630 ஒலி ஒளியியல்
630 ஒலி ஒளியியல் ஒலி ஒளியியல் னால் ஊடகப் ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும் இடைப்படும்போது நிகழும் விளைவுகளை ஆய்வு செய்யும் புலம் ஒலி ஒளியியல் எனப்படுகிறது. இத்தகைய விளைவுகள், பொதுவாக. இவ்விரு ஆற்றல்களும் பரவுவதற்கு உதவும் ஊடகத்திலேயே நிகழும். ஒலி அலையி பொருளில் உண்டாகும் மாற்றத் தால் அதன் ஒளி விலகு எண்ணில் ஏற்படும் நிகழ்வே ஒலி ஒளியியல் விளைவுகளுக்கான காரணமாகும். பொருளின் மேலுள்ள அழுத்தம் மாறுபடும் போது, அதன் அடர்த்தியும் அதன் ஒளிவிலகு எண்ணும் மாற்றமடைகின்றன. 1935க்கு முன்பே பெரும்பாலான ஒலி ஒளியியல் விளைவுகளைக் குறித்து அறியப்பட்டிருந்தாலும் இவற்றின் செய்முறைப் பயன், ஒலி ஒளியியல் லேசர் களுடன் இணைந்த பிறகே நடைமுறைக்கு வந்தது. ஒலி ஒளியியல் விளைவின் அளவு பொதுவாக, ஓர் ஊடகத்தின் ஒளிவிலகு எண்ணில் ஏற்படும் சிறு மாற்றம், அந்த ஊடகத்தின் அடர்த்தியில் ஏற்படும் சிறு மாற்ற விகிதத்தில் உள்ளது. ஒளிமீள்திறன் குணகம் (photo elastic coefficient) என்பது ஓர் ஊடகத்தின் தொடக்கநிலை இறுக்கம் அல்லது அழுத்தத்திற்கும். இதன் விளைவாக ஒளிவிலகல் எண்ணில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கிறது. குறைந்த ஆற்றலுள்ள ஓர் ஒலியலையின் ஊடே ஓர் ஒளிக்கற்றை செல்லும் போது, ஒளிக்கற்றையும் ஒலியலையும் ஒன்றுக் கொன்று விளைவு ஏற்படுத்தும் திறன், அந்தஒலியின் திறனுடன் நேர்விகிதத்தில் இருக்கும். இத்திறன், அப்பொருளில் ஒலி பரவிச் செல்லும் வேகத்தையும் சார்ந்துள்ளது. ஒலி ஒளியியற் பொருள்களின் செயல் திறன், இப்பொருள்களின் ஒளிவிலகல் எண்ணையும் இவற்றில் ஒலி பரவிச் செல்லும் வேகத்தையுமே பெருமளவில் சார்ந்துள்ளது. குறைந்த ஒவி வேகத்தைக் கொண்டுள்ள நீர்மங்கள் நல்ல ஒலி ஒளி யியற்பொருள்களாகச் செயல்படுகின்றன எனினும், அதிர்வெண் அதிகரிக்கும்போது ஒலியின் ஆற்றல் குன்றுவதால் 50 மெகாஹெர்ட்ஸ் வரை மட்டுமே நீர்மங்கள் பயனடைகின்றன. அதிக அதிர்வெண் கொண்ட ஒலி பயன்படுத்தும்போது திண்பொருள்கள் குறிப்பாக, அதிக அளவு ஒலிவிலகல் எண்கள் கொண்டவை பயன்படுத்தப்படுகின்றன. படிகப் பொருள்களான நீலக் கல், வித்தியம் டான்ட்டலேட் முதலியன அறை வெப்பநிலைகளில், நுண்ணலை அதிர்வெண்வரை கூடப் பயன்படுத்தப்படுகின்றன. விளைவின் வகைகள். ஓரளவு இணையாகவும், ஒரே அலைநீளமாகவும் உள்ள ஓர் ஒளிக்கற்றையும், ஓர் ஒலி அலையும், ஒலி - ஒளியியற் பொருளில், ஒன்றையொன்று, 90º இல் மோதுவதாகக் கொள்ளலாம். இந்நிகழ்வில் ஒளிக்கற்றையின் விட்டம் ஒலியலையின் அலைநீளத்துடன் ஒப்பிடும்போது குறைவாக இருத்தல் வேண்டும். இத்தகைய சூழ் நிலைகளில் அழுத்தமுள்ள ஒலியலையின் முகடுகளும் பள்ளங்களும் ஒளிக்கற்றையைக் கடந்து செல்லும் போது இந்த ஒளிக்கற்றை, தான் செல்லும் திசை யிலிருந்து மாறி மாறி விலகியும் நெருங்கியும் செல்லுமாறு செய்யப்படுகிறது. ஒலியலை, இச் சமயத்தில் தன் ஊடே செல்லும் ஒளிக்கற்றைக்கு. ஒரு முப்பட்டைக் கண்ணாடி ஏற்படுத்தும் விளை வினை உண்டாக்குகிறது. இந்த விளைவு, லேசர் களுக்குப் பயன்படும் ஒளித்திருப்பிகள் மற்றும் கட்டுப் பாட்டுக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. 500 கிலோ ஹெர்ட்ஸ்க்குக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளே இவ்விளைவை ஏற்படுத்து கின்றன. அதிர்வெண் அதிகமாகி, அலைநீளம் ஒளிக் கற்றையின் விட்டத்துக்குச் சமமாகும்போது, ஒலி யலையால் ஏற்படும் சலனங்களில் ஊடகம் குவி குழி வில்லைகள் போன்று மாறி மாறிச் செயல்படுகின்றது. இவ்விளைவும் சில லேசர் அமைப்புகளைக் கட்டுப் படுத்தப் பயன்படுத்தப்படும். ஒலியின் அலைநீளம், ஒளிக்கற்றையின் விட்டத் மிகவும் குறைவாக தைவிட இருக்கும்போது ஊடகத்தின் நீளத்தில் விலகல் எண் கூடிக் குறைந்து ஒரு கீற்றணிபோல் செயல்படுகிறது. இதனால் ஒளிக் கற்றை ஒளியிலான கீற்றணியால் வளைக்கப்பட்டு தொடக்கத் திசையிலிருந்து ஒரு கோணத்தில் இடம் பெயர்ந்து புதிய திசைகளில் பரவும் ஒளிக்கற்றை களாக ஆக்கப்படுகிறது. நீண்ட, குறுகிய பிளவுகளின் வரிசையைக் கொண்ட கீற்றணியில் வளைக்கப் பட்ட கோண ஒளிக்கற்றையின் டமாற்றம், ஒளியின் அலைநீளத்தைப் பிளவுகளின் இடைவெளி யால் வகுத்தால் வரும் ஈவுடன் விகிதத்தில் உள் ளதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். வளைக்கப்பட்ட ஒலியினால் ஒளிக்கற்றைகளில் கோணத் திருப்பம், ஒளி அலை நீளத்தை ஒலி அலை நீளத்தால் வகுத்தால் கிடைக்கும் ஈவின் விகிதத்தில் உள்ளது. இதில் கீற்றணி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால். இது வளைக்கப்பட்ட ஒளிக்கற்றைகளின் ஒளி அதிர்வெண்ணில் டாப்ளர் நகர்வை ஏற்படுத்துகின்றது. இந்த நகர்வு பெரும் பாலும் ஒலி மிகச் அதிர்வெண்ணுக்கு உள்ளது. வளைக்கப்பட்ட ஒளிக்கற்றைகளின் ஆற்றல், பொதுவாக ஒலியின் ஆற்றல் விகிதத்தில் உள்ளது. எனினும். சமமாக பயன்கள்.ஓர் ஒளிக்கற்றையின் (குறிப்பாக, ஒரு லேசர் கற்றை) வீச்சு, செல்லும் திசை அதிர்வெண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஒலியின் திறன், பல்வேறு பயன்தரு கருவிகளை உருவாக்கியுள்ளது. நன்கு வரையறுக்கப் பட்ட லேசரின் அதிர்வெண் திசை, ஒலி ஒளிக் கருவிகளில், முழு அளவில் நன்மை