச் சூழலுக்குத் தூய்மைக்கேடு விளைவித்தல், நன்மை பயக்கும் பூச்சி களை அழித்தல் போன்ற தீய விளைவுகள் உண்டா யின. எனவே, பூச்சிக் கொல்லிகளை மட்டுமே நம்பி யிராமல் பல முறை றைகளையும் ஒருங்கிணைத்துப் பூச்சி களைக் கட்டுப்படுத்தும் முறை ருவாக்கப்பட்டது. பயிர்களில் பூச்சிகள் பொருளாதார இழப்பை விளை விக்காத அளவில் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்ற கொள்கையும் ஏற்பட்டது. அதற் கேற்பப் பயிர்ப் பாதுகாப்பில் பூச்சிக்கொல்லிகளை மட்டும் நம்பியிராமல் ஏனைய பயன்படும் முறை களையும் இணைத்து ஒருங்கிணைந்த பூச்சி மேலாண் மை என்னும் கொள்கை தற்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பூச்சிகள் மேலாண் மைக்குக் கீழ்க்காணும் முறைகளும் கோட்பாடுகளும் பயன்படுகின்றன. கூடிய உழவியல் முறை. பூச்சிகள் பெருகாமல் தடுக்க ஒரே பயிரையோ, அதற்கு மேற்பட்ட பூச்சிகளின் பயிர்களையோ தாக்குதலுக்குள்ளாகக் தொடர்ந்து பயிரிடாமல் பயிர்ச் சுழற்சியைக் கடைப் பிடித்தல் நல்லது. விளை நிலங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள பலவகைக் களைகளிலும் பூச்சிகள் மறைந்திருந்து பெருகிப் பயிர்களைத் தாக்க வாய்ப் புண்டு. எனவே களைகளை நீக்கி, வயல்களையும் வரப்புகளையும் தூய்மையாக வைத்திருத்தல் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்கும். நிலத்தை ஆழமாக உழுவதால் பயிர்களைத் தாக்கும் சில வகை வேர்ப் புழுக்களைக் கொல்லவும் அவை மேலே வரும்போது பறவைகள் அவற்றை அழிக்கவும் வாய்ப்புண்டு. வெட்டுப்புழுக்கள், வேர்ப்புழுக்கள் உள்ள பகுதி களில் சில நாள் வயலில் நீரைத் தேக்கி வைத்தால் நீரை அடிக்கடி கட்டுப்படுத்தலாம். அவற்றைக் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை 607 வடித்துக் கட்டுவதால் நெல்லில் புகையான், தண்டுப் புழு ஆகியவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம். ஒரு பகுதியில் உள்ள அனைத்து உழவர்களும் விதைத் தலை நீட்டிக்காமல் ஒரே சமயத்தில் அல்லது குறுகிய நாளில் விதைத்தால் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தப்பலாம். பலரும் பல நாள் இடை டைவெளி விட்டு விதைத்தால் பூச்சிகள் படிப்படியாகப் பெருகும். எந்த ஒரு பகுதியில் பூச்சி இருக்கிறதோ அதன் தாக்குதலை மிகுதியாகத்தவிர்க்க ஒத்த வயதுடைய வகைகளையே தேர்ந்து பயிரிடல், நீண்ட கால வகைகளுக்குப் பதில் குறுகிய கால அல்லது நடுத்தர வயது கொண்ட வற்றைப் பயிரிடல் ஆகிய செயல்களை உழவர்கள் எளிதில் பின்பற்றலாம். பருவத்தில் விதைப்பதும், நடுவதும் பூச்சிகளைத் தவிர்க்க உதவும். வழக்கமாகப் பயன்படுத்தும் விதை அளவை விடச் சற்று மிகுதியான விதை அளவைப் பின்பற்றி னால் தொடக்க நிலையில் பயிரைத் தாக்கிப் பயிர் எண்ணிக்கையைக் குறைக்கும் சோளக் குருத்து ஈ போன்ற பூச்சிகளால் ஏற்பட இருக்கும் இழப்பை ஈடுகட்ட இயலும். பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்களைச் சுற்றி ஆமணக்கைப் பயிர் செய்வதால் புருடீனியா வெட்டுப் அறியவும், தோன்றுவதை முன்கூட்டியே புழு ஆமணக்கில் தொலைவிலிருந்து பார்த்தாலே தெரி யும் சல்லடை போன்று அரிக்கப்பட்ட, வெள்ளை யாகத் தோன்றும் இலையின் அடிப்புறத்தில் கூட்ட புருடீனியாவின் புழுக்களை மாக உள்ள அழிக்கவும் முடியும். சிறு பல பயிர்களின் அறுவடை முடிந்ததும் உழுது, நிலத்தில் எஞ்சி நிற்கும் பயிரின் பகுதிகளைத் திரட்டி அழிப்பது பல பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். பயிர்களுக்கு நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், பொட்டாஷ் சத்து மிக்க சீரான சத்துணவே தேவை. அவற்றை விடுத்துத் தழைச்சத்தை மட்டும் இடுவதாலும் அல்லது அளவுக்கு மேலாக இடுவதாலும் பூச்சிகள் பெருக வாய்ப்புண்டாகும். உழவியல் முறையில் விளக்கப்பட்ட பூச்சி மேலாண்மைக் கோட்பாடு களால் உழவர்களுக்குக் கூடுதலான முதலீடு இந்த உழவியல் கோட்பாடுகளால் பின் களும் சுற்றுப்புறச் சூழலுக்குத் தூய்மைக் கேடுகளும் இல்லை. ல்லை. விளைவு பயிரிடல். பயிர்களில் உள்ள பூச்சி எதிர்ப்புத் திறனை மூவகைப்படுத்தலாம். முதல் வகையில் குறிப்பிட்ட வகையை ஒரு பூச்சி தாக்கி உண்டால் அதன் முட்டை இடும் திறன் குறைவது, அதன் இன வளர்ச்சி குறைவது அல்லது இளம் பருவத்திலேயே மடிவது போன்ற செயல்கள் நிகழும். இரண்டாம் வகையில் சில பயிர் வகைகளைப் பூச்சி தாக்கினாலும், தாக்கப்பட்ட பகுதி மிகுதியும் அழிவடையாமல் மீண்டும் வளர்வதுடன், வி போதிய ளைச்சல்