பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 ஒலி நுட்பவியல்‌

634 ஒலி நுட்பவியல் திசைவேகம் = 4756 +13.8t-0.121 அடி நொடி நீர்முழ்கிக் கப்பல்களைக் கண்டறிய ரேடியோ-ஒலி மித தவை என்ற ஓர் அமைப்பைத் தற்போது பயன் படுத்துகின்றனர். வானவூர்தியில் பறக்கும் வானவூர்தி ஒட்டி ஏறத்தாழ 5.4 கி.கி. நிறையுள்ள ஒரு மிதனை யை நீரின் மேல் மிதக்குமாறு போடுவார். இம் மிதவையில் ஓர் உயர் அதிர்வெண் நீரொலிப்பான் இருக்கும். இது நீருக்கடியிலிருந்து (நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து) பெறும் ஒலிக்குறிப்புகளை வான வூர்திக்கு அனுப்பும். இத்தகைய பல மிதவைகளைப் பல இடங்களில் மிதக்கவிட்டு அவற்றிலிருந்து வரும் குறிப்புகளின் செறிவைக் கொண்டு எதிரியின் நீர் மூழ்கிக் கப்பல் இருக்கும் இடம் அறியப்படும். இரு எந்திரக் காதுகளைக் கொண்ட ஒரு புதிய கருவிய மைப்பு நீரிலிருந்து வரும் ஒலியை அறியப் பயன்படு கிறது. இதில் இரு காதுகளையும் வந்தடையும் ஒலிக் குறியீடுகளின் நேர வேறுபாட்டையும் செறிவையும் பொறுத்துக் கருவியையே - மனிதன் திரும்புதல் போல ஒலி மூலத்தை நோக்கித் திருப்பும் அமைப்பு உள்ளது. ய கடலின் ஆழம் அல்லது கடல் மட்டத்திலிருந்து ஒலியைத் திருப்பி அனுப்பும் பொருண்மையுள்ள தடுப்பின் ஆழத்தை அறிய ஒலியலை ஒன்றைக் கீழ் நோக்கி அனுப்பித் திரும்பவரும் ஒலியைக்கொண்டு அளக்கலாம். ஒரு துடிப்பு அலை அல்லது ஒலியலையை மிகுதியான அலை நீளமுள்ளதாக அமைத்து நீருக் கடியில் செலுத்தும்போது அவ்வலை அங்குள்ள பொருளின் மீது பட்டு மீளும். இவ்வலையின் செறிவு மிகக் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு கப்பலுக்கு அருகில் உள்ள பனிக்கட்டி மலைகளையோ கப்பல் களையோ அறிய முடியாமல் போகலாம். இக்குறை பாட்டை நீக்க மிக உயர் அதிர்வெண்ணும், குறைந்த அலைநீளமும் உடைய செவியுணரா ஒலியலைகளைப் பயன்படுத்தலாம். இதற்குச் செவியுணரா ஒலியலை களைச் கொடுக்கும் அழுத்தமின் குவார்ட்ஸ் ஒத்ததிர்விகளைப் பயன்படுத்த வேண்டும். எதிரொலி அமைப்புகளிலிருந்து தொலைவு கடல் படுகையின் மட்டும் கணக்கிடப்படுவதில்லை. தன்மை குறித்த விவரங்களும் மீண்டு வரும் ஒலி அலையில் அடங்கியிருக்கும். மீளும் அலை மிகத் தெளிவாக இருப்பின் கடினமான படுகையிருப்பதாகக் கொள்ளலாம். அது தெளிவற்றதாக இருப்பின் சென்ற அலையின் ஒரு பகுதி மென்மையான அடிப்பகுதியில் ஊடுருவிச் சென்று பின் மீள அனுப்பப்படுகிறது. எனக் கருதலாம். ஒலி நுட்பவியல் வ. மணிவண்ணன் இது ஒலி பற்றிய தொழில் நுட்பம் அல்லது மீட்சியி யல் அலை இயக்கத்திறனை அளப்பதற்கும், கட்டுப் படுத்துவதற்கும், செயல்முறைக்கும் தெர்டர்பான தகவல்களைக் கூறுகிறது. இது ஒலி அறிவியலின் செயல் முறைநுட்பம் குறித்து விளக்கும் ஒரு பகுதி யாகும். இது ஒலியைக் கேட்கும் விதம் பற்றி ஆயும் ஒலியியல் பிரிவினின்று வேறுபட்டதாகும். மீ ஒலியி யால் (uhrasonics) என்பது ஏறத்தாழ 20,000 ஹெர்ட்ஸ் அதிர்வுக்கும் மிகுதியான அதிர்வு காண்ட ஒலியைக் குறிக்க வழங்கும் சொல்லாகும். காண்க. மீயொலி. அக ஒலியியல் (infra sonics) என்பது 15 ஹெர்ட் ஸிக்குக் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட ஒலியைக் குறிக்க வழங்கும் சொல்லாகும். இவ்வொலி கள் ஒலியினும் தாழ்ந்த (susonic sounds) அதிர்வுகள் கொண்டவை எனவும் குறிக்கப்படும். கடலியல் (oceanography) புவிநடுக்கவியல் (seismology) ஆகியன பற்றிய சிக்கலான புதிர்களும், வன்மை கொண்ட பொருள்களின் இயங்கு விசை போன்ற விளைவுகளும், அகாலி அலை அதிர்வுகளாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுவதால் செம்மையாக விளக்கப்படுகின்றன. காண்க அக ஒலி, ஒலி. ஒலிப்பதிவு சு.மகாதேவன் தாமஸ் முதன் முதலில் ஒலியைப் பதிவு செய்தவர் ஆல்வா எடிசன் என்னும் அமெரிக்க அறிவியல் அறிஞ ராவார். அவர் பயன்படுத்திய ஒலியைப் பதிவு செய் யப் பயன்படும் கருவி ஃபோனோகிராப் எனப்படும். இக்கருவியில் ஒலி அலைகள் ஒரு புனலின் வழியாகச் சென்று மைக்காவினால் செய்யப்பட்ட ஒரு மெல்லிய டை த்திரையை அசைவுறச் செய்கிறது. ஒரு கூரிய முனை உள்ள டங்ஸ்டன் ஊசி, இடைத்திரையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.. ஒரு சுழலும் தட்டின் மேல் வைக்கப்பட்டுள்ள மெழுகுத்தட்டின் மேல் இந்த ஊசியின் கூரிய முனை வைக்கப்பட் டுள்ளது. ய ஒலி அலைகள் இடைத்திரையின்மீது மோதும் போது அது அதிர்வடைகின்றது. இதனால் கூரிய ஊசி மெழுகுத் தட்டின் மேல், மேலும் கீழுமாக அதிர்வுப் பள்ளங்களை (groove) உண்டாக்குகிறது. இந்தப் பள்ளங்களின் அகலம் வேறுபட்டாலும் ஆழம் ஒரே சீராக இருக்கும். இது வட்டத்தட்டின் விளிம்பின் ஓரத்திலிருந்து மையம் வரை செல்கின்றது. இந்த மெழுகுத் தட்டின் மேல் கிராஃபைட் தூள் தூவப்பட்டு மின்கடத்தியாக்கப்படுகிறது. இதன் மீது மின்னாற் பகுப்பு முறைப்படி தாமிர முலாம் பூசப்படுகிறது. பள்ளமாக உள்ள பாதைகளில் படிந்த மேடான பாதைகள் அதிர்வுப் பதிவுகளை