632 ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப்படவியல்
632 ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப்படவியல் மனித உடலின் பல உறுப்புக்கள் எக்ஸ் கதிர் களைக் கடத்தும் முறையிலிருந்து வேறுபட்ட ஒரு முறையில், உயர் அதிர்வெண் ஒலிக்கற்றைகளைக் கடத்துகின்றன. எனவே உடலின் உட்பகுதிகளைப் படமெடுக்க எக்ஸ் கதிர்களுக்குப் பதிலாக ஒலிக்கதிர் களைப் பயன்படுத்தும் நோக்கத்தில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்ம மேற்பரப்பு முப்பரி மாணப்படவியலில் மிகு விரைவு முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. இவற்றால் எடுக்கப்படும் முப்பரிமாணப் படங்கள் வெவ்வேறு திசு வகைகளைப் பிரித்துக் காட்டுகின்றன. இரத்தக் குழாய்களை எக்ஸ் கதிர்ப் படமெடுக்கும்போது அவற்றுக்குள் எக்ஸ் கதிர்களைத் தடுக்கும் ஏதாவது ஒரு வண்ணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு வண்ணம் புகுத்த வேண் டிய தேவையில்லாமலேயே ஒலிக்குறுக்கீட்டு விளைவு முப்பரிமாணப் படங்கள் ரத்தக் குழாய்களைத் தெளி வாகக் காட்டுகின்றன. இவற்றால் சாதாரணக் கட்டி களையும் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும். குறிப் பாகப் பெண்களின் மார்பகங்களில் தோன்றும் சிறிய கட்டிகளையும் சதை வளர்ச்சியையும் கண்டுபிடிக்க இக்கருவிகள் உதவுகின்றன. கூட்டுத்துளை முப்பரிமாணப்படவியல் (synthetic aperture holography): இந்த உத்தி முதலில் ராடாரில் பயன்படுத்தப்பட்டது. இதில் ஒரு கதிர் வீசி (antenna) மிகவும் நிலையான அதிர்வெண்ணைக் கொண்ட ஓரியல்பான குறியீட்டுத் துடிப்புகளை வரிசையாக வெளியிடுகிறது. அவை உயர்ந்த ஓரியல் புத்தன்மை கொண்டுள்ளமையால் அவை ஏதாவது ஒரு பொருளின் மேல் பட்டுத் திரும்பி வரும்போது அவை பயணம் செய்த தொலைவுக்குச் சம நீளமுள்ள ஒரு கதிர்வீச்சியிலிருந்து வெளிப்பட்டவை போல நடந்து கொள்கின்றன. இவ்வாறு நீளம் கூட்டப்பட்ட கிடைக்கும் துளையிலிருந்து பதிவுகள் மிகவும் நுண்ணிய தகவல்கள் அடங்கியவையாக இருக்கும். த்தகைய உருத்தோற்றமாக்கும் உத்தி ராடார் தாழில் நுட்ப முறைகளுக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. இம்முறை ஒலி முப்பரிமாணவியலில் பயன்படக்கூடிய வாய்ப்புகள் பற்றி விரிவாக ஆராயப் பட்டுள்ளது. ஒலி தொலைவு மூலம் காணும் சோனார் (SONAR), நிலஅதிர்வு ஆய்வுகள்,மருத்துவ ஒலியியல் உத்திகள் ஆகியவற்றில் அவை பெருமளவு பயன்படும். அவற்றை மருத்துவ அமைப்புகளில் பயன்படுத்தும்போது ஒலியியல் ஆற்றல் மாற்றிகளுக்கு அண்மையிலுள்ள உடலுறுப்புகளின் விரிவான உருத் தோற்றங்கள் கிடைக்கின்றன. அடுத்தடுத்த அடுக்கு களின் உருத்தோற்றங்களை ஒரே முப்பரிமாணப் படத்தில் பதிவு செய்வதன் மூலம் ஆய்வு செய்யப் படும் உடலின் உள்ளுறுப்புகளின் முப்பரிமாணப் பதிவுகளைப் பெறமுடியும். முப்பரிமாணப்படச் சோனார் (holographic SONAR). நீருக்கடியில் மூழ்கியுள்ள பொருள்களின் இருப்பிடத் தையும், தொலைவையும் கண்டுபிடிக்கும் சோனார் கருவி முறைகள் ஒலிமுப்பரிமாணப் படவியலின் மூலம் பேருதவி பெற்றுள்ளன. இத்தகைய கருவிகள் கூட்டுத்துளை உத்தியையும் பயன்படுத்துகின்றன. அண்மையிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது இக்கருவிகளின் தக்க நன்மையாகும். ஒலிவாங்கி வரிசை குறிப்பிடத் படம் 2. ஒலி முப்பரிமாணப் படங்கள் மூலம் கட லடித் தரையை நோட்டமிடுதல் புவியியற்பியல் கனிவளத் தேட்டையிலும் ஒலி அலைகள் பயன்படுகின்றன. புவிக்குள் செலுத்தப் பட்டு அடியிலுள்ள பாறைக் கட்டமைப்புகளில் பட்டு மீண்டு வரும் எதிரொலிகள் பகுப்பாய்வு செய்யப் படுகின்றன. அவற்றின் தன்மைகளிலிருந்து தரைக் கடியில் எண்ணெய் அல்லது எரிவளிமம் இருப்பதற் குரிய வாய்ப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இங் கும் ஒலியியல் முப்பரிமாணப் படவியல் உத்திகள் உதவுகின்றன. தேவையற்ற தகவல்கள் பதிவா காமல் தடுக்கும் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடலடி எண்ணெய்ப் படிவங்களைக் கண்டுபிடிக்கும் முறைகளில் நூறு அலைநீளங்களுக்குச் அல்லது அதற்கு மேற்பட்ட நீளமுள்ள ஒரு கம்பி வடம் (cable) ஒரு கப்பலுக்குப் பின்னர் இழுத்து வரப்படுகிறது. கப்பலிலுள்ள ஓர் உயர் திறன் ஒளி பரப்பி குறைந்த அதிர் வெண்ணுள்ள ஓரியல்பு ஒலி ஆற்றலை வெளியிடுகிறது. கடலடித் தரையிலிருந் தும், அதற்கும் அடியிலுள்ள புவியியல் படலங்களி லிருந்தும் எதிரொலிக்கப்படும் அல்லது சிதறப்படும் ஒலிக்குறியீடுகள் கம்பி வடத்தில் பொருத்தப் பட்டுள்ள ஒலி வாங்கிகளில் வாங்கப்படுகின்றன. அவற்றிலிருந்து உருவாக்கப்படும் ஒலி முப்பரிமாணப் சமமான