பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலி 623

ஹெர்ட்ஸ் என்க. ஒலியின் திசைவேகம் இப்போது ஒலிமூலம் கேட்பவரை நோக்கி Vs திசைவேகத்துடன் நகர்வதாகவும், கேட்பவர் ஒலி மூலத்திலிருந்து VL திசைவேகத்துடன் விலகிச் செல்வதாகவும் கொள்ள லாம். ஒலி பரவும் திசைக்கு 6 கோணத்தில் காற்றும் வீசினால் இப்போது அவர் கேட்கும் ஒலியின் அதிர் வெண், n³ 1 +w cos B-VL х п

  • + w cos -vs

ஹெர்ட்ஸ் இதில் கேட்பவரை நோக்கி வீசும் காற்றின் திசை வேகம். இவ்வாறு ஒலிமூலத்திற்கும் கேட்பவருக்கும் சார்பியக்கம் (relative motion) ஏற்பட்டால், கேட்கப் படும் ஒலியின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்படும் விளைவு டாப்ளர் விளைவு எனப்படும். சார்பியக்கத் திசைவேகம் (relative vclocity) ஒலியின் திசைவேகத் தைவிடக் குறைவாக இருந்தால் மட்டுமே இவ் விளைவு நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. நிலையலைகள். ஒரே வீச்சும் ஒரே அலைவு நேர மும் உள்ள இரண்டு ஒலி அலைகள் எதிரெதிர்த் திசைகளில் ஒரே வேகத்தில் ஒரு நேர் கோட்டில் அமையுமானால் அவை பொருந்தும் காரணமாக நிலையலைகள் (stationary waves) ஏற்படும். வகை அலைகளில் நெருக்கங்களும் தளர்ச்சிகளும் தோன்றி மறையுமே தவிர முன்னேற்றம் இன்மை யால் இவற்றிலிருந்து ஆற்றலும் பரவுவது ல்லை. நியூட்டன்- லாப்லாஸ் வாய்பாடு. ஓர் ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் என்பது நியூட்டன் வாய்பா டாகும். இதில் E ஊடகத்தின் மீள் தன்மை மாறிலி யும் (elasticity) p அதன் அடர்த்தியும் ஆகும். நியூட் டன் இவ்வாய்பாட்டுக்கு வழிவகுத்துக் காற்றில் ஒலி யின் திசைவேக மதிப்பைக் கணக்கிட்டபோது அதில் ஏற்படும் நெருக்கங்களும் தளர்ச்சிகளும் சமவெப்ப நிலை நிகழ்வுகள் (isothermal processes) கொண்டு, ஊடக அழுத்தம் P எனில். E = = P எனக் P எனக் கண்டு ன் ம். மதிப்பைக் கணக்கிட்டார். இம்மதிப்பு ஆய்வு முடிவு களைவிடக் குறைவாக இருந்தது. பின்னர் லாப்லாஸ் ஊடகத்தில் ஏற்படும் நெருக்கங்களும் தளர்ச்சிகளும் வெப்ப மாற்றீடற்ற நிகழ்வுகள் (adiabatic processes ) எனக் கண்டு, ஊடகத்தின் வெப்ப எண்களின் தகவு (ratio of specific heats) y எனில், = YP என்னும் சமன்பாட்டால் திசைவேகத்தின் சரியான மதிப்பைக் கணக்கிட்டார். ஒலி 623 அழுத்தம். வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றால் திசைவேகம் மாற்றமடைதல். காற்றில் ஒலியின் திசை வேகம் அதன் அழுத்தத்தைப் பொறுத்ததன்று. எனினும், வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடும். T. தனி வெப்பநிலையில் (absolute temperature) திசைவேகம் V, எனவும் T. தனி வெப்பநிலையில் திசைவேகம் V எனவும் கொள்ள, VJV. - VT/T. ஆகும். மேலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும்போது ஒலி யின் திசைவேகம் அதிகரிக்கிறது. காற்றுக்குப் பொருந்துவது போன்றே பிற வளிமங்களுக்கும் ஏ P p எனும் வாய்பாடு பொருந்தும். நீர்மங்களில் ஒலியின் திசைவேகங் களைக் கணக்கிட இக்கோவையை ஒத்தv = /yBT/p எனும் கோவை பொருந்தும். இதில் B. என்பது நீர்மத்தின் சம் வெப்பநிலைப் பருமக் குணகம் (isothermal bulk modulus) ஆகும். பிற பண்புகள். ஒளியைப் போன்றே ஒலியும் மீளல் (reflection), விலகல் (refraction), ஊடகங்களில் உட்கவரப்படல் (absorption) பிரிகை (dispersion), விளிம்பு விளைவு (diffraction), சிதறல் (scattering) ஆகிய பண்புகளை உடையது. ஒலிக்கதிர். ஒலி அலை முகப்புக்குச் செங்குத் தான கோட்டை ஒலிக்கதிர் (ray) எனலாம். ஒரே திசையில் அமையும் பல கதிர்களின் தொகுப்பு ஓர் ஒலிக்கற்றை (beam) ஆகும். ஒலி ஆற்றல் பரவும் போது விளையும் மீளல், விலகல் போன்ற நிகழ்வு களை அறிய ஒலியின் அலைக் கொள்கையையோ (wave concept) கதிர்க் கொள்கையையோ (ray concept) தக்கவாறு பயன்படுத்தவேண்டும். பாய்ம ஊடகங்களில் ஒலி மீளலும், விலகலும் சமதள ஒலி அலை ஒன்று ஊடகத்தில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் எனவும் கணமதிப்பு P ஊடகத்தின் சமநிலை அடர்த்தி po எனவும். ஒலியின் திசைவேகம் எனவும் கொள்ள; ஒலி அலையின் செறிவு 1 ph[pv என ஆகும். ஓர் ஊடகத்தின் சமநிலை அடர்த்தி அதில் ஒலியின் திசைவேகம் எனில், பெருக்குத் தொகை pv அவ்வூடகத்தின் பண்பியல் எதிர்ப்பு (characteristic impedance) எனப்படும். பாய்ம 2 ஊடகங்களில், P, பண்பியல் எதிர்ப்புள்ள ஓர் ஊடகத்திலிருந்து P_ எதிர்ப்புள்ள அடுத்த ஊடகத்திற்கு ஒலி பரவும்போது இவ்விரு ஊடைகங் களின் பிரி தளத்தில் ஒலி அலை மீளலும் ஒலிவிலக லும் ஏற்படலாம். மீளல் நிகழும்போது, மீள் ஒலி அலையின் ஆற்றலுக்கும் படு ஒலி அலையின் ஆற்றலுக்கும் உள்ள தகவு ஒலித்திறன் மீளல் என்