பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 ஒலி

626 ஒலி உரியது. இயல்பாகக் கேட்கும் திறன் உடைய ஒருவர் ளைஞராயின் 20முதல் 20000 ஹெட்ஸ் வரையிலும் முதியவராயின் 20-12000 ஹெர்ட்ஸ் வரையிலும் உள்ள அதிர்வெண் நெடுக்கத்தில் ஒலிகளைக் கேட்க இயலும். ஒலிச்செறிவு. குறிப்பிட்ட அதிர்வெண் உடைய ஒலியை, இயல்பாகக் கேட்கும் திறனுடைய ஒருவர் கேட்க அவ்வொலியின் சிறுமச் செறிவு எவ்வளவு இருக்க வேண்டுமோ அந்த அளவு கேள் செறிவுக் கீழ் எல்லை (threshold of audibility) ஆகும். காற்றின் வழியே 1000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் உள்ள தனி ஒலியின் கேள் செறிவுக் கீழ் எல்லை10-19 வாட்/மீட் இது .00002 நியூட்டன்/மீ = .0002 டைன்/செமீ." அல்லது மைக்ரோபார் பயனுறு அழுத்தம் (effective pressure) உடைய ஒலியாகும். செவியில் படும் மிகச் சிறு ஒலி அழுத்தமாகிய 00001 நியூட்டன்/மீ அழுத்தத்திற்கும் செவிப்பறை 10-11மீட்டர் இடம் பெயர்ந்து செவியுறு ஒலி ஏற்கப்படுகிறது எனும் உண்மை குறிப்பிடத்தக்கது. ஒலியின் செறிவை அறியச் செறிவு மட்டம் எனும் மடக்கை அளவுத் திட்டம் பயன்படுகிறது. இதில் கேள் செறிவுக் கீழ் எல்லையாகிய 10-12 வாட்/மீ ' செறிவே சுட்டுச் செறிவாகக் கொள்ளப்படுகிறது. இந்த அளவுத் திட்டத்தின்படி, ஒலிச்செறிவு I. I செறிவு மட்டம் = 10108- டெசிபல், எனும் சமன்பாட்டால் பெறப்படும். இங்கு 1 -10 -12 வாட்/ மீ . வெவ்வேறு அதிர்வெண்களுக்குச் செறிவுக்கீழ் எல்லை வெவ்வேறாக அமையும். இதேபோன்று கேள் செறிவின் மேல் எல்லையும் அமையும். இதனைப் படம் 8 இலிருந்து அறியலாம். கேள் செறிவின் மேல் எல்லையைவிட அதிகச் செறிவு மட்டமுடைய ஒலிகள் செவியில் வலியைத் தோற்றுவிக்கும் இந்த மேல் எல்லை ஒருவருக்கு ஒருவர் வேறுபடக் கூடும். . ஒலியின் பயன்கள். உயிரினங்களின் குரல் ஒலி களும். மனிதர்களின் பேச்சு, இசை ஆகியவையும் ஒலியின் பயன்களே. இவற்றைப் பதிவு செய்து மீட்பதிலும், புவியியல் ஆய்வு, கடல் ஆய்வு கட்டட அமைப்பு, தொழில் துறை, மருத்துவம், ஓசைக் கட்டுப்பாடு, பிற அறிவியல் ஆய்வுகள் ஆகிய வற்றிலும் ஒலி பயன்படுகிறது. பேச்சும் இசையும். நுரையீரலிலிருந்து அழுத்தத் தால் வெளியேற்றப்படும் காற்று, குரல் வளை யிலுள்ள குரல்நாண்களிடையே வெளியேறும்போது குரல் ஒலி தோன்றுகிறது. இதனை வாய், மூக்கு, பல், உதடு ஆகியவற்றால் தக்கவாறு பண்பேற்று வதால் (modulated) பேச்சும் குரலிசையும் தோன்று கின்றன. இசை ஒலிகளைத் தோற்றுவிக்கும் கருவி களைப் பிணைப்பு அதிர்வு அமைப்புகள் எனலாம். சில அதிர்வெண்களையும் அவற்றின் தொகுப்பு செறிவுமட்டம் (டெசிபெல்) 120 100 80 60 40 20 கேள்செறிவு மேல் எல்லை. கேள் செறிவுக் கீழ் எல்லை -10 20 50 200 1000 5000 10000 அதிர்வெண் (ஹெர்ட்ஸ்) படம் 8. 0 களையும் ஏற்படுத்தும் இவற்றை ஒலியியல் வடிப் பான்களாகவும் கருதலாம். இசைக் கருவிகளை நரம்புக் கருவிகள், காற்றுக் கருவிகள், தாளக்கரு விகள் என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவது வழக்கம். தற்காலத்தில் மின்னணு அலை யியற்றிகளைக் கொண்டு உருவாக்கப்படும். மின்னணு படுகின்றன. சைக் கருவிகளும் பயன்படுத்தப் ஒலிப்பதிவும் ஒலி மீட்பும், வானொலி, திரைப்படம் தொலைக்காட்சி, காட்சிப் பெட்டி அமைப்புகள் (video systems) ஆகியன மலிந்துவிட்ட இக் காலத்தில் ஒலிப்பதிவும் மீட்பும் மிகவும் முன்னேற்ற மடைந்த ஒலியியல் பயன்களாகும். நெகிழி வட்டுக் களில், ஓரத்திலிருந்து மையப்பகுதிவரை சுருள் வடிவில் மாறு ஆழப்பள்ளங்களாக (grooves of varying depths) ஒலியைப் பதிவு செய்தல் பழைய முறை. ஊசி ஒன்று இப்பள்ளத்தில் நிறுத்தப்பட்டு, வட்டுச் சுழற்றப்படும்போது, பள்ளத்தின் மாறு ஆழத்திற் கேற்ப ஊசி அதிர்வுற்று ஒலி மீட்கப்படும். எந்தச் சுழற்சி வேகத்தில் ஒலி பதிவு செய்யப்பட்டதோ அதே சுழற்சி வீதத்தில் வட்டும் சுழன்றால் ஒலி மீட்பும் சரியாக நிகழும். ஒலிப்பதிவும் மீட்பும் ஒளியியல் முறையிலும் செய்யப்படுகின்றன. திரைப்படச் சுருள்களில் ஒலி இம்முறையிலேயே பதிவு செய்யப்படுகிறது. படச் சுருளின் ஓரத்தில் படும் ஒளிக்கற்றையை ஒலி அலை களுக்கேற்பப் பண்பேற்றமடையச் செய்து ஒளிப்படப் பதிவாக (photographic record) ஒலிப்பதிவு செய்யப் படுகிறது. இப்பதிவின் வழியே ஒளியைச் செலுத்தி