பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ 42

42 எக்ஸ் கதிர் டங்ஸ்டன் போன்ற கெட்டியான உலோகத்தினால் செய்யப்பட்ட இலக்கு உள்ளது. இலக்கின் முகம் 45° சாய்வாக வெட்டப்பட்டு, எதிர்முனைக் குழிவின் வளைவு மையத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பக்கக் குழாயில் நேர்முனை பொருத்தப் பட்டுள்ளது (படம் - 1). மின் முனைகளுக்கிடை டையே 40,000 வோல்ட் அளவுடைய மின்னழுத்தம் செலுத் தப்படும்போது மின்னிறக்கம் காரணமாக எதிர் முனைக்கதிர்கள் தோன்றி முன்னோக்கி விரைகின் றன. எதிர் முனைக்கதிர்கள் எனப்படுபவை எ எலெக்ட் ரான் சுற்றையேயாகும். முடுக்கற்ற எலெக்ட்ரான் கள் மிக அதிக இயக்க ஆற்றலைச் சுமந்து செல் வதால், இலக்கின் அணுவினுள் புகுந்து செல்கின்றன. இதனால் ஏற்படும் ஆற்றல் மாற்றங்கள் எக்ஸ் கதிர் களைத் தோற்றுவிக்கின்றன. குழாய் செயற்படத் தொடங்கியவுடன் அதிலுள்ள வளிமம் சிறிது சிறிதாக அயனியாக்கம் செய்யப்படுவதால், வளிம அழுத்தம் குறைகிறது. இந்நிலையில் மின்னிறக்கம் நின்றுவிட, எக்ஸ் கதிர் களின் உருவாக்கமும் நின்று விடுகின்றது. குறைந்த அழுத்த நிலையில் மீண்டும் மின்னிறக்கம் தொடங்க மின்னழுத்தத்தை 40,000 வோல்ட்டுக்கு மேல் அதிகரிக்க வேண்டும் அல்லது வளிம அழுத்தத்தை மீண்டும் 10 மி. மீ. அளவுக்கு அதிகரிக்க வேண்டும். மின்னழுத்தத்தை அதிகரித்தால் எலெக்ட்ரான் களின் வேகம் மிக மிக அதிகமாகிவிட, வெளிவரும் எக்ஸ் கதிர்கள் மிகமிக அதிக ஊடு திறனுடைய கதிர்கள் ஆகிவிடுகின்றன. கடினக் வளிம அழுத்தத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர, துணைக் குழாய் ஒன்றில் வைக்கப் பட்டிருக்கும் பிளாட்டினக் கல்நார் வழியாக மின்னி றக்கம் செய்யப்படுகிறது. அப்போது பிளாட்டினக் கல்நார், உட்கவர்ந்துள்ள வளிமங்களை வெளியிட அழுத்தம் பழைய நிலைக்கு வருகிறது. எக்ஸ் கதிர்க் குழாய் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது. இம்முறையில் பெறுகின்ற எக்ஸ் கதிர்களின் அளவும், பண்பும் மாறிக் கொண்டே இருக்கின்றன. எனவே, இக்குழாய் வரலாற்றுச் சிறப்பு மட்டுமே உடையது. கூலிட்ஜ் குழாய். 1915 ஆம் ஆண்டில் கூலிட்ஜ் என்பார் இக்கருவியை உருவாக்கினார். இதைக் கொண்டு தேவையான அளவும் பண்பும் கொண்ட எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்க இயலும். இக்குழாயில், G என்னும் மையக் குமிழும், அதன் பக்கத்திற்கு ஒன்றாக இரு ஓரச்சுக் குழாய் களும் இணைக்கப்பட்டிருக்கின்றன (படம்-2). வலப்பக்கக் குழாயில் மின்னோட்டத்தினால் சூடு படுத்தக்கூடிய தோரிய டங்ஸ்டன் இழை ஒன்று (F) குழிந்த கிண்ணத்திற்குள் (S) வைக்கப்பட்டிருக் கிறது. வெப்ப அயனி வெளியீடு காரணமாக இழை எலெக்ட்ரான்களை வெளியிடுகிறது. எதிர் மின் அழுத்தங்கொண்ட கிண்ணம், இந்த எலெக்ட்ரான் களைத் தன் வளைவு மையத்தில் குவிக்கும். இடப் A F படம் 2. எக்ஸ்கதீர் பக்கக் குழாயில் தடித்த ஒரு செப்புத் தண்டும் அதன் முனையில் கெட்டியான உலோக இலக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இலக்கின் முகம் 45° சாய் வாக வெட்டப்பட்டுக் குழிவுக் கிண்ணத்தின் வளைவு மையத்தில் அமையுமாறு வைக்கப்பட்டிருக்கிறது. செப்புத் தண்டின் அடி முனையில் பல உலோகத் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை வால் செதில்கள் எனப்படுகின் றன. கருவி இயங்கும்போது உண்டாகும் மிகுதியான வெப்பத்தை வீசித் தணிக்க இவை உதவுகின்றன. குமிழ் முற்றி லும் வளிம நீக்கம் செய்யப்பட்டிருக்கும். கருநிற நேர் மின்முனை, எதிர்மின் முனை ஆகியவற்றுக் கிடையே 50.000 2,00,000 வோல்ட் வரை மின் அழுத்தம் தரப்படுகிறது. மின்னிழை வழியாகக் குறைந்த அழுத்த மின்கலங்களின் துணையால் தேவையான மின்னோட்டம் செலுத்த, மின் னோட்டத்தின் அளவுக்கு ஏற்ப அவ்விழை வெப்ப எலெக்ட்ரான்களை வெளியிடுகிறது. வெளியிடப் பட்ட எலெக்ட்ரான்கள் மின்முனைகளுக்கு இடையே உள்ள மின் அழுத்த வேறுபாட்டிற்கு ஏற்ப முடுக்க முறுகின்றன. முடுக்கத்திற்கேற்ப அவற்றின் வேக மும், வேகத்திற்கு ஏற்ப இயக்க ஆற்றலும் அமை கின்றன. இவ்வாறு ஆற்றல் பெற்ற எலெக்ட்ரான்கள்