614 ஒருபால் நிலை
614 ஒருபால் நிலை ஒரு பருவச்செடி வ்வகைத் தாவரங்கள் விதைகளிலிருந்து முளைத்து ஓராண்டிற்குள்ளோ ஒரு பருவத்திற்குள்ளோ அழிந்து விடும். பொதுவாக இவை 3-6 மாதமே வாழ்கின்றன. இவ்வகைத் தாவரங்கள் எளிதாக வளரக் கூடியவை. அவை பலவகை அமைப்பில் வளர் திறனும், நிறமும், அழகான பூக்களும் கொண்டவை. தொட்டியிலோ பூந்தோட்டங்களிலோ இவற்றை எளிதாக வளர்க்க லாம். பிற தாவரங்களின் உதவியில்லாமல் விதை போட்டதும் முளைத்து அழகாக மலர்கின்றன. பல பருவத் உருவாகிச் காலத்தில் மலர்ந்து பின் அழிந்து விடுகின்றன. தாவரங்களிடையே சில பெரும்பாலும் ஒரு பருவச் செடிகள் எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் வளருகின்றன. பூந்தோட்டாத்தின் ஓரத்திலும் நடைபாதை ஓரத்திலும் இவை வளர்க்கப்படுகின்றன. எ.கா. எஜி ரேட்டம், கேண்டிடஃப்ட், லோபிலியா, ப்ஃளாக்ஸ், டோரேனியா, மேரிகோல்டு, அலிசம்,காசித்தும்பை முதலியவை. தொங்கும் தொட்டிகளிலேயே வளர்க்கப் அலிசம். படுகின்ற தாவரங்களான டோரேனியா நாஸ்டர்டியம், வெர்பினா முதலியவை மிகு பய னுடையவை. கொடிகளான ஒரு பருவச் செடிகளில் கோபியா. சன்வால்வுலஸ், நாஸ்டர்டியம், மைனர்லோபேட்டா என்பன மிகு அழகூட்டுபவை. இவற்றுடன் ஆஸ்டர்ஸ் ப்ளோக்ஸ் பின்க்- சால்வியா ஜின்னியா (zinnia) வெர்பினா ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. உயர மாக வளரும் ஒரு பருவச் செடிகளான சூரியகாந்தி ட்டித்தோனியா என்பன மிக அழகூட்டுகின்றன. கோச் சியா மிகுதியான இலைகளுடன் சிறு குப்பரசஸ் தாவரத்தைப் போன்று இருக்கும். சில ஒரு பருவச் செடிகள் தொட்டிகளைவிடப் தரை யில் அழகாக இயற்கையாக வளரக்கூடியவை. ஒருபருவச் செடிகள் குறிப்பிட்ட பருவங்களில் நன்கு வளரக்கூடியவை. சில தாவரங்கள் நடுநிலைத் தட்ப வெப்பமுடைய மலைப் பகுதிகளில் வளரும். ஒரு பருவச் செடிகளை வளர்க்க வெப்பமும், மழை யளவும் தேவை. மிகுதியாக மழை பொழியும் இடங் களில் இவ்வகைத் தாவரங்களை வளர்ப்பது ஏற்ற தன்று. சிறிது மழையும், சிறிது ஒளியும் இருந்தால் வை நன்கு வளரும். எனவே ஒரு பருவச் செடிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மழைக்கால ஒரு பருவச் செடிகள் ஏப்ரல் - மே வரையிலும், குளிர்கால ஒரு பருவச் செடிகள் செப்டம்பர் - அக்டோபர் வரையிலும் கோடைக்கால ஒரு பருவச்செடிகள் மார்ச் - மே வரையிலும் வளர் கின்றன. பாத்தி அமைத்து வேண்டிய அளவு நெருக்கத்தில் இவ்வகைத் தாவரங்களின் விதையைத் தெளிக்க வேண்டும். சில ஒரு பருவச் செடிகளான காலெண்டுவா. ஜிப்சோபிலா, பாப்பி, லார்க்ஸ்பீர் ஆகியவற்றைப் பிடுங்கி வேரிடத்தில் நட முடியாது. கீழ்க் ஒரு பருவச் செடிகளை வளர்க்க, காணும் முக்கிய காரணங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இடைவெளியிட்டு விதைகளைத் தெளிக்க வேண்டும். இல்லாவிடில் வேர் அழுகல் நோய் தோன்ற வாயுப்புண்டு. நெரிசலில் தாவரங்கள் வளர்ந்தால் அவற்றைப்பிடுங்கி வேரிடத்திலோ தொட்டியிலோ நட வேண்டும். உரங்களை நீரில் கலந்து தெளித்தும் காய்ந்த. பூ. இலைகளை எடுத்தும் வந்தால் இவை பொலிவுடன் விளங்கும். ஒருபால் நிலை -பா.அண்ணாதுரை பூக்களில் ஆண் பால் உறுப்பாகிய மகரந்தத் தாள் களிலுள்ள மகரந்தம் பெண்பால் உறுப்பாகிய சூலகத் தின் சூலக மூடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை (pollination) என்று பெயர். ஒரு பூவின் மகரந்தம் அதே பூவின் சூலக மூடியை அடைவதற்குத் தன் மகரந்தச் சேர்க்கை என்று பெயர். இதனால் நிகழும் கருவுறுதல் நிகழ்ச்சி தன்னினக் கலப்பு (autogamy) எனப்படும். ஒரு பூவின் மகரந்தம் அதே சிற்றினத்தின் மற் றொரு பூவின் சூலக மூடியை அடைவதை அயல் மகரந்தச் சேர்க்கை என்பர். இந்நிகழ்ச்சியால் நிகழும் கருவுறுதலுக்கு அயலினக் கலப்பு (allogamy) என்று பெயர். அயல் மகரந்தச் சேர்க்கை ஒரே தாவரத்தின் இரு பூக்களிடையே நிகழுமானால் அதற்கு ஜீட்டி னோகேமி (geitonogamy) எனப்பெயர். ஒரு சிற்றினத் தின் வெவ்வேறு செடிகளிலுள்ள பூக்களிடையே நிகழு மானால் அது சீனோகேமி (xenogamy) எனப்படும். இது வெவ்வேறு சிற்றினத்தின் இரு பூக்களிடையே நிகழுமானால் அதற்கு கலப்பினமாதல் (hybridis- ation) என்று பெயர். ஒருபால் பூக்களிலும், இருபால் பூக்களிலும் அயல் மகரந்தச் சேர்க்கையே நிகழ்கிறது. இதற்காகப் பூக்களில் இயற்கையாகச் சில முறைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஒரு பால் நிலையாளும் (dicliny) முறை எனப்படும். பல ஒரு சிற்றினம் ஈரில்ல (dioecious) வகையாக இருக்கும்போது அயல் மகரந்தச்சேர்க்கைதான் நிகழும். இதையே ஒருபால் நிலை என்பர். இவ்வகை ஒரு பால் நிலையைப் பூக்கும் தாவரக் குடும்பங்க ளான பூசணிக் குடும்பம், ஆமணக்குக் குடும்பம்,