பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ 41

எக்ஸ் கதிர் 41 நீரற்ற பகுதிகளில் உண்டாகிறது. இவ்வாறு உண்டான எக்லோகைட்டின் கனிமக் கட்டுக்கோப் பைக் கொண்டு அப்பாறை நீரற்ற சூழ்நிலையில் தோன்றியுள்ளது எனலாம். படிவுப்பாறையடுக்கு இறுக்க உருமாற்றக்கொடிகளில் காணப்படும் பருக் கைப்பரல் தன்மைகொண்ட எக்லோகைட்களில் உள்ள ஓம்பசைட், கையனைட் அல்லது குவார்ட்ஸ் கனிமங்களில் காணப்படும் நீர்மவளிமக் குமிழிகளின் மூலம் எக்லோகைட் மாற்றநிலை மிகுதியான நீர்ம- வளிமங்களின் இயக்க ஆற்றலால் உண்டாகிறது என்று தெரியவருகிறது. நீர்செறிந்த சூழ்நிலைகளில் மிக உயர்ந்த அழுத்தநிலைகளில்தான் எக்லோகைட் நிலை பெறுகிறது என்றாலும் இக்கட்டுப்பாட்டைத் தளர்த்தும் கார்பன் டைஆக்சைடு, காலைட் உப்புகள். போன்றவை இம்மாற்றநிலையில் பங்குகொள்வதால் எக்லோகைட் உண்டாகத் தேவையான அழுத்த நிலையைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கின்றன. எக்லோகைட்டின் உயர்ந்த அடர்த்தியும் அதன் மீள்விசைப் பண்பும் அதை ஒரு புவிப்புறணிப் பொருளாகக் கருதச் செய்கின்றன. புவியோட்டின் கீழிறக்கத்தால், கடல்தள பசால்டிக் ஓடு பெருமள வில் புவிப்புறணியை வந்தடைகின்றது. புவிப்புறணியி லுள்ள உயர்ந்த வெப்ப அழுத்த நிலை கீழிறக்கப் பாறையை எக்லோகைட்டாக உருமாற்றுகிறது. புவிப்புறணியில் அமைந்துள்ள எக்லோகைட்டின் தெரியவில்லையாயினும் இடப்பரப்பளவு பற்றித் புறக்கருப்பகுதியில் எக்லோகைட் உள்ளது பற்றிக் கிம்பர்லைட் மற்றும் பசால்டிக் எரிமலைவாய்க்குழல் களில் கிடைக்கும் எக்லோகைட் உருண்டைகளி லிருந்து அறியலாம். இரா. இராமசாமி நூலோதி. F.J. Turner, Metamorphic Petrology, Mineralogical and Field Aspects, McGraw-Hill Book Company, New York, 1968; F.H. Hatch, et. al., Petrology of the Igneous Rocks. CBS Publishers of Distributors, 1984. ஏதேனும் புதிய கதிர்களை வெளியிடலாம் என்ற ஐயம் ஏற்பட்டது. ஏற்பட்டது. குழாய் நிறுத்தப்பட்டவுடன் ஒளிர்வதும் நின்றுவிடுகிறது. எனவே, குழாயிலிருந்து தான் அக்கதிர்கள் வருகின்றன என்பது புலனாயிற்று. மீண்டும் மின்னிறக்கக் குழாய் செயற்படுகிறது. ஆனால் குழாய் கனமான கருநிற அட்டைகளால் மூடப்படுகிறது. இப்போதும் படிகங்கள் ஒளிர்கின்றன; இக்குழாய் ஊடுருவு திறன் மிக்க, இதுவரை அறியாத புதிய கதிர்களை வெளியிடுகிறது. இவற்றின் மூலமும், வகையும் தெரியவில்லை; இவற்றை எக்ஸ் கதிர்கள் எனக் குறிப்பிடலாம் என முடிவு செய்தார். இ. கதிரை ராண்ட்ஜன் கதிர்கள் என்றும் கூறுவர். அறிவியல், பொறியியல், மருத்துவம் துறைகளின் வளர்ச்சிக்கு இக்கதிர்கள் துணை நிற்கின்றன. எக்ஸ் கதிர் உருவாக்கம். விரைந்து எலெக்ட்ரான்கள், இலக்குகளின் எ போன்ற பெரிதும் செல்லும் கனமான அணு களால், திடீரெனத் தடுத்து நிறுத்தப்படும்போது அல்லது வேகக் குறைவு அடையும்போது. எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வுண்மையின் அடிப்படையில் இக்கதிர்களைத் தோற்றுவிப்பதற்கான குழாய்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் வளிமக் குழாய், கூலிட்ஜ் குழாய், பீட்டாட்ரான் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மின்னிறக்கக் வ வளிமக்குழாய். மாற்றங்கள் செய்து மி.மீ. அளவுக்கு வளிம கண்ணாடிக் குமிழின் வலப் பக்கக் குழாயில் குழிந்த எதிர்முனை வைக்கப்பட்டிருக்கிறது. அதன் எதிரே குழாயில் சில து உருவாக்கப்பட்டது. 10-4 நீக்கம் செய்யப்பட்ட எக்ஸ் கதிர் தற்செயலான சிந்தனையால் அரிய கண்டுபிடிப்புகளாகி விடுகின்றன. எக்ஸ்-கதிர்கள் கண்டுபிடிப்பும் தற்செயலாக நிகழ்ந்த ஒன்றே ஆகும். 1895 ஆம் ஆண்டு ராண்ட்ஜன் என்ற ஜெர்மானிய அறிவியலார் வளிமங்களின் வழியே மின்னிறக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந் தார். அப்போது, ஆய்வுக் கருவிகளுக்கு அருகே இருந்த, பேரியம் பிளாட்டினோ சைனைட் படிகங்கள் ஒளிரக் கண்டார். இதனால் மின்னிறக்கக் குழாய் சில நிகழ்ச்சிகள் அறிவியலாரின் + படம் 1. எக்ஸ்கதிர்