பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிப்பதிவுத்‌ தடம்‌ 637

ஒலிப்பதிவுத் தடம் 637 ஒலிப்பதிவுத் தடம் (sound track) எனப்படும். ஒலி வாங்கிகளிலிருந்து வரும் மின் குறியீடுகள் ஒரு திறன் பெருக்கியில் (power amplifier) செலுத்தப்படுகின்றன. திறன் பெருக்கி ஓர் ஒளிப்பண்பேற்றியை (light modulator) இயக்குகிறது. அது திறன் பெருக்கியி லிருந்து வரும் மின்குறியீடுகளுக்கு ஏற்ற வகையில் ஒளிச்செறிவை ஏற்றி இறக்கி ஒளிப்படப்படலத்தில் பதிவு செய்கிறது. உரப்புக்காட்டி, (volume indicator), இட்டு நிரப்பும் சமனி (complementary equalizer). மிகைக்கட்டுப்பாட்டுத் (gain control)திறன் பெருக்கி, ஒலிபெருக்கி அல்லது காதொலியன் ஆகியவை அடங் கிய ஒரு கண்காணி அமைப்பு ஒளிப்பதிவுச் செயல் பாட்டை நடத்துகிறது. ஒலிப்பதிவில் மாறுபரப்பு முறை (variable area) மாறு அடர்த்தி முறை என இரு முறைகள் உள்ளன. மாறுபரப்பு முறை ஒலிப்பதிவு அமைப்பில் கடத்தப் பட்ட ஒலியின் வீச்சு, நேர் படியில் ஒளிபடாத பரப் பளவின் ஒரு சார்பெண்ணாக இருக்கும். இவ்வகை யான ஒலிப்பதிவுத் தடம் ஓர் ஆடி கால்வனா மீட்டரின் (mirror galvanometer) உதவியால் உண்டாக்கப் படுகிறது. மாறுபரப்பு ஒலிப்பதிவு அமைப்பு, படம்-1 இல் காட்டப்பட்டுள்ளது. ஒரு முக்கோண வடிவத் துளை விளக்கு வில்லை அமைப்பால் சீராக ஒளி யூட்டப்படுகிறது. அதன் வடிவத்தைக் கால்வனா மீட்டரில் உள்ள ஆடி எதிரொலித்து ஒரு மெல்லிய செவ்வகத் துளையின் மேல் குவிக்கிறது. செவ்வகத் துளையின் வடிவம் அதற்கு அடுத்துள்ள ஒளிப்படப் படலத்தின் மேல் குவிக்கப்படுகிறது. கால்வனா மீட்டரின் ஆடி, படத்தின் தளத்திற்கு இணையான ஓர் அச்சைச் சுற்றிச் சுற்றுகிறது. செவ்வகப் பிளவின் மேல் விழும். முக்கோணக் கற்றை மேலும் கீழுமாக நகர்கிறது. இதனால் செவ்வகப் பிளவிலிருந்து வெளிப்பட்டு ஒளிப்படப் படலத்தின் மேல் விழும் செவ்வகக் கொண்டே கற்றையின் நீளம் மாறிக் யிருக்கும். இதன் விளைவாக எதிர்ப்படியில் (negative) ஒளிபட்ட பகுதியின் அகலம் கால்வனா மீட்டரின் சுழல் அதிர்வுகளுக்கு ஒத்து அமையும். நேர் படியில் ஒளி படாத பகுதியின் அகலம் ஒலிக் குறியீட்டுக்கு நேரிணை அளவில் இருக்கும். மாறு அடர்த்தி முறையில் கடத்தப்பட்ட ஒளி யின் வீச்சு நேர்படியில் ஒளிபட்ட அளவுக்குத் தலை கீழ்ச் சார்பெண்ணாக அமைந்திருக்கும். இவ்வகை ஒலித்தடம் ஓர் ஒளிக்குழாய் (light valve) மூலம் உண்டாக்கப்படுகிறது. அது நகரும் ஒளிப்படப் பட லத்தின் மேல் விழும் ஒளியின் பொலிவை, ஒலிச் சைகைக்கு ஏற்ற வகையில் மாற்றுகிறது. இத்த கைய ஓர் ஒலிப்பதிவு அமைப்பு,படம் 2-இல் காட்டப் பட்டுள்ளது. ஒளிக்குழாயில் இரு நாடாக்கள் உள்ளன. அவை ஒரு விளக்கு வில்லை அமைப்பால் ஒளியூட்டப் படுகின்றன. இரு நாடாக்களுக்கும் இடையிலுள்ள பிளவின் உருவம் ஒளிப்படப் படலத்தின் மேல் கால்வனா மீட்டர் செவ்வகத்துளை ஆடி முக்கோணத் துளை விளக்கு எதிர்ப்படி ஒலித்தடம் நேர்படி படம் 1 குவிக்கப்படுகிறது. நாடாக்களுக்கு படச்சுருள் செவ்வகத் துளையின் மேல் முக்கோணத் துளையின் வடிவம் விழுதல் இடையிலுள்ள இடைவெளி மிகுந்தால் இவ்வுருத்தோற்றத்தின் பொலிவு மிகுதியாகும். இடைவெளி குறைந்தால் பொலிவும் குறையும். அதற்கு ஏற்றவகையில் ஒளிப் படப் படலத்தில் தோன்றும் கருமையும் மிகுதியாக அல்லது குறைவாக இருக்கும். அதை வைத்து எடுக்கப் படும் நேர்படியில் கருமையின் அளவு ஒளிக்குழாய்க்குச் செலுத்தப்பட்ட மின் குறியீட்டுக்குத் தலைகீழ்ச் சார்பெண்ணாக அமையும். பேசும் படங்களை எடுக்கும்போது படங்களும் ஒலிகளும் வெவ்வேறு நாடாக்களில் பதிவு செய்யப் படுகின்றன. எனவே ஒளிப்பதிவுக் கருவியையும் ஒலிப் பதிவுக் கருவியையும் நேர ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஒளிப்பதிவுக் கருவிக்கும், ஒலிப்பதிவுக் கருவிக்கும் இடையில் உள்ள ஒரு தொடர்பேற்படுத் தும் அமைப்பு இதைச் செய்கிறது. ஒளிப்படக் கருவி யிலும் ஒளிப்பதிவுக் கருவியிலுமுள்ள பல் சக்கரங்களில் பொருந்தும் வகையில் திரைப்படச்சுருளின் இருவிளிம் புகளிலும் பற்சக்கரத்துளைகளை அமைத்திருப்பதும்