622 ஒலி
622 ஒலி இவ்விரு திசைவேகங்களின் தகவு dy/dt - dx/dt = dy/dx. dy dx வளைகோட்டின் சரிவு (slope). மேலும், அலையியக்கத்திற்கான வகைகெழுச் சமன் பாடு, d'y dt2 ย 2 d2y dx" இதில் " அலையின் திசைவேகமாகும். ஊடகம். ஒலி பரவுவதற்கு ஊடகத்தின் மீள் தன்மை மிகவும் முக்கியமானது. வளிமங்கள் அமுக்கத்தன்மை (compressibility) மட்டுமே உடை யனவாதலால். அவற்றின் வழியே நெட்டலைகள் மட்டுமே பரவ இயலும். நீர்மங்களின் பரப்பு இழு விசை காரணமாக அவற்றின் பரப்புக்களில் குற்றலை களாகிய (ripples) குறுக்கலைகளையும், அவற்றி னூடே நெட்டலைகளையும் பரவச் செய்யலாம். திண்மப் பொருள்கள் நீள்தன்மை (lensitily). விறைப்பு (rigidity), அமுக்கத்தன்மை ஆகிய பண்புகள் உடையன வாதலால், அவை குறுக்கலைகளையும் நெட்டலை களையும் பரப்ப உதவும். அலை முகப்புகள். புள்ளி வடிவ ஒலி மூலத்தி லிருந்து ஒரு படித்தான ஊடகம் வழியே பரவும் ஒலியாற்றல் எல்லாத் திசைகளிலும் பரவும். அப்போது அந்த ஒலி அலைகளின் அலைமுகப்பு (wave front) Canon வடிவுடையதாகும். ஆகவே இவ்வகை அலைகள் கோள அவைகள் எனப்படும். ஒலி மூலத்திலிருந்து மிகத் தொலைவில் பரவும் கோள் அலையின் அலைமுகப்பைச் சமதள அலை முகப்பு எனவும் அந்த அலையைச் சமதள அலை எனவும் கொள்ளலாம். முன்னேறும் அலை. ஓர் ஊடகத்தின் முன்னேறும் அலை (progressive wave) ஊடகத்தின் துகள்களை அதிர்வுறச் செய்கிறது. X அச்சின் நேர்திசையில் (x) தொடக்கப் புள்ளி விலிருந்து X தொலைவில் உள்ள ஒரு துகள் அடையும் இடப் பெயர்ச்சியை, y = a Sin 27 (ut-x) எனும் சமன்பாட்டால் குறிக்கலாம். இங்கு அலை நீளத்தையும், அலை பரவும் திசைவேகத்தையும், A துகளின் வீச்சையும், t, 0 இலிருந்து X தொலைவுக்கு அவை பரவ ஆகும் நேரத்தையும் குறிக்கும். இதுவே முன்னேறும் அலைக்கான சமன்பாடாகும். ஓர் அலை முன்னேறும்போது ஆற்றலைச் சுமந்து செல்கிறது. எந்த ஒரு கணத்திலும் அவ்வாற்றலின் ஒரு பகுதி நிலையாற்றலாகவும் மறுபகுதி இயக்க ஆற்றலாகவும் இருக்கும். எந்த ஒரு கணத்திலும் அலகு பருமனில் அமையும் ஆற்றல், இடப்பெயர்ச்சி y படம் 5. 4a² 2 X ஆகும். இங்கு p ஊடகத்தின் அடர்த்தியைக் குறிக்கிறது. குறுக்கீட்டு விளைவு. ஒரே அதிர்வெண்ணும் ஒரே வீச்சும் உடைய இரண்டு ஒலியலைகள் ஒரே நேர் கோட்டில் பரவும்போது அவற்றிடையே குறுக்கீட்டு விளைவு ஏற்படுகிறது. விம்மல்கள் ஒரே வீச்சும், அதிர்வெண்களில் சில வேறுபாடும் உள்ள இருவேறு சீரியல்பு ஒலியலைகள் ஒரே திசையில் பரவினால் அவை ஒன்றோடொன்று பொருந்த ஒலிச்செறிவில் எழுச்சியும் வீழ்ச்சியும் (waxing and waning) அடுத்தடுத்து ஏற்படும். இந் நிகழ்ச்சி விம்மல் (beat) எனப்படுகிறது.n, 1g அதிர் வெண்கள் உள்ள இரண்டு அலைகளால் 1 நொடியில் ~, விம்மல்கள் ஏற்படும். ஒரு நொடியில் ஏற்படும் விம்மல்களின் எண்ணிக்கை 10 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே கேட்க இயலும். இணை ஒலிகள். அதிக வீச்சும், அதிர்வெண்ணில் சிறு வேறுபாடும் உள்ள இரண்டு ஒலி இரண்டு ஒலி அலைகள் ஒரே திசையில் பரவிப் பொருந்தும் விளைவாக, (n-n,), (n-2n,), (n,-3ng), போன்ற அதிர் வெண்கள் உடைய வேறுபாட்டு ஒலிகளும் (differential tones), (n₁+n,), (n₁ + 2n,), (n,+3n,)...........**** போன்ற அதிர்வெண்கள் உள்ள கூட்டு ஒலிகளும் (summational tones) ஏற்படும். இவற்றிற்கு இணை ஒலிகள் (combinational tones) எனப்பெயர். டாப்ளர் விளைவு. ஓரிடத்தில் உள்ள ஓர் ஒலி மூலத்திலிருந்து பரவும் ஒலியை மற்றோர் இடத்திலி ருந்து ஒருவர் கேட்கும்போது அதன் அதிர்வெண் n