ஒலியறிமுறை 649
3 7 ஒலியறிமுறை 649 (b) நீரைச் செங்குத்தாகத்தாக்கும் ஒலிமிதவை (c) உணர்சட்டமும் நீர் ஒலிக்கருவியும் தம் நிலைப்படுதல் 9 8 1. (i) பறக்கும் போது 5 கடலில் விடும் ஒலி மிதவை அளவி முறை. 11.5 10 சுழல் விசிறி விடுபடுதல்; 2. சுழல் விசிறி தக்க வைக்கும்சுருள்; 3. உணர் சட்டத்திலிருந்து உணர்சட்டம் தாங்கி வெளியே இழுக்கப்படுதல்; 5. வார்ப்பு அடித்தகடு; நீர்க மேல்தகடு; 6. கழுவி 7. சுழல்விசிறித்தகடுகள் மடங்கி நீரில் மூழ்குதல் 8. உணர் சட்டம் மேல் நோக்கி நிமிரதல்; 9. நீரியல் கூண்டு, 10.அடிச்சுமை வெளியேற்றம் 11. நீர் ஒலிக்கருவி. டங்களில் கடலில் விடுகின்றனர். ஒலிமிதவை செங்குத்தாக விழுவதற்கு ஏற்றவாறு அதைச் சுழல் குடை மிதவை மூலமாகக் கடலில் விடுகின்றனர். ஒலிமிதவை உணர்கம்பி antenna) நீரியல் ஒலி வாங்கி(hydrophone) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஒலிமிதவை கடலில் விழுந்ததும் கடல் நீரால் இயங்கும் மின்கலம் மின்னியல் சுற்று வேலை செய்யத் தொடங்குகிறது. அழுத்த மாறுபாட்டின் காரணமாக நீரியல் ஒலிவாங்கியில் உண்டாகும் மின்னழுத்தம் ஒலிபரப்பியில் (transmitter) பல்வேறு அலைகளை உண்டாக்குகிறது. இந்த ரேடியோ அலைக்குறியீடு விமானத்தில் கேட்கப்பட்டு நீர்மூழ்கி யின் இருப்பிடத்தை உறுதிப்படுத்துகிறது. இக் குறியீடுகள் சிலசமயங்களில் கடல்வாழ் உயிரினங்கள், அலை இயக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் உருவாகும் பக்க அலைகளால் சரியாகக் கண்டு பிடிக்க இயலாமல் தடையை ஏற்படுத்தலாம். ஒலிமிதவையின் பயன்பாட்டிற்குப் பிறகு இதைக் கண்டெடுக்க முடியாது. இது சிலநேரங்கள் நீரினுள் மூழ்கிவிடக்கூடும். ஆகவே ஒலி மிதவைகள் மிகுந்த பொருட் செலவுடன் தயாரிக்கப்படாமல், மிகு பயனுடையதாகவும் குறைந்த செலவுடையதாகவும் அமைக்கப்படுகின்றன. இக்கருவியை இதற்கு மட்டு மன்றிக்கடல்கரை பற்றி அறிய உதவும் புவி இயற் பியற் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் மைய இந்தியப் பெருங்கடல் பகுதி யில் மாங்கனீஸ் கனிம முடிச்சுகளின் அளவைக் கண்டறியவும், அப்பகுதியிலிருந்து தொடர்ந்து ஓத, அலை, காற்று, மழை முதலிய இயற்பியல் பண்பு களை அறிந்து தொடர்ந்து செய்தி அனுப்பவும் இவ்வகை ஒலி மிதவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஆழ்கடல் துளையிடும் கப்பல்களை ஏற்கனவே இட்ட துளைகளில் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் அதே துளையில் துளையிட வேண்டி அந்தக் கப்பலை அந்த இடத்திற்குச் சரியாகக் கொணர இவ்வகை ஒலி மிதவைகளை நான்கு புறமும் மிதக்கச் செய்து அவற்றின் உதவியால் கப்பல் தன் நிலையில் மாறாது நிலைத்திருக்கவும் பயன்படுத்துகின்றனர். ம.அ. மோகன் ஒலியறிமுறை ஒரு நோயாளியை ஆய்வு செய்ய கூர்ந்து நோக்கல், தொட்டுப்பார்த்தல், தட்டிப் பார்த்தல், ஒலியறி s