பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 ஒருங்குண்ணிச்துவம்‌

610 ஒருங்குண்ணித்துவம் சுறாமீனும் ஒட்டுமீனும் செய்யும். மூன்றடி நீளமேயுள்ள ரிமோரா எனப் படும் ஒட்டு மீன் தன் உணவிற்காகவும் பாதுகாப்பிற் காகவும், நீண்ட தொலைவு பயணம் செய்வதற் காகவும் இணை வாழ்வை மேற்கொள்கிறது. முள்கள் நிறைந்த முதுகுத் துடுப்பு ((dorsal fin) ஒட்டுறுப் பாக மாறிப் பெரிய மீன்களின் செதில்களையும், தோலையும் இறுகப் பற்றிக் கொண்டு, அப்பெரிய மீன்களுக்குரிய உணவைத் தாமும் பகிர்ந்து கொள் கின்றன. பெரிய மீன்கள் உண்டவை போக. மிதந்து வரும் எஞ்சிய துணுக்குகளைப் பாய்ந்து பிடித்து உட்கொண்டு விட்டு, அவற்றிற்கு எந்தவித இடை யூறும் மீண்டும் நேராவண்ணம், அம்மீன்களின் மீது ஒட்டிக்கொண்டே செல்கின்றன. சுறா ஒட்டு மீன்கள் எனப்படும் இம்மீன்கள் சில வேளைகளில் கப்பலின் அடிப்புறத்தே ஒட்டிக் கொண்டு செல்லும் போது கடலில் நீத்தும் மனிதர்களின் மேல் ஒட்டிக் கொள்வதும் உண்டு. மேலும் பெரிய கிளி மீனின் செவுள் மூடியின் உட்புறம் தன் தலையை நீட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய ரிமோராவும் உண்டு. உணவிற்காகவும், உறைவிடத்திற்காகவும், பயணத்திற்காகவும் மட்டுமல்லாமல் அப்பெரிய மீன் களின் செவுள்களில் உள்ள கிருமிகளைத் தூய்மை செய்யும் பணியையும் ஒட்டுமீன் மேற்கொண் டிருப்பதாகக் கருதப்படுகிறது. இரு உயிரினங்கள் தனித்தனியே உண்ணும் பழக் கத்தைக் கொண்டிருந்தாலும், ஒன்று மற்றொன்றுக் குப் பாதுகாப்பான இடமளித்து அதனிடமிருந்து எவ் வித நன்மையும் பெறாமல் கூடி வாழ்தலைக் கைம் மாறு கருதா ணைவாழ்வு என்பர். மிகச் சிறிய அளவேயுள்ள கடல் நத்தையினுள் இரண்டங்குல நீளமுள்ள கார்டினல் மீன் தனியாகவோ இணை யாகவோ இருப்பதும், துறவி நண்டு நத்தை ஓட்டி னுள் குடிபுகுவதும், நீரிஸ் எனப்படும் வளைதசைப் புழுக்களுக்கு இடமளிப்பதும் இணை வாழ்வேயாகும். உயிரினங்களின் உணவுப் பழக்கம் வேறானாலும்,