பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிஃபின்‌ இழை 645

எனவே, சுட்டுப் பெயரும் வினை முற்றும் மிகையே யாகும். மயங் மயங்கொலியன். (phonemicov?rlapping) (X) என்ற ஓர் ஒலி ஒரு சூழ்நிலையில் [A) என்ற ஒலியனாகவும், வேறொரு சூழ்நிலையில் (B] என்ற ஒலியனாகவும் சிறுபான்மை தோற்றமளிக்குமானால் அது கொலியன் (partial} எனப்படும். ஒரே வகையான சூழ்நிலையில் [X] என்னும் ஒலி ஒரு போழ்தில் {A} என்ற ஒலியனாகவும் வேறு போழ்தில் (B) என்ற ஒலியனாகவும் தோற்றமளித்தால் அது முற்றிய மயங் காலியன் (complete) எனப்படும். சிறுபான்மை மயங் கொலியன்கள் சூழ்நிலையால் கட்டுண்டதால்மயக்கம் ஏற்படாது. ஆனால் முற்றிய மயங்கொலியனில் சூழ்நிலை புலப்படாது. பேச்சுத் தமிழில் ஒலிப்புடை அடைப்பான்களும் ஒலிப்பிலா அடைப்பான்களு சொல்லின் முதலில் வருகின்றன. ஆனால் மெல்லி னங்களை அடுத்து ஒலிப்புடை அடைப்பான்களே வரும். தம் தமிழ் ஒலியன்கள். ஒலியன்களை எழுதும்போது சில குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. v என்பது உயிரைக் குறிக்கும். V: என்பது நெட்டுயிர் : V என்பது குற்றுயிரையும் V என்பது மூக்குயிரையும். c மெய்யையும், N மெல்லினத்தையும், S அடைப் பொலிகளையும் (வல்லினம்), என்பன மாத்திரை யின் நீட்டத்தையும் குறிப்பிடும். மாத்திரையின் நீட்டத்துக்குத் தகுந்தவாறு புள்ளிகளின் எண்ணிக்கை கூடும். [ ] இவற்றின் உள்ளே எழுதப்படுபவை மாற்றொலிகள் ஆகும். (1 இவற்றின் உள்ளே ஒலியன்கள் எழுதப்படும். ஒரு சொல்லின் மாற்றொலி கள் [ ] என்பதற்குள் எழுதப்படும். இதில் [ ] -வின் உள்ளேயுள்ளவை மாற்றொலிகள்; மற்றவை ஒலியன் கள் ஆகும். அகவிட்டிசையை [+] சொற்களின் இடையே இடம் விட்டு எழுதிக் காட்டலாம். தொடர் விட்டிசை [.) எனவும், ஈற்று விட்டிசை {+,X] { எனவும்,சுரம் [1 2 3 4/ எனவும் குறிப்பிடப்படும். கே. என். ராமச்சந்திரன் ஒலிஃபின் இழை இது பாலி ஒலிஃபின் இழை (polyolefin fibre) என்றும் குறிப்பிடப்படுகிறது. இது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் நீள் சங்கிலித்தொடர் இழையாகும். இதன் எடையில் புரோப்பிலீன், எத்தி லீன் ஆகியவை 85% உள்ளன. ஒலிஃபின் இழைகளில் வணிகச் சிறப்பு வாய்ந் தது பாலிபுரோப்பிலீனும், பாலிஎத்திலீனும் ஆகும். பாலி (I-பியூட்டேன்), பாலி (3- மெத்தில்-1-பியூட் ஒலிஃபின் இழை 645 டேன்), பாலி (4 - மெத்தில்-1 -பென்ட்டேன்) போன்ற பல பாலி ஒலிஃபீன்களிலிருந்து இவ்விழைகள் தயா ரிக்கப்படுகின்றன. 1930 இல் குறைந்த அடர்த்தியுடைய பாலி எத்திலீனிலிருந்து முதல் பாலி ஒலிஃபின் இழைகள் இங்கிலா லாந்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இரண் டாம் உலகப்போருக்குப்பின், பாலிஎத்திலீன் ஒற்றை இழைகள் (mono filaments ) தயாரிக்கப்பட்டன. இவை தானியங்கி ஊர்திகளில் இருக்கை உறைகள் செய்வதற்குப் பயன்பட்டன. ஆனால் இவை ஊடுருவாத்தன்மைபெற்றும் நிலைப்புத்தன்மையற்றும் காணப்பட்டதால் போதிய அளவு பயன்படுத்தப்பட வில்லை. . ஒளி 1957 இல் மிகு அடர்த்தி பாலிஎத்திலீனிலிருந்து ஒலிஃபின் இழைகள் தயாரிக்கப்பட்டன. இவ்விழை கள் சிறப்பான எந்திரவியல் பண்புகளைக் கொண்டி ருந்தன. இவை கயிறு, வடம் (cable), இருக்கை போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்பட்டன். குறைந்த உருகுநிலை (130°C - 138°C), வண்ணம் ஏற்றுக்கொள்ளாத்தன்மை, குறைந்த மீட்சித் தன்மை ஆகிய பண்புகளால் அதிகமாக இவை பயன்படுத்தப் படவில்லை. எனவே புதிய பல்லுறுப்பு இழைகள் பாலி புரோப்பிலீனிலிருந்து உருவாக்கப்பட்டன. இவை மிகுந்த உருகுநிலையும் (165-175°), தேய்வுக்காப்புத் தன்மையும், சிறந்த மீட்சித்தன்மையும், இழுபடுந் தன்மையும் பெற்றுக் காணப்பட்டன. பிற செயற்கை இழைகளைவிடக் குறைந்தசெலவில் இவ்விழைகளைத் தயாரிக்க முடிந்தது. மொத்தச் செயற்கை இழை களில் 10% ஒலிஃபின் இழைகள் அமெரிக்காவில் பயன்படுகின்றன. இயற்பியல் பண்பு. நீர் உறிஞ்சாமை, குறைந்த ஒப்படர்த்தி போன்ற பண்புகளால் பாலிஎத்திலீன். பாலிபுரோப்பிலின் இழைகள் செயற்கை இழைகளி லிருந்து வேறுபடுகின்றன. வேதிப் பண்பு. ஒலிஃபின் இழைகள் நீர் எதிர்ப்புத் தன்மை உடையன. கனிம அமிலங்கள், காரங்கள், கரிமக் கரைசல்கள் போன்றவற்றால் இவை தாக்க முறுவதில்லை. அறை வெப்பநிலையில் தொழிலக வேதிப்பொருள்களாகிய சல்ஃப்யூரிக் அமிலம், நைட் ரிக் அமிலம், அசெட்டோன், எத்தில் ஆல்கஹால், அம்மோனியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றுடன் வினைபுரிவதில்லை. மிகு வெப்பநிலையில் சல்ஃப் யூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவை பாலி ஒலிஃபினின் வலிமையைக் குறைக்கின்றன. அறை வெப்பநிலையில் பாலி புரோப்பிலீன் எவ்விதக் கரைசலிலும் கரையாது. ஆனால் உயர் வெப்ப நிலையில் சில அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் களும், குளோரின் ஹைட்ரோகார்பன்களும் ஒலிஃ பின் இழைகளைக் கரைக்கின்றன.