பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எக்லோகைட்‌

40 எக்லோகைட் எக்லோகைட் இது ஓர் அடர்த்திமிக்க பாறையாகும். இதில் பெரு மளவு செம்பழுப்பு நிறக் கார்னட்டும், இளம்பச்சை நிறமுடைய ஓம்பசைட்டும், பைராக்சின் தொகுதிக் கனிமமும் நிறைந்து காணப்படும். கார அனற் பாறை களின் மொத்த வேதியலடக்கத்தையே எக்லோ கைட்டும் (eclogite) கொண்டுள்ளது. எக்லோகைட் என்ற பெயர் ஹாயி (Haliy) என்பவரால் 1822 இல் ஃபிச்சர்ஜிபிர்ஜ் (Fitchergebirge) என்ற இடத்தில் கிடைத்த பாறைகளுக்கு இடப்பட்டது. இப்பாறை யிலுள்ள கார்னட்கள் பைரோப்பு, அல்மன்டைன், கிராசுலர் உட்கூறை மிகுதியாகக் கொண்டவை யாகும். பைராக்சினில் சேடைட், டயாப்சைடு உட்கூறுகள் மிகுந்திருக்கும். குவார்ட்ஸ், கைய னைட் ஆம்பிபோல், ஆலிவி, ஆர்த்தோபைராக்சின். சோயிசைட், மைக்கா, ரூட்டைல் முதலிய கனிமங்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. இக்கனிமங்கள் பாறைத்தோற்றச் சூழ்நிலையைப் பொறுத்து உண் டாகின்றன. ஆனால் பிளஜியோகிளேஸ் இவ்வித அருகிய கனிமமாக இப்பாறையில் இருப்பதில்லை. பொதுவாக மூவகையான எக்லோகைட்டுகள் காணப்படுகின்றன. முதல்வகை எக்லோகைட் பெரும் அடுக்குகளாகவோ, பெரிய வில்லை களாகவோ, மடிந்துவிழும் திண்டுகளாகவோ சிஸ்டுப் பாறைகளிலும், நைசுப்பாறைகளிலும் காணப்படும். இது ஆம்பிபோலைட்டுப் படிநிலையில் அமைந் துள்ளது. பொதுவாக இப்பாறையில் குவார்ட்ஸ், சோயிசைட் அல்லது கையனைட் காணப்படும். பாரேசைட் உட்கூறுகளையுடைய ஆம்பிபோல்களும் இருக்கலாம். காரப்பாறையைச் சார்ந்த நுழைவுப் பாறைகள், கிடைப்பாறைகள், எரிமலைக் குழம்புப் பாறைகள் உருமாற்றமடைந்து இத்தகைய எக்லோ கைட்டுகளாகத் தோன்றுகின்றன. படிவுப்பாறை, உருமாற்ற சிஸ்டுப்பாறைகளிடை யே உள்ள தோல் மைட்டுச் சுண்ணக்களிப்பாறைகள் உருமாற்றமடை வதாலும் இவ்வகை எக்லோகைட்டுகள் தோன்று கின் றன. இரண்டாம் வகை எக்லோகைட்டுகள் கிம்பர்லைட் மற்றும் பசால்ட்பாறைகளிடையே அகப்பட்டுள்ள பாறைத்துண்டுகளாகக் காணப்படு கின்றன. அவை கார்னட் பெரிடோடைட்டுடன் அகப்படும் துண்டுகளாகக் காணப்படுகின்றன. பெரும் பாலும் இத்தகைய எக்லோனகட்களும், பெரிடோ டைட்களும் சிறிதளவு வைரக் கனிமத்தைக் கொண் டுள்ளன. எனவே இப்பாறைகள் புவியின் புறணி யிலிருந்து (earth mantle) வெளிவந்தவை கருதப்படுகின்றது. எனக் மூன்றாம் வகை எக்லோகைட், குலுக்கோனைட் சிஸ்டைச்சார்ந்த படிநிலைப்பாறைகளிடையே பெரும் துண்டுகளாகவோ, வில்லைகளாகவோ காணப்படும். இத்தகைய எக்லோகைட்களில் கையனைட் கனிமம் இராது. ஆனால் ஓரிரு குவார்ட்ஸ் கனிமங்கள் தென்படும். மேலும் ஆம்பிபோல், எபிடோட் ரூட்டைல் அல்லது ஸ்பீன் ஆகிய கனிமங்களும் தென்படும்.சில தலையணை போன்ற அமைப்பை உடைய எரிமலைக் குழம்புப் பாறைகள் எக்லோ கைட்டாக மாறி இருப்பதைக்கொண்டு இவ்வகை எக்லோகைட்கள் புவிப்புறணியிலிருந்து தோன்றியவை எனக் கருதலாம். யான எக்லோகைட்கள் நீண்ட வேறுபாடுடைய வெப்ப - அழுத்த நிலைகளில் தோன்றுபவை. ஆயினும் அவை உயர் அழுத்த நிலையில் தோன்றியவை என்பது அப்பாறைகளின் உயர்ந்த அடர்த்தியிலிருந்து தெளிவாகும். நவீன ஆய்வுகள் பசால்ட்பாறைக்குச் சமமான வேதியலடக்கமுள்ள பாறைகள் உயர்ந்த அழுத்தநிலையில் எக்லோகைட்டாக மாறுகின்றன என்று காட்டுகின்றன. கார்னட் மற்றும் ஓம்பசைட் கனிமங்களிடையே அடக்கம். உள்ள இரும்பு மக்னீசிய பாறையின் தோற்ற வெப்பநிலையைப் பொறுத்தது. அவற்றின் மூலம் மூவகை எக்லோகைட்கள் உண்டாகும் வெப்ப அழுத்தநிலை எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒப்பிடுகையில் மூன்றாம் வகை எக்லோகைட் குறைந்த வெப்பநிலையில் தோன்றியதாகும். முதல் வகை எக்லோகைட் அகன்ற வெப்ப அழுத்த நிலை வேறுபாடுகளில் தோன்றக் கூடியதாயிருக்கலாம். எனினும் மூன்றாம் வகை எக்லோகைட்டின் தோற்ற வெப்பநிலையைவிட முதல்வகை எக்லோகைட் சிறிது உயர்ந்த வெப்ப நிலையில் தோன்றும். இரண்டாம் வகை எக்லோகைட் மிக உயர்ந்த வெப்ப அழுத்த நிலைகளில் உண்டாகும். அவற்றின் தோற்றநிலை புளிப்புறணியின்வெப்ப அழுத்தநிலைக்கு ஒத்திருக்கும். உயர்ந்த வெப்ப அழுத்தத்தில் உண்டாகும் உருமாற்றநிலை எக்லோகைட்படிநிலை எனப்படும். பசால்ட்டின் மொத்த வேதியலடக்கத்தைக் கொண்ட பாறைகளில் பைரோப்பு -அல்மன்டின் கார்னட்டும், ஓம்பசைட்டும் குவார்ட்ஸ் அல்லது கையனைட்டுடன் இருப்பதைக் கொண்டு எக்லோகைட் படிநிலையை அறியலாம். மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள சிஸியா- இலாசோ பகுதிகளில் உருமாறிய கிரானைட் நைசுப்பாறைகளிலும், மைக்காசிஸ்டிலும், படிவுப் பாறையும் கிரானைட்டும் எக்லோகைட் படிநிலையில் உருமாற்றமடைந்து மிகச் சிறந்த ஓம்பசைட் கார் னட் - குவார்ட்ஸ் கனிமக்கூட்டமைப்பைத் தோற்று வித்துள்ளன. உரு எக்லோகைட் படிநிலைக்கும் ஏனைய மாற்றப்படிநிலைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி விரிவாக அறியப்படவில்லை. எக்லோகைட், நீல சிஸ்டு மற்றும் ஆம்பிபோலைட் படிநிலை ஓரளவு