ஒருங்குண்ணிச்துவம் 609
அட்டவணைப்படித் தெளிப்பதால் பல நாள்களுக்குப் பயன் தரும்; மருந்து தெளிக்கப்பட்ட பயிர் உயர் விளைச்சல் கொடுக்கும் என்று கருதப்பட்டதால் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை முதலில் மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, பூச்சிக்கொல்லிகளை அட்டவணைப்படியோ முன் தடுப்பாகவோ பயன்படுத்தாமல் ஒவ்வொரு பயிரிலும் பூச்சிகள் எந்த எண்ணிக்கையில் இருந்தால் பொருளாதார இழப்பு விளையும் என்னும் கணிப்பு களைத் தெரித்து கொண்டு, தேவைக்கேற்பப் பயன் படுத்துவதே சிறந்தது. உணவு தேட, முட்டையிட துணைதேட. பூச்சிகள் இயற்கையில் சில வேதிப் பொருள்களை நாடுகின்றன. அவற்றையே செயற்கைப் பொருள் களாகச் செய்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் முறையும், பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கும் நுண்ணியிர்களைப் பெருக்கி வயல் வெளிகளில் தெளிக்கும் முறையும், வேப்பங்கொட்டையில் உள்ள கசப்புத்தன்மையைக் செயற்கைப் பொருள் களிலும் உண்டாக்கிப் பயிரில் தெளித்தால் அவற்றை விரும்பி உண்ணாமல் பூச்சிகளை அழிக்கும் முறையும், பூச்சிகள் முழு வளர்ச்சி பெற்று இனப்பெருக்கம் செய்ய இயலாமல் புழு அல்லது குஞ்சுப் பருவத்திலேயே வளர்ச்சியைத் தடைசெய்யும் முறையும் பூச்சி மேலாண்மையில் பெரும் பங்கு ஏற்கும் வாய்ப்புகளாக உள்ளன. ஒருங்கியைவு -ஏ.பி.ரங்கராஜன் இருவேறு செயல்முறைகளில் ஒன்றை அடியொற்றிப் பிறிதொன்று நிகழ்வதாக (அதாவது, ஒத்தியங்கும் நிகழ்வொருமை உடையனவாக) இருத்தல் ஒருங்கி யைவு (synchronization) எனப்படும். எடுத்துக்காட் டாக மின் கடிகையைக் குறிப்பிடலாம். மின் கடிகை யின் முன்களை நகரச் செய்யும் மின்னோடி மின் நிலையத்தின் மின்னாக்கி வேகத்திலோ அதன் மடங்கு களிலோ சுழலும், இதனால், கடிகையின் முள் நகரும் வேசும் மின்னாக்கியின் வேகத்தோடு ஒருங்கியைவு உடையது எனலாம். இவ்வாறே இருவேறு மின்னாக்கி களின் அலைவெண் ஒன்றாகவே இருக்குமானால் அவை ஒருங்கியை யைவு உடையன எனலாம். ஒருங்கி யைவு உடைய இரு மாறுதிசை மின்னாக்கிகள் ஒரே சுட்டத்தில் (phase) இருக்கும். ஒருங்கியைவு என்பது தொலைக் காட்சியில் -இன்றியமையாத தேவையாகும். தொலைக்காட்சி அ.க. 6-39 ஒழுங்குண்ணித்துவம் 609 பரப்பி ஒளிபடக் கருவியில் எலெக்ட்ரான் கற்றை, படத்தைத் துருவுகின்றது. தொலைக்காட்சி ஏற்பிப் பெட்டியிலும் எலெக்ட்ரான் கற்றைதான் படத்தை மீட்டுருவாக்குகின்றது. ஒளிப்படக் கருவியிலும், தொலைக்காட்சி ஏற்பிப் பெட்டியிலும் எலெக்ட்ரான் கற்றை எந்நேரத்திலும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இந்த ஒருங்கியைவு இல்லையெனில் தொலைக்காட்சியில் படங்களைக் காண இயலாது. இதற்கெனப் பரப்பிலிருந்து ஒவ்வொரு வரித் துருவ லின் முடிவிலும் ஒரு ஒருங்கியைவுத் துடிப்பு (syn- chronizing pulse) பரப்பப்படும். இதனால் ஏற்பிப் பெட்டியில் துருவும் எலெக்ட்ரான் கற்றை அடுத்த வரிக்குச் செல்லுமாறு பணிக்கப்படுகிறது. அவ்வாறே எலெக்ட்ரான் கற்றைப்படத்தின் அடிப்பகுதியைத் (இறுதி வரியை) துருவி முடித்த பின்னர் படத்தின் மேல் பகுதிக்குச் செல்ல வேண்டும். இச் செங்குத்து ஒருங்கியைவுக்கும் ஓர் ஒருங்கியைவுத் துடிப்பு அனுப்பப்படும். ஒருங்குண்ணித்துவம் உயிரினங்களிடையே பல வகையான ச. சம்பத் ணைவாழ்வு இருந்தாலும், இரு மாறுபட்ட உயிரினங்கள், வேறு பாடின்றி ஒரே பந்தியில் தம் உணவைப் பகிர்ந்து கொள்வதை ஒருங்குண்ணித்துவம் என்பர். இதை ஒரே பந்தி உயிரித்துவம் (commensalism) என்றும் கூறுவர். இவ்வாறு கூடி வாழும் உயிரினங்களின் இணைவாழ்வை அவற்றின் வாழ்க்கை முறையைக் கொண்டு அறிவியலார் பல்வேறு பெயர்களில் எடுத் துக் காட்டியுள்ளனர். சில ஆய்வாளர்கள் அனைத்து வாழ்க்கை முறைகளையும் இணைவாழ்வு (symbiosis) என்றே குறிக்கின்றனர். தனித்து வாழும் திறன் மிக்க உயிரினங்கள், சில குறிப்பிட்ட நேரங்களில் இணைந்து வாழ்வதும், பின்னர் பிரிந்து போவதும் ஆய்வுக்குரிய செய்திகளாகவே உள்ளன. இவ்வாறு இணைந்து வாழும் இரு உயிரிகளில் ஒன்று பய னடைவதும் ஒன்று தாக்கமடையாமல் இருப்பதும், இரு உயிரிகளும் தமக்குள் பயன்பெறுவதும், உணவிற் காக மட்டுமன்றி எதிரிகளிடமிருந்து தம்மைக் காத் துக் கொள்வதும், எளிதில் ஓரிடத்திலிருந்து மற் றோர் இடத்திற்குப் பயணம் செய்தலும்,ஓர் உயிரி மற்றோர் உயிரிக்கு இடங்கொடுப்பதும் வியப்புக்குரிய செய்திகளாகும். கரையில் வாழும் உயிரினங்கள் மட்டுமன்றிக் கடலில் வாழும் உயிரினங்களிலும் இவ்வகை இணை வாழ்வுமுறை காணப்படுகிறது. கடலில் வாழும் வெள்ளைச்சுறா, நீலத்திமிங்கிலம், கடல் போன்றவற்றின் மேல் ஒட்டிக்கொண்டு பயணம் ஆமை