ஒலிப்பியல் 639
ஒலிப்பியல் 639 படுத்த முடியும். சில குறியீடுகள் தேவைப்படாமலும் இருக்கலாம். புதிதாகச் சில குறியீடுகளைச் சேர்க்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். இக் குறியீடுகளில் ஒவ்வொன்றும் ஓர் ஒலியனைக் (phonemes) குறிப் பிடும். மொழியைப் பயன்படுத்துவோர் ஒரு குறியீடு ஒரு குறிப்பிட்ட ஒலியனைக் குறிப்பிடுவதாக இனம் கண்டு கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழிகளில் ஓர் ஒலியன் சற்றே மாறுபட்ட ஓசைகளுடன் உச்ச ரிக்கப்படலாம். ஒரே ஒலியன் வெவ்வேறு கூட்டுகளில் அமையும்போது அல்லது ஒரே மொழியை வேறு சிலர் பேசும்போது மாறக்கூடும். ஓர் ஓசை காணப்படும் சிறு வேற்றுமைகள் மாற்றொலிகள் அனைத்து நாட்டு (allophones) எனப்படுகின்றன. குறியீடுகளும் பல்வேறு மொழிகளில் ஒலிப்பியல் உள்ள ஏறத்தாழ அனைத்து உச்சரிப்புகளையுமே குறிப்பனவாக ஏற்றுக் கொண்டுள்ளனர், இக்குறி யீடுகளில் எழுதப்படும் பேச்சொலி ஒலிப்பியல் எழுத் துப் பெயர்ப்பு (phonetic transcription) எனப்படும். ஒலியனில் ஒலிப்பியல் ஆய்வில் இக்காலத்தில் புதிய இயற் பியல் கருவிகளான எதிர்மின்வாய்க் கதிர் அலைவு பயன்படுகின்றன. காட்டி போன்ற கருவிகளும் அவற்றால் ஒலிகளில் கலந்திருக்கும் அதிர் வெண் ஆக்கக் கூறுகளைப் பகுப்பாய்வு செய்து ஒலிகளை வகைப்படுத்தவும், அவற்றிலுள்ள நுண் ணிய வேறுபாடுகளைப் பிரித்துணரவும் முடிகிறது. மனிதன் பேசுகையில் பல ஒலிகள் தோன்றும். உண்டு. அனைத்து மொழிகளுக்கும் பேச்சொலிகள் அவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தான் மொழியாராய்ச்சி முழுமை பெறும். பெரும் பாலான மொழிகளில், எழுதும் முறை பேசும் முறையோடு ஒத்திருப்பதில்லை. மொழியின் ஒலியன் களை வகைப்படுத்தி அதன் அடிப்படையில் எழுதினால் ஒத்து வரும். அனைத்து மொழியிலும் இச்சிக்கல் உள்ளது. பேசுவதை ஒலிமுறை தவறாமல் எழுதிக்காட்டும் கலை ஒலியியல் ஆகும். அதற்குச் சில அடிப்படைகளை வகுத்துக் கொண்டு ஒலிகளின் பிறப்பை விளக்கலாம். ஒலியுறுப்புகளால் எழுப்பப் விடாமல் படும் அனைத்து ஒலிகளையும் ஒன்று விளக்குவதே ஒலியியலின் குறிக்கோள் ஆகும். பிற மொழிகளைக் கற்கும்போது அவற்றைச் செம்மையாக உச்சரிக்கக் சுற்றுக் கொள்ள வேண்டும். இது ஒலிக்கலையைக் கற்றுக் கொண்டால் எளி தாகும். அப்போது ஒலியுறுப்புகளின் வகை, அவற்றின் தொழில் ஆகியவற்றை அறிந்து பிற மொழி ஒலிகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை வகைப்படுத்தி எளிதில் உணர்ந்து கொள்ளவும், பிற மொழியில் காணப்படும் பல்வேறு ஒலிகளுக்கிடையிலுள்ள தொடர்பு தொழில் ஆகியவற்றை வகைப்படுத்தவும் முடியும். ஒரே மொழியில் அனைத்து ஒலிகளும் இரா. சிலவற்றில் சில ஒலிகளே இருக்கும். . சிலவற்றில் புதிய ஒலிகள் காணப்படலாம். ஆனால் ஒலியியல் அறிந்தோரால் அனைத்து ஒலிகளையும் இனம் காணவியலும். முறையில். ஆராயப் இயற்பியல் ஒலியியல் என்ற பேச்சொலியின் இயற்பியல் தன்மைகள் படுகின்றன. ஒலியுறுப்புகளின் அதிர்வுகளால் தோன்றும் ஒலி அலைகளை அறிவியல் கருவிகள் மூலம் ஆராயலாம். கேட்டொலியியல் (auditory phonetics) மனிதனின் கேள்திறனைக் கொண்டு மொழி ஆராயப்படும். வெவ்வேறு மனிதருக்குக் கேள்திறன் வேறுபடும். உச்சரிப்பொலியியலில் (articulatory phonetics) உதடு நா போன்ற ஒலி உறுப்புகளின் அசைவு அடிப்படையில் ஒலியின் தோற்றம் ஆராயப்படுகிறது. ஒலியுறுப்பும் ஒலியும். உதடுகளின் செயலால் எழும் ஒலிகள் இதழொலிகள் (labials) எனப்படும், கீழ் உதடும் மேற்பல்லும் பொருந்தி வெளியிடும் ஒலி பல்லிதழ் ஒலி (labiodental) ஆகும். இரு உதடுகளை வெளியே பிதுக்கி எழுப்பும் ஒலிகள் இதழ்ப்பிதுக் கொலிகள் (protruded labials) ஆகும். பற்களை நாவாலும் இதழாலும் தொட்டு எழுப்பும் ஒலிகள் பல் ஒலிகள் எனப்படும். நுனி நாக்கின் மூலம் எழும் ஒலிகள் நுன் நாவொலிகள் (apicals) என்றும் நுனி நாக்கும் பல்லும் இணைந்து உண்டாக்கும் ஒலிகள் நுனி நாப்பல் ஒலிகள் என்றும், நுனி நாவும், நுனியண்ணமும் சேர்ந்து எழுப்பும் ஒலிகள் நுனி நா நுனியண்ண ஒலிகள் (apico-alveolar) என்றும், நுனி நாக்கும் இடையண்ணமும் சேர்ந்து எழுப்புபவை நுனி நா டையண்ண ஒலிகள் (apico domal) அல்லது நாவளை ஒலிகள் (retroflex) என்றும் நுனி நாக்கை இரு பல் வரிசைகளுக்கிடையில் வைத்து எழுப்பும் ஒலிகள் பல்லிடை ஒலிகள் (apicointerdental or interdental) என்றும் குறிப்பிடப்படும். இடை நாவும் இடையண்ணமும் சேர்ந்து எழுப்பும் ஒலிகள் இடை நா இடையண்ண ஒலிகள் (lamino - palatals) அல்லது இடையண்ண ஒலிகள் (palatals) ஆகும். கடை கடை நாவும் கடையண்ணமும் சேர்ந்து எழுப்புபவை கடைநா கடையண்ண ஒலிகள் (velar) ஆகும். மூச்சுக் காற்றை மூக்கின் வழியே செலுத்தி எழுப்பும் ஒலிகள் மூக்கொலிகள் (nasals) என்றும், வாய், மூக்கு ஆகிய இருவழிகளிலும் காற்று வெளிப்படும் போது எழுபவை மூக்குச்சாயல் ஒலிகள் (nasalised sounds) என்றும் கூறப்படும். ஒலி நாண்கள் அகன்றிருக்கும்போது காற்று வெளிப்பட்டால் அவை அதிரா. அப்போது எழும் ஒலி ஒலிப்பிலா ஒலி (voice less) எனப்படும். ஒலி நாண்கள் நெருங்கியிருக்கும்போது காற்று வெளிப் பட்டால் அவை அதிர்ந்து எழும் ஒலி ஒலிப்புடை ஒலி (voiced sound) எனப்படும்.