608 ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
608 ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வகைகளை கொடுக்கும் தன்மையும் கொண்டுள்ளன. மூன்றாம் வகையில்சில பயிர் வகைகளைப் பூச்சிகள் உண்ணவோ முட்டையிடவோ, உறைவிடமாகப் பயன்படுத்திக் கொள்ளவோ விரும்பாமல் அவற்றைத் தவிர்க்கவே முயல்கின்றன. இம்மூவகை எதிர்ப்புத் திறனில் ஏதே னும் ஒன்றைத் தன்னுள் கொண்டு, பொருளாதார முறையில் ஒப்புக் கொள்ளக்கூடிய விளைச்சல் தரும் பயிர் விளைச்சல் ஆற்றல் கொண்ட உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகை களைப் பயிரிடுவதில் கூடுதல் செலவில்லை; பூச்சி மருந்துகள் தேவையில்லை அல்லது அவற்றின் தேவையும் மிகக் குறைவாதலால் சாகுபடிச் செலவும் சிக்கனம் ஆகும். மனிதர்களுக்கும், கால்நடை களுக்கும் தீமை ஏற்படுவதில்லை. மேலும் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுவதில்லை; பயிர்ப்பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். எனவே, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் பெம்பங்காற்றுகின்றன. இயற்கை அல்லது செயற்கை ஆற்றலால் கட்டுப்படுத் துதல். சூரிய வெப்பத்தையும், ஒளியையும் தாங்க இயலாமல் சேர்த்துவைக்கும் தானியங்களையும், விதைகளையும் வெயிலில் உலர வைக்கும்போது பல பூச்சிகள் மடிகின்றன. முருங்கை மரத்தில் தோன் றும் கம்பளிப் பூச்சிகளைத் தீப்பந்தம் கொண்டு கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி வைத்தல் மூலம் பல பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும், அவை எந்த அளவில் தோன்றியுள்ளன என்பதைக் கண் காணித்துப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும். காமாக் கதிர்களைக் கொண்டு பூச்சிகளை மலடாக்கும் திட்டம் மேலை நாடுகளில் காணப்படுகின்றது. புழு நீக்கம் செய்தல். இம்முறை தொன்று தொட் டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது. எடுத்துக்காட் டாகக் கடலையில் தோன்றும் சிவப்புக் கம்பளிப் பூச்சி களின் முட்டைக் குவியல்கள், சிறிய பெரிய புழுக்கள், கூட்டுப்புழு ஆகியவற்றைத் திரட்டி அழிப்பதைக் குறிப்பிடலாம். நெல் நாற்றை நடும்போது நுனிக ளைக்கிள்ளிவிட்டு நடுவதால், கிள்ளப்பட்ட பகுதியில் உள்ள குருத்துப் பூச்சியின் முட்டைக் குவியல்கள் நீக்கப்படுதல், தாக்கப்பட்ட பயிர்ப்பகுதிகளை அவற் றுள் இருக்கும் பூச்சி புழுக்களுடன் அகற்றி அழித்தல், நீண்ட ஆழமான குழிகளை வெட்டிப் படைப்புழுக் கள் ஒரு வயலிலிருந்து பிற வயல்களுக்குப் பரவாமல் தடுத்தல், பழமரங்களில் மீது மாவுப் பூச்சிகள் செதில் பூச்சிகளின் குஞ்சுகள் ஊர்ந்து ஏறுவதைத் தடுக்க எண்ணெய் மசகு போன்ற பிசுபிசுப்பான பொருள் களைப் பாலித்தீன் தாள்களில் தடவி அடிமரத்தில் கட்டுதல், மாதுளை போன்ற மரங்களில் பழங்களுக் குப் பை கட்டுதல், விதைகளுடன் வீரியம் ஏற்றப் பட்ட களிமண் கலந்து வைத்தல் ஆகிய காப்பு நடவடிக்கைகள் மூலம் பூச்சிகளின் இனப்பெருக்கத் தையும், இழப்பையும் தவிர்க்கலாம். உயிரினத்தால் உயிரினத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது உயிரியல் கட்டுப்பாடு. பயிர்களைத் தாக்கி அழிவை விளைவிக்கும் பூச்சிகளுக்கு இயற்கையிலேயே பகை உயிரினங்கள் உண்டு. அவை பூச்சிகளிலேயே சில வகை ஒட்டுண்ணி, ஊண்பூச்சி, நூற்புழு, சிலந்தி, மீன், தவளை, பல்லி, ஓணான். பறவை, மூஞ்சூறு போன்ற பாலுட்டி, பூச்சிகளுக்கு நோய்களை உண் டாக்கும் பாக்டீரியப் பூசணம், வைரஸ் எனப்படும் நச்சுயிரி எனப் பலவகைப்படும். அவற்றைப் பயன் படுத்திப் பயிர்ப் பூச்சிகளைக் கொல்வது உயிரினத் தால் உயிரினத்தைக் கட்டுப்படுத்தும் முறையாகும். இம்முறையில் முன்னரே உள்நாட்டில் இருந்துவரும் நன்மை பயக்கும் உயிரினங்களைக் கண்டறிந்து அவற்றை ஆய்வுக் கூடங்களில் மிகுதியாக உற்பத்தி செய்து வயல் வெளிகளில் விட்டுப் பூக்சிகளைக் கட்டுப்படுத்துதலாம். மற்றொரு வகையில் வெளி நாட்டிலிருந்து இத்தகைய நன்மை பயக்கும் உயிரினங் களைக் கொண்டு வந்து தீமை தரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். சட்டங்களின் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல். ஓர் இடத்திலிருந்து பிற இடத்திற்கு அழிவை விளைவிக்கும் பூச்சிகள் பரவாமல் தடுக்கப் பலநாடு களிலும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பூச்சி பரவாமலிருக்க ஒவ்வொரு நாட்டிலும் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் விதை, செடிகொடி விளைபொருள் முதலியன நன்கு ஆய்வு செய்யப் பட்டுத் தேவையிருந்தால், மருந்திடப்பட்டுத் தக்க சான்றிதழ்களுடனே அனுப்பப்படுகின்றன. இவற்றை கண்காணிக்க முக்கிய விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் ஆய்வாளர்கள் உள்ளனர்.1919 இல் நிறைவேற்றப்பட்ட தமிழக வேளாண்மைப் பூச்சி நோய்கள் சட்டம், 1958இன் பஞ்சாயத்துச் சட்டம் முதலியன பூச்சிகள் பரவுவதைத் தடுக்கவும் பூச்சிகளால் அழிவு விளையும் என்று தெரிந்தால் பயிர்களில் பெருமளவில் கட்டாயமாக் மருந்து தெளிக்கவும் வகை செய்கின்றன. எனவே, தகைய சட்டக் கட்டுப்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும். இது பல நாடுகளிலும் பின்பற்றப்படும் முறையாகும். இத் பூச்சிக்கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்துதல். பூச்சிக்கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த பல கரிம மருந்துகளும், குளோரின், பாஸ்ஃபரஸ் கார்பமேட் மருந்துகளும் செயற்கை மருந்துகளும் பயன்பட்டு வந்துள்ளன. புதிய பூச்சிக் கொல்லி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவையனைத்தும் நஞ்சு களாயினும் விரைவாகவும் எளிதாகவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. பூச்சிகள் வரும் முன்னர்