பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 ஒலிப்பியல்‌

640 ஒலிப்பியல் ஒலியுறுப்புக்களில் நாக்கு, உதடுபோன்று அசைந்து ஒலியெழுப்புபவை ஒலிப்பான்கள் (articulators) எனப்படும். வாயின் மேற்பகுதி ஒலிப்பு முனை (point of articulation) என்றும் ஒலிப்பானும் ஒலிப்பு முனையும் தொடுகிற இடங்கள் ஒலிப்பிடங் கள் (position of articulation) என்றும் வழங்கப்படும். ஒலிப்பிடங்கள் வேறுபட்டால் ஒலிப்பு முறையும் (manner of articulation) வேறுபடும். ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பேச்சொலி களை உயிர் எனவும் மெய் எனவும் பிரிக்கலாம். நுரையீரலிலிருந்து வரும் காற்று,பிற ஒலியுறுப்புகளில் தடைப்படாமல் வெளிப்படும்போது தோன்றுபவை ஏதாவ உயிரொலிகள் ஆகும். ஒலியுறுப்புகள் அதிர்ந்தோ, காற்றை அடைத்தோ, வெளிவரும் காற்றை அதிரச் செய்தோ எழுப்பும் ஒலிகளை மெய்யொலிகள் என்பர். மூக்கில் காற்று நுழையாத வகையில் வாயில் தோர் இடத்தில் காற்றை அடைத்துத் திடீரென விடுவிக்கும்போது தோன்றும் ஒலிகள் அடைப்பொலி கள் அல்லது வெடிப்பொலிகள் (stops or plosives) எனப்படும். இவற்றில் ip.b/ போன்ற ஈரிதழ் அடைப் பான் /t,d போன்ற பல்லடைப்பான். t] போன்ற நுனி நா நுனியண்ண அடைப்பான், /td போன்ற நாவளை அடைப்பான், [cj/ போன்ற இடை நா டையண்ண அடைப்புரசுவான். /k.g/ போன்ற கடையண்ண அடைப்பான் ஆகிய வகைகள் உள்ளன. இவற்றில் நுனி நா நுனியண்ண ஒலியைத் தவிரப் ஏனைய ஐந்திலும் ஒலிப்புடைய அடைப்பானும் ஒலிப்பிலா அடைப்பானும் உள்ளன. மொழிக்கு முதலில் ஒலிப்புடை அடைப்பான்கள் பிற மொழிச் சொற்களில் வருகின்றன. [č}] ஒலி நிலையில் (phonetic level) இவ்வொலியன் களின் உச்சரிப்பில் வேறுபாடுகள் உள்ளன. என்னும் இரண்டையும் அடைப்புரசொலிகள் (affri- cates) எனலாம். அவை ஒரே இடத்தில் அடைப் பொலியையும் உரசொலியையும் அம்முறையே தொடர்ந்து இடையீடின்றி ஒரொலி போல உச்சரிக் கப்படுபவையாகும். முன்தொண்டையில் காற்றை அடைத்து வெளிப்படுத்தும்போது ஏற்படும் ஒலி முன்தொண்டை அடைப்பொலி எனப்படும். ஒலி நாண்களில் காற்றை அடைத்து வெளிப்படுத்தினால் தோன்றும் ஒலிநாண் அடைப்பொலி, எப்போதும் ஒலிப்பில ஒலியாகவே வரும். வாய் அடைப்புகளில் காற்றை நிரப்பி உறிஞ்சு வதன் மூலம் உண்டாகும் உறிஞ்சடைப்பொலிகள் (suction stops, implosives) தமிழைத் தவிரப் பிற மொழிகளில் உள்ளன. கடையண்ணத்தையும் அதற்கு முன்னுள்ள ஒரிடத்தையும் அடைத்துக் கொண்டு நடுவிலுள்ள காற்றை அழுத்தி அல்லது நெகிழ்த்தி முன் அடைப்பைத் தீடீரெனத் திறந்தால் பிறக்கும் ஒலி சொட்டை ஒலி (click) எனப்படும். அடைப்பொலிகளில் காற்றை விடுக்கும் முறை ஒலிப் யில் பல வகையுண்டு. கூரென விடுதலில் (sharp release) அடைப்பானை வேகமாகத் தீடீரென நீக்கிக் காற்று வெளியிடப்படும். மூச்சோடு விடுதலில் நுரையீரல் அழுத்தத்தைப் பெருக்கி, காற்றுத் தீடீரென வேக மாக வெளியேறும்படி ஒலிப்பான் திறக்கப்படுகிறது. அப்போது து எழும் அடைபொலிகள் மூச்சுடை அடைப் பொலிகள் (aspirated stops) எனப்படும். உரசோடு விடுதல் (affricated release) என்ற வகையில் பானை மெதுவாக நீக்கி அதே இடத்தில் சிறிய இடைவெளி மூலம் காற்றைச் செலுத்தி அக்காற்று அதிரச் செய்யப்படுகிறது. மூக்கோடு விடுதல் (nasal release) வகையில் வாயிலுள்ள அடைப்பைத் திறப் பதற்கு முன் உள்நாக்கைத் திறந்து காற்று மூக்கறை யின் உள்ளே தீடீரெனச் செலுத்தப்பட்டு வெளிப் படுத்தப்படுகிறது. உச்சரிப்பில் நேரடியாகப் பங்கு கொள்ளாத ஓர் உறுப்பு பிறஉறுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது தானும் ஈடுபடலாம். கடை யண்ணஒலியை உச்சரிக்கும்போது உதடுகள் பிதுக்கப் படலாம். இவ்வாறு எழும் ஒலிகள் உதட்டின் சாயல் பெற்ற ஒலிகள் (labialized sounds) எனப்படும். இதே போல இடையண்ணச் சாயல் பெற்றவை (palatalized) கடையண்ணச் சாயல் பெற்ற ஒலிகள் (velarize i) என்பனவும் உள்ளன. உரசொலிகள் (fricatives) என்பவை காற்று வரும் வழியைக் குறுக்கி ஒரு சிறு இடுக்கின் வழி யாகக் காற்றைச் செலுத்தி அக்காற்றை அதிரச் செய்யும் போது பிறக்கின்றன. அந்த இடுக்கு ஆழ மின்றி வெடிப்புப் போன்றிருக்குமாயின் அங்கு தோன்றும் ஒலி பிளவு உரசொலி (slit fricative) எனவும் அது குழிந்திருந்தால் குழிவு உரசொலி (groove fricative) எனவும் கூறப்படும். காற்றைப் பக்கவாட் டில் செலுத்தி அதிரச் செய்யும்போது அதை மருங்கு உரசொலி (lateral fricative) எனவும். தட்டையாக ஆழமாக அமைந்த இடுக்கின் வழியே எழும் உரசொலியைத் தட்டையுரசொலி (surfacc fricative) எனவும் கூறலாம். பேச்சுத்தமிழில் [Sz | என்னும் இரு குழிந்த உரசு வான்கள் தென்படும். அடைப்பொலிகளிலும் உர சொலிகளிலும் காற்றுத்தடைப்படுவதால் இவற்றைத் தடையொலிகள் (obstruents) எனவும் கூறுவர். மூக் கொலிகள் என்பவை உதட்டிலிருந்து உள்நாக்கு வரை வாயில் ஏதாவது ஓர் இடத்தில் அடைத்துக்கொண்டு மூக்கின் அறை வாயிலைத் திறந்து காற்றை அதன் வழியாக வெளியிடும் போது பிறக்கின்றன. அவை உரப்புடன் தொடர்ந்து ஒலிப்பவை (sonorous) ஆகும். மூக்கொலிகள் ஒலிப்புடனும் ஒலிப்பில்லாமலும் பிறக்கலாம். ஒரு மொழியில் அடைப்பான்களின் எண்ணிக்கைக்கு மேல் மூக்கன்கள் இருப்பதில்லை. மூக்கனே இல்லாத மொழிகளும் உள்ளன. தமிழில் (m,2,n,pan என்னும் ஆறு மூக்கன்கள் உள்ளன.