பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிப்பியல்‌ 643

பின்னுயிர்களை இதழ் விரித்து உச்சரிக்கும் போது i Ap எனவும் முறையே மேலிருந்து கீழாக எழுதலாம். எ.கா: en நாவின் நடுப்பகுதி மேல் நோக்கிச் செல்லும் போது எழும் உயிர் நடுவுயிர் எனப்படும். ஆகியவை. இவை நடு நா மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும்போது எழுபவை. iu என்ற இரு ஒலிகளும் எழுகையில் நாவின் அவ்வப்பகுதிகள் அண்ணத்தை அடுத்து உயரும். இவற்றை மேல் உயிர் (high vowe.s) எனவும் அடைப்புயிர் (close vowels) எனவும் கூறுவர். அண்ணத்திற்கும் நாவிற்கும் இடைவெளி மிகச் சிறி தாகலின் இவற்றில் 1 முன் இதழ் விரிமேல் உயிர் uபின் இதழ் குவி மேல் உயிர்; இதைப் போல a a என்னும் உயிர்களை உச்சரிக்கும்போது நா தாழ் கிறது. இவற்றைக் கீழ் உயிர் (low vowels) எனவும் திறப்புயிர் (open vowels) எனவும்கூறுவர். அண்ணத் திற்கும் நாவிற்கும் இடைப்பட்ட வெளி பெரி தாகலின் இடைப்பட்ட ஒலிகளை மேலிருந்து கீழே முறையே அரையடைப்புயிர் (half close vowels) எனவும் அரைத்திருப்புயிர்(half open vowels) எனவும் கூறுவர். இடைப்பட்டமுன் உயிர்களை மேலிருந்து கீழே முறையே e எனவும் பின்னுயிர்களை எனவும் குறியிட்டு எழுதுவர். இது அனைத்து நாட்டு ஒலிப்பியல் கழகத்தின் வகுப்பு முறையாகும். 03 தமிழில் நெட்டுயிர்கள் அவற்றின் குற்றுயிர்களை விட விறைப்பாக உச்சரிக்கப்படும். அவை விறைப் புயிர்கள் (tense) எனப்படும். குற்றுயிர்கள் நெகிழ் வுயிர் (Lax) எனப்படும். விறைப்புயிர்களை எனவும் நெகிழ்வுயிர்களை ப ப எனவும் எழுதுவர். e u e u நா.உதடு இவற்றால் எழும் எந்த உயிரொலி யையும் வாயொலியாகவும் மூக்கொலியாகவும் உச்ச ரிக்கலாம். தமிழில் மீ.ன்,ண் என்றமெல்லின எழுத்து களில் முடியும் சொற்களையெல்லாம் ஈற்றில் மூக்கு யிர்களாகவே (nasa) vowels) உச்சரிக்கின்றனர். அவற்றை ? என்றோ 6 என்றோ எழுதுவர். நாநுனி நுனியண்ணத்தை அடுத்தோ வளைந்தோ இருக்கும் வகையில் எழும் உயிர்கள் நாவளையுயிர் அல்லது நாமடியுயிர் (retroflex vowels) எனப்படும். இவற்றை ae எனக் கீழே புள்ளியிட்டு எழுதலாம். ஒலிப்புடையனவாகவே உயிர்கள் சாதாரணமாக உள்ளன. ஒலிகளை உக்சரிக்கும்போது சிலவற்றை உச்சரிக்கும் நேரம் குறுகியும் பிறவற்றை உச்சரிக்கும் நேரம் நீண்டும் இருக்கும். இந்நேரத்தை மாத்திரை (duration) என்ற அலகால் அளவிடுவர். இயல்பாகக் கண் இமைப்பு, விரல் சொடுக்கு ஆகியவை தமிழில் மாத்திரையின் அளவாகக் கொள்ளப்படும். ஒலியன்கள்: ஒரு மொழியின் ஒலிகளை அம் மொழியின் அடிப்படை ஒலியுறுப்புகளாக மாற்றி யமைக்கலாம். அவை ஒலியன்கள் (phonemes) எனப் அ.க. 6-41 அ கொண்ட ஒலிப்பியல் 643 படும். ஒவ்வோர் ஒலியனும் ஒன்று அல்லது பல மாற் றொலிகளைக் ஓர் ஒலிக்குழு ஆகும். மொழிப்பயிற்சிக்கு ஒலியியல், ஒலியனியல் ஆகிய துறைகளில் பயிற்சி பெறுவது இன்றியமையாதது. மாழிக்கு வரி வடிவு அமையும் போது ஒவ்வோர் ஒலியனுக்கும் தனித்தனி எழுத்துகள் அமைய வேண் டும். ஒலி வேறுபாடுகளை ஒலியன்களை விளக்கு மிடத்தே குறிப்பிட்டு ஒலியன்களுக்கு மட்டும் குறி யீடுகள் கொடுத்து எழுதுவது எளிது. ஒலியன்களைப் பகுத்துக் காண இயற்கை உணர்வுகளைப் பற்றாத அனைத்து மொழிகளுக்கும் பயன்படும் பொதுவான கொள்கைகள் வேண்டும். நான்கு வகைக் கொள்கை களின் அடிப்படையில் ஒலியன்களைப் பகுக்கலாம். வேறுபட்ட ஒலியால் பொருள் வேறுபடும் சொற் களான களம், தளம் இணை, திணை போன்றவை உள்ளன. இந்நிலையை வேறுபாட்டுக் கொள்கை (priciple of contrast) எனலாம். படி, பாடி என்ற சொற்களில் சொல் முதல் ஒலி வேறுபட்டால் பொருள் வேறுபடுகிறது. இத்தகைய இணையைக் குறை ஒலி இணை (minimal pair) எனலாம். துணை நிலைக் கொள்கை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒலிகள், ஒன்றி வரும் சூழ்நிலை யில் மற்றது வாராமல், அதன் காரணமாக அவை ஒரே ஒலியனின் மாற்றொலிகளாகும் போது அச்சூழ் நிலையைத் துணைநிலை வழக்கு என்பர். குளம், கூடு, குட்டை, பாக்கு என்பனவற்றில் வரும் சுகர ஒலியையும் கிளி, கிடங்கு, பாக்கி, தூக்கி என்பன வற்றில் வரும் ககர ஒலியையும் கண்டால் முதல் கணத்தில் வரும் ககரம் கடையண்ண அடைப்பொலி பாகவும் அடுத்த கணத்தில் வரும் ககரம் முன்கடை யண்ண அடைப்பொலியாகவும் உள்ளன. முன் கடை யண்ணக் ககரம் இகர உயிரியின் முன் வருசிறது. கடையண்ணக்ககரம் பிற உயிர்களின் முன் வருகிறது. இவையிரண்டும் அடுத்து வரும் உயிர்களால் கட்டுப் பட்டவை, [k] முன் உயிரின் முன் வரும். [k] பிற உயிர்களின் முன் வரும்: இரண்டும் துணை நிலை வழக்கில் வருகின்றன. இரண்டும்/k/ என்ற ஒலியனின் மாற்றொலிகள் ஆகும். வேகமாகத் தொடர்ந்து பேசும் போது ஒலியுறுப்பு கள் ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு வேகமாக மாறுகின்றன. இதனால் ஒலிகள், முன் பின் வரும் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுகின்றன.இம் மாற்றம் முயற்சிச் சுருக்கத்தினால் ஏற்படுகிறது து அனைத்து மொழிகளிலும் ஏற்பட வேண்டுமென்பதில்லை. மேற்கூறிய சான்றில் (i என்ற முன்னுயிரின் முன் வரும் கடையண்ண ஒலி முயற்சிச் சுருக்கத்தால் முன் கடையண்ண ஒலியாக மாறுகிறது. எனலாம். ஒலியொற்றுமை. (phonotic similarity) யொற்றுமை உடையவற்றை ஒலி ஓர் ஒலியனின்