628 ஒலி உட்கவர்பு
628 ஒலி உட்கவர்பு பாகுத் தன்மை குறைகிறது. ஆனால் வளிமத்தின் பாகியல் வெப்பநிலைக்குத் தகுந்தவாறு மிகும். பாகுத் தன்மை காரணமாக ஏற்படும் ஒலி உட்கவர்பினைப் பின்வரும் தொடர்பின் மூலம் அறியலாம். U= 16π'f' 3p. C
- = உட்கவர்பு எண்: 1 = பாகியல் எண்;
f = ஒலியின் அதிர்வெண் ; C ஒலியின் திசை வேகம்: P. பாய்மத்தின் சமநிலை அடர்த்தி (equilibrium density). இந்தத் தொடர்பு குறைந்த அதிர்வெண்களுக்கு மட்டும் பயன்படும். வெப்பக் டைப்பட்ட கடத்தல். ஒலியலைகள் பாய்மத்தின் வழியே செல்லும் போது அமுக்கத்தின் (compression ) காரணமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. தளர்ச்சியின் காரணமாக வளிமத்தைக் குளிர்விக்கும் இடை காலத்தில் வெப்பச்சரிவு (temperature gradient) ஏற் படுகிறது. இது ஒரு மீளா (irreversible) நிகழ்வு. இம்முறையில் ஆற்றல் வெப்பமாக மாறிக் குறை கிறது. இம்முறையின் மூலம் ஏற்படும் உட்சுவர் பினைக் கீழ்வரும் தொடர்பின் மூலம் அறியலாம். y-1 n = 42f2MK Po C₂ Co
- 2
Cp Cv M = மூலக்கூறு எடை; po = K = வெப்பங் கடத்தும் திறன். சமநிலை அடர்த்தி; இத்தொடர்பு குறைந்த அதிர்வெண்களுக்கு மட்டும் பயன்படும். பொதுவாக ஒரே அதிர்வெண் ணிற்கு v ஐவிட அதிகமாக இருக்கும். இரண்டு முறைகளிலும் ஏற்படும் மொத்த உட்கவர்பு ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும். ஒரு fn பகுதி மாறு வெப்பக் கதிர்வீசல். பாய்மத்தின் அடுத்துள்ள பகுதியின் வெப்பநிலையைவிட பட்டிருக்கும்போது வெப்பக் கதிர்வீசல் ஏற்படு கிறது. இது மின்காந்த அலை நிகழ்ச்சியாகும். ஒலி உட்கவர்தலில் வெப்பக் கதிர்வீச்சு மிகச்சிறிய அளவே பங்கேற்கிறது. விரவல். இரண்டு வளிமங்கள் ஒன்றோடு ஒன்று விரவும்போது விரவல் ஏற்படுகிறது.வெப்பக்கடத்தல், பாகுத்தன்மை முதலிய முறைகளில் ஏற்படும் ஒலி உட்கவர்பினை ஒப்பிடும்போது விரவல் முறையில் ஏற்படும் ஒலி உட்கவர்பு மிகக் குறைவு. வளிமங்களில் அவற்றின் மூலக்கூறுஎடைகள் அதிக அளவில் வேறுபட்டால் விரவல் முறையில் ஏற்படும் ஒலி உட்கவர்வு மற்றைய முறைகளில் ஏற்படும் உட்கவர்பைவிட ட அதிகமாக இருக்கும். கலவை பாய்மங்களில் உட்கவர்பினை அளத்தல் பாய்மங்களில் ஏற்படும் உட்கவர்பினை எந்திர, ஒளி, மின், வெப்ப முறைகளில் அளக்கலாம். இந்த எல்லா முறைகளும் ஓரிடத்தில் ஒலியின் செறிவு மூலத்தில் இருந்து அவ்விடத்தின் தொலைவைப் பொறுத்து மாறும் எனும் கொள்கையடிப்படையில் ஆனவை. எந்திரமுறை. நீர்மங்களில் ஏற்படும் ஒலி உட் கவர்பினை மட்டும் அளக்கப் பயன்படும். ஒலிச் செறிவினைப் பொறுத்து மாறுபடும் கதிர்வீச்சின் அழுத்தத்தின் மூலம் செங்குத்துக் கற்றையில் ஒலியின் செறிவை அளக்கலாம். ஒளியியல் முறை. நீர்மங்களுக்கு மட்டும் பயன் படும் இம்முறையில் ஒலிக் கற்றையினால், ஒளி விளிம்பு விளைவு அடைகிறது. அதாவது ஒலிக் சுற்றை கீற்றணியாகச் செயல்படுகிறது. ஒலியின் செறிவு அதிகமாக உள்ளபோது அதிக விளிம்பு விளைவுப் பட்டைகள் (diffraction bands) ஏற்படு கின் றன. மின்முறை. வளிமங்களுக்கும், நீர்மங்களுக்கும் இம்முறை பயன்படுகிறது. எந்த ஊடகத்தில் ஒரு உட்கவர்பினை அறியவேண்டுமோ அதே ஊடகத்தில் அழுத்த மின் படிகத்தை (piezo crystal) வைத்து ஒலிக் கற்றையின் ஒலிச் செறிவைத் தொலை விற்குத் தகுந்தவாறு அறியலாம். ஏற்படக் வெப்பமுறை. ஒலி செல்லும்போது கூடிய வெப்பத்தை நேரடியாக அளந்து ஒலியில் ஏற்படும் செறிவு இழைப்பை அறியலாம். வளிமங்களுக்கு ஆய்வு மதிப்புகள். மேலே கூறிய முறைகளின் மூலம் அறியப்பட்ட மதிப்புகள், பாகுத் தன்மை மற்றும் வெப்பக் கடத்தல் காரணமாக ஏற் படும் ஒலி உட்கவர்பு மதிப்புகளுக்குச் சரியாக அமைந் துள்ளன. ஆனால் உயர்ந்த அதிர்வெண்ணுக்கும். குறைந்த அழுத்தத்திற்கும் இரண்டு மதிப்புகளும் ஒன்றாக இருப்பதில்லை. மிகுந்த சிக்கலான காற்றுப் போன்ற வளிமங்களுக்கு ஒலி உட்கவர்பு எண் மதிப்பு பழைய முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பினை விட அதிகமாக இருக்கும். நீர்மங்களுக்கு ஆய்வு மதிப்பு. பாதரசம் மற்றும் நீர்ம ஆர்கான், ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகிய இவற் றிற்கு உட்கவர்பு எண் பழைய முறையில் கணக்கிடப் பட்ட மதிப்புகளுக்குச் சரியாக அமைந்திருக்கிறது. ஆனால் சாதாரண நீர் மற்றும் நீரக உப்புக் கரைசல் களுக்கு உட்கவர்பு எண் பழைய மதிப்பைவிட அதிக மாக இருக்கும். இந்த அதிக உட்கவர்பிற்கான விளக் கம் மூலக்கூறு மற்றும் இளைப்பாறல் (relaxation) முறைகளில் காணலாம். வளிமங்களில் மூலக்கூறுகளின் இளைப்பாறல். வளிம ஊடகங்களில் ஒலி அலைமுறையில் சென்றா லும் வளிமத்தில் உள்ள மூலக்கூறுகளில் மோதல்கள்