பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 ஒலி

618 ஒலி ஒலிகளையும் பொதுவாகக் கேளா ஒலிகள் அல்லது செவியுணரா ஒலிகள் எனலாம். ஒலிகளைக் கண்டுணர ஒலி ஏற்பிகள் பயன் படுகின்றன. காற்றிலோ வளிமங்களிலோ பரவும் ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றப் பயன்படும் நுட்ப ஒலி ஏற்பி (microphone) நீருக்குள் இப்பணி யைச் செய்யவல்ல நீர் ஊடக ஒலி ஏற்பி (hydrophone) போன்றவையும், செவிகளும் ஒலி ஏற்பிகளாகும். ஒரு பொருள் அலைவுறுவதால் ஊடகத்தில் தொடர்ந்து தோற்றுவிக்கப்படும் அலைவுகள் காரண மாக ஊடகத்தில் அலையியக்கம் ஏற்படுகிறது. அலையியக்கத்தின் அதிர்வெண், திசைவேகம், செறிவு (intensity) முதலிய அலைப் பண்புகளை அளத்தல் ஒலியியல் அளவீடு (acoustic measurement) எனப் படும். பல பொருள்கள் அதிரும்போது ஊடகத்தில் பல அதிர்வெண்களுடைய அலைவுகள் தோற்று விக்கப்படுகின்றன. இக்கூட்டு அதிர்வுகள் (complex vibrations) விரும்பத்தக்க இசை ஒலிகளாகவோ வெறுப்பூட்டும் இரைச்சலாகவோ அமைகின்றன. பேச்சு, இசை, ஓசை ஆகிய நிகழ்வுகளிலும், புவியியல் ஆய்வு, ஆழ்கடல் ஆய்வு, தொழில்துறை, மருத்துவம், இசையரங்கம். திரையரங்கம், வானொலிப்பரப்பு அறை போன்ற கட்டட அமைப் புகளிலும் ஓசைக் கட்டுப்பாடு போன்றவற்றிலும், மேலும் பல அறிவியல் ஆய்வுகளிலும் ஒலிபியல் பயன்படுகிறது. ஒலியின் தோற்றம், ஒலி ஏற்படும்போது அதனை விளைவிக்கும் ஒலி மூலம் அதிர்வு நிலையில் இருக்கும். சான்றாக காற்றில் ஓர் உலோகத் தகடு அதிரும் போது அதன் பரப்பை ஒட்டியுள்ள காற்று மூலக் கூறுகள் மாறி மாறி நெருக்கப்பட்டும் விலக்கப்பட்டும் இயக்கத்திற்குட்படுத்தப்படும். இவ்வகை நெருக்க மும் விலக்கமும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படும் போது ஒலி அலைகளாகக் காற்றில் பரப்பப்படு கின்றன. இங்கு இத்தகைய அலைகள் ஏற்படக் காரணம் ஊடகமாகிய காற்றில், தகட்டினால் தக்கவாறு ஏற்படுத்தப்பட்ட அடர்த்தி மாற்றமே யாகும். இவ்வகையான அடர்த்தி மாற்றத்தை மீள் தன்மையுள்ள பிற திண்ம, நீர்ம வளிமப் பொருள் களிலும் ஏற்படுத்தி ஒலியை விளைவிக்கலாம். ஒலியை ஏற்படுத்தும் ஒலி மூலங்களை எந்திரவிய லாகவோ, வெப்பவியல் முறையிலோ, மின்னியல் காந்தவியல் பண்புகளைக் கொண்டோ அதிரச் செய்யலாம். சீரியல்பியக்கம். படம் 1 இல் P எனும் துகள் சீரான வேகத்துடன் வட்டப் பாதையில் சுற்றி வருவ தாகக் கொள்வோம். இத்துகளிலிருந்து விட்டம் M P B படம் 1. I ABக்கு ஒரு செங்குத்துக்கோடு வரைய, அக்கோட்டின் அடிப்புள்ளி M ஆகும். துகள் வட்டப்பாதையில் சீராக இயங்கும்போது புள்ளி M விட்டம் ABயில் Aக்கும் Bக்கும் இடையே முன்பின்னாக இயங்கும். M இன் இயக்கம் சீரியல்பியக்கம் (simple harmonic motion) எனப்படும். துகள் p நிலை 1 இல் இருக்கும் போது M வட்டமையம் Oவுடன் ஒன்றியிருக்கும். துகள் நகரும்போது MO விலிருந்து இடம் பெயர் கிறது. படத்தில் O[ க்கும் OPக்கும் இடைப்பட்ட கோணம் 8 எனவும் OP இக் கோணத்தை ஏற்படுத்த ஆகும் நேரம் t எனவும் கொண்டால் P அல்லது M இன் கோணத் திசைவேகம் (angular velocity) i=ut. Oஇலிருந்து Mஇன் இடப்பெயர்ச்சி 8 1== y எனில், y = OP sin A. M அடையும் பெரும் இடப் பெயர்ச்சி அல்லது Mஇன் வீச்சு = OP; OP = a என்க. ஃy - a sin A அல்லது y=a sin wt. இச்சமன்பாடு பொதுவாக சீரியல் பியக்கத்தைக் குறிக்கும். இவ்வகை இயக்கமடையும் எப்பொருளுக்கும், திசை வேகம்ய = dv dt = a w cos wt முடுக்கம் = d'y/dt' = - a w³ sin wt saca, dry + w²y ஆகவே, + w²y = 0 w'y M, A -இலிருந்து B க்குச் சென்று திரும்பி A ஐ வந்த டைந்தால் ஓர் அலைவு முழுமையடைகிறது. இதற்கு